2016 ஆட்டோ எக்ஸ்போவில், ரேன்ஜ்ரோவர் இவோக் கன்வெர்டிபிள் எஸ்யூவி காட்சிபடுத்தபடுகிறது?

By Ravichandran

ரேன்ஜ்ரோவர் இவோக் கன்வெர்டிபிள் கார், 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட உள்ளது.

ஏராளமான கார் நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை அறிமுகம் செய்த பின்னரும், பல்வேறு எக்ஸ்போகளிலும், ஆட்டோ ஷோக்களில் காட்சி படுத்தி கொண்டே இருக்கின்றனர். இப்படி, 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட உள்ள ரேன்ஜ்ரோவர் இவோக் கன்வர்டிபிள் பற்றி கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

லாஸ் ஏஞ்ஜலஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம்;

லாஸ் ஏஞ்ஜலஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம்;

ஜேஎல்ஆர் அல்லது ஜாகுவார் லேண்ட் ரோவர் என அழைக்கபடும் இந்நிறுவனம் தயாரிக்கும் ரேன்ஜ்ரோவர் இவோக் கன்வெர்டிபிள் கார், 2015 லாஸ் ஏஞ்ஜலஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.

170 நாடுகளில் விற்பனை;

170 நாடுகளில் விற்பனை;

லேண்ட்ரோவர் ரேன்ஜ்ரோவர் இவோக் கன்வெர்டிபிள் காரின் உலகளாவிய அறிமுகத்தின் போது, இது உலகின் 170 நாடுகளில் விற்கபட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ரேன்ஜ்ரோவர் இவோக் கன்வெர்டிபிள் மாடல், 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின்கள் அலுமினியத்தால் செய்யபட்டுள்ளது.

இதன் இஞ்ஜின் 9-ஸ்பீட் இசட்எஃப் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது. பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் இரண்டின் திறன் வெளிப்பாடும், வழக்கமான இவோக் மாடல் காரில் உள்ளது போன்றெ இருக்கும்.

கட்டமைப்பு;

கட்டமைப்பு;

கட்டமைப்பு ரீதியாக, இந்த ரேன்ஜ்ரோவர் இவோக் கன்வெர்டிபிள் மாடல், ஹார்ட் டாப் ஆப்ஷன் போல் இருக்காது.

எனினும், சாகசமான கார் உரிமையாளர்களுக்கு, டெர்ரெய்ன் ரெஸ்பான்ஸ் சிஸ்டத்துடன் இந்த கன்வெர்டிபிள் எஸ்யூவி வழங்கபடுகிறது. இந்த ரேன்ஜ்ரோவர் இவோக் கன்வெர்டிபிள் மாடல், ஒரு குறிப்பிட்ட அளவு வரையிலான ஆஃப்-ரோட் பிரயோகத்திற்கும் உபயோகபடுத்தபடுகிறது.

டாப் ரூஃப்;

டாப் ரூஃப்;

ரேன்ஜ்ரோவர் இவோக் கன்வெர்டிபிள் மாடல், இசட்-ஃபோல்ட் சிஸ்டம் கொண்ட சாஃப்ட் டாப் ரூஃப் (மேற்கூரை) வசதியுடன் வருகின்றது.

இந்த முழு ரூஃப்-பும் (மேற்கூரை) 18 நொடிகளில் மடங்கி கொள்ளும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளதாக ரேன்ஜ்ரோவர் நிறுவனம் கூறியுள்ளது. இந்த மேற்கூரை, மணிக்கு 48 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் இயக்கபடலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

விற்கபடும் விதம்;

விற்கபடும் விதம்;

இந்தியா சந்தைகளுக்கு, ரேன்ஜ்ரோவர் இவோக் கன்வெர்டிபிள் கார், சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதும் கட்டி முடிக்கபட்ட யூனிட்-டாக அறிமுகம் செய்யபடுகிறது.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

ரேன்ஜ்ரோவர் இவோக் கன்வெர்டிபிள் கார் வரவிருக்கும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட உள்ளது.

சர்வதேச சந்தைகளை பொருத்த வரை, இந்த ரேன்ஜ்ரோவர் இவோக் கன்வெர்டிபிள் கார் 2016 ஸ்ப்ரிங் (வசந்தகாலம்) காலத்தில் அறிமுகம் செய்யபடும்.

இந்திய சந்தைகளுக்கு, இந்த ரேன்ஜ்ரோவர் இவோக் கன்வெர்டிபிள் கார் 2016-இறுதிக்கு பின்பு தான் அறிமுகம் செய்யபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டிபிள் மாடல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

புதிய ரேஞ்ஜ் ரோவர் எவோக் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் நவம்பர் 19-ல் அறிமுகம்

இந்தியாவில் புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவிக்கு முன்பதிவு ஆரம்பம்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles

English summary
Range Rover is planning for showcasing its all-new Evoque convertible at 2016 Auto Expo. This convertible SUV is not expected to be launched in India, before the end of 2016-end. During the global launch of this Range Rover Evoque convertible SUV, it was said that, this new convertible SUV will be sold in over 170 countries.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X