புதிய ரேஞ்ஜ் ரோவர் எவோக் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் நவம்பர் 19-ல் அறிமுகம்

By Ravichandran

பொலிவு கூட்டபட்ட புதிய ரேஞ்ஜ் ரோவர் எவோக் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் நவம்பர் 19, 2015-ல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த புதிய பேபி பிரிட்டிஷ் எஸ்யூவியில் ஏராளமான அம்சங்கள் மேம்படுத்தபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இஞ்ஜினை பொறுத்த வரை, எந்த விதமான மாற்றங்களும் செய்யபடவில்லை. ரேஞ்ஜ் ரோவர் எவோக் ஃபேஸ்லிஃப்ட்-டில் அதே 2.2 லிட்டர் டீசல் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

இந்தியாவில் கிடைக்க உள்ள காரின் இஞ்ஜின் 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இது 187 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எக்ஸ்டீரியர், இண்டீரியர்;

எக்ஸ்டீரியர், இண்டீரியர்;

எக்ஸ்டீரியர் (வெளிப்புற) அமைப்பினை பொறுத்த வரை பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தபட்டுள்ளது.

புதிய பம்பர்கள், பெரிய ஏர் இன்டேக்-கள், புதிய ஃப்ரண்ட் கிரில், புதிய அல்லாய் வீல் டிசைன், அடாப்டிவ் எல்ஈடி ஹெட்லேம்ப்கள், டெய்ல் லேம்ப்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மேம்பாடுகளாக செய்யபட்டுள்ளன.

இண்டீரியர் (உட்புற) அமைப்பை பொருத்த வரை, சாஃப்ட் டச் மெடீரியல்கள் கொண்ட புதிய சீட்கள், டோர் கேஸ்டிங்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளன.

பொழுதுபோக்கு அம்சங்கள்;

பொழுதுபோக்கு அம்சங்கள்;

பொழுதுபோக்கு அம்சங்களாக, பயணிகளுக்கு லேண்ட்ரோவர் 8-இஞ்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், இன்கண்ட்ரோல் டச், டிஎஃப்டி டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இந்தியாவில் கிடைக்கும் மாடலில், ஹாண்ட்ஸ்-ஃப்ரீ டெய்ல்கேட் ஆபரேஷன், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, (ஹெச்யூடி), ஸரௌண்ட் கேமரா சிஸ்டம், 17-ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், ரீயர் சீட் எண்டெர்டெய்ன்மண்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகிறது.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

இந்த எஸ்யூவியில் ஆல்-டெர்ரெய்ன் ப்ராக்ரஸ் கண்ட்ரோல் (ஏடிபிசி) வசதியும் உள்ளது.

பாதுகாப்பு அம்சங்களாக லேன் - கீப்பிங் அசிஸ்ட், அடானமஸ் எமெர்ஜென்சி பிரேகிங், ட்ரௌஸி டிரைவர் வார்னிங் (டிரைவர் உறங்கினால் சமிஞ்சை கொடுக்கப்படும் வசதி) உள்ளிட்ட பல வசதிகள் ஸ்டாண்டர்ட் அம்சங்களாக வழங்கப்படுகின்றன.

விலை;

விலை;

பொலிவு கூட்டபட்ட புதிய ரேஞ்ஜ் ரோவர் எவோக் ஃபேஸ்லிஃப்ட் ரூபாய் 57 லட்சம், ஆன் - ரோட் (டெல்லி) விலையில் கிடைக்கின்றது.

Most Read Articles

English summary
Range Rover Evoque Facelift India Launch is on 19th November, 2015. The updated version of the baby British SUV will receive significant exterior upgrades.
Story first published: Tuesday, November 3, 2015, 11:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X