எவோக் கேப்ரியோ மாடலை உற்பத்திக்கு கொண்டு செல்ல ஜேஎல்ஆர் முடிவு!

By Saravana

ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவியின் கேப்ரியோ மாடலுக்கு ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் விரைவில் பச்சைக்கொடி காட்டும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2012ம் ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் எவோக் எஸ்யூவியின் கேப்ரியோ மாடலின் கான்செப்ட் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், எவோக் எஸ்யூவிக்கு கிடைத்தது போன்ற பெரும் வரவேற்பு அதன் கேப்ரியோ மாடலுக்கும் கிடைக்கும் என ஜாகுவார் லேண்ட்ரோவர் அனுமானித்துள்ளது. இதையடுத்து, எவோக் கேப்ரியோ மாடலை உற்பத்திக்கு கொண்டு செல்ல அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜேஎல்ஆர் உறுதி

ஜேஎல்ஆர் உறுதி

எவோக் கேப்ரியோ மாடல் திட்டத்தை மிகவும் தீவிரமாக கையிலெடுத்துள்ளதை, டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வரும் ஜாகுவார் - லேண்ட்ரோவர் நிறுவனமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

கடந்த 2012ம் ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த எவோக் கேப்ரியோ மாடலின் கான்செப்ட்டிலிருந்து உருவாக்கப்பட்டாலும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அந்த கான்செப்ட் மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது. டிசைனிலும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் விற்பனைக்கு வர இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 1999சிசி டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 237 பிஎச்பி பவரையும், 340என்எம் டார்க்கையும் அளிக்கும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வரும்.

டீசல் மாடல்

டீசல் மாடல்

டீசல் மாடலில் 2,179சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 188 பிஎச்பி பவரையும், 420என்எம் டார்க்கையும் வழங்கும். இதுவும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கூடிய 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும்.

சாஃப்ட் டாப்

சாஃப்ட் டாப்

புதிய எவோக் கேப்ரியோ கார் 3 டோர் மாடல் கொண்டதாக சாஃப்ட் டாப் கூரையுடன் வருகிறது. மேலும், எஸ்யூவி ரகத்தில் ஓர் கேப்ரியோ பாடி ஸ்டைல் மாடல் என்பதும் இந்த காருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தரும் வாய்ப்பு இருக்கிறது.

 
Most Read Articles

English summary
There have been several rumours about the British manufacturer working on a cabriolet model. They had showcased a concept cabriolet based on their popular Evoque SUV. It was revealed at the 2012 Geneva Motor Show as a concept cabriolet. They have estimated its launch date for the end of 2015. 
Story first published: Friday, January 9, 2015, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X