மெக்லாரன் நிறுவனத்தின், புதிய 675LT ஸ்பைடர் கன்வர்டிபிள் மாடல் அறிமுகம்

By Ravichandran

மெக்லாரன் ஆட்டோமோட்டிவ் நிறுவனம், தங்களின் 675LT (லாங்டெய்ல்) காரின் ட்ராப் டாப் வெர்ஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளனர். இந்த மாடல், 675LT ஸ்பைடர் என பெயரிடபட்டுள்ளது.

மெக்லாரன் உள்ளிட்ட பல்வேறு கார் நிறுவனங்கள், தொழில் நுட்ப ரீதியாக மிகவும் நவீன மயமான கார்களை அறிமுகம் செய்து வருகின்றது.

லிமிடெட் எடிஷன்;

லிமிடெட் எடிஷன்;

மெக்லாரன் கூபே கார் போன்றே, இந்த 675LT ஸ்பைடர் காரும், லிமிடெட் எடிஷன் காராக நிர்ணயிக்கபட்ட அளவிலேயே தயாரிக்கப்ட உள்ளது.

இந்த 675LT ஸ்பைடர் மாடலில் வெரும் 500 கார்கள் மட்டுமே தயாரிக்கபட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

திறன்;

திறன்;

மெக்லாரன் 675LT ஸ்பைடர் கன்வர்டிபிள், மெக்லாரனின் கூபே காரை போன்றே, 666 பிஹெச்பியையும், 700 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எடை;

எடை;

எடையை பொறுத்த வரை, மடங்க கூடிய மேற்கூரை (ஃபோல்டிங் ஹார்ட்டாப்) சேர்க்கபட்டுள்ளதால், 40 கிலோ எடை கூடியுள்ளது.

ஆனால், இந்த காரின் வடிவமைப்பு படி, அதிக அளவில் கார்பன் ஃபைபர் சேர்க்கபட்டுள்ளதால், இதன் மொத்த எடையில், அதிக அளவிலான எடை அதிகரிப்பு இல்லை.

எஞ்ஜின் திறன்;

எஞ்ஜின் திறன்;

மெக்லாரன் 675LT ஸ்பைடர், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும்.

வடிவமைப்பு;

வடிவமைப்பு;

வடிவமைப்பை பொறுத்த வரை, இந்த 675LT ஸ்பைடர் கன்வர்டிபிள், அதன் சகோதர கார் போன்றே காட்சி அளிக்கிறது.

ஆனால், இதன் மேற்கூரையை விலக்கும் போது, டிரைவர் பின்னாலும், பயணி பின்னாலும் மொத்தம் இரண்டு திமில்கள் போன்ற அமைப்புகள் விலகுவதை காணலாம்.

இது மெக்லாரன் வடிவமைப்புக்கு பெருமிதம் சேர்க்கும் விதமாக உள்ளது.

ஸ்பெஷல் பெயிண்ட் வேலைப்பாடு;

ஸ்பெஷல் பெயிண்ட் வேலைப்பாடு;

இந்த மெக்லாரன் 675LT ஸ்பைடர் கன்வர்டிபிள் மாடல், புதிய வகையிலான சோலிஸ் (ஒரு விதமான தங்க நிறம்) எனப்படும் பிரத்யேகமான பெயிண்ட் வேலைப்பாடுடன் கிடைக்கிறது.

வீல் தேர்வுகள்;

வீல் தேர்வுகள்;

ஸ்டாண்டர்ட் அம்சமாக, இந்த மெக்லாரன் 675LT ஸ்பைடர் கன்வர்டிபிள் 10-ஸ்போக் அல்லாய் வீல்களுடன் வருகின்றது.

ஆனால், வாடிக்கையாளர்கள் விருப்பபட்டால், வழக்கமான 5-ஸ்போக்கள் கொண்ட வீல்கள் அல்லது புதியதாக அறுமுகம் செய்யபட்ட 20-ஸ்போக்கள் கொண்ட வீல்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

விலை;

விலை;

மெக்லாரன் 675LT ஸ்பைடர் கன்வர்டிபிள் மாடலின் விலை, 2,85,450 பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2,56,90,500 ரூபாய்) விலையில் விற்கபடுகிறது.

மெக்லாரன் 675LT ஸ்பைடர் மாடலின் விலை, மெக்லாரன் கூபே காரின் விலையை காட்டிலும், 25,950 பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் சுமார் 23,35,500 ரூபாய்) அதிகமாக உள்ளது.

Most Read Articles
English summary
McLaren Automotive launched their new 675LT Spider Convertible Cars. This 675LT Spider Convertible (drop top version of the 675LT(Longtail)) is touted to be a limited edition model from McLaren. Just like its coupe sibling, only 500 units of the 675LT Spider model cars are to be produced.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X