சென்னை வெள்ள நிவாரணத்திற்கு ரெனோ - நிஸ்ஸான் கூட்டணி 1 கோடி ரூபாய் உதவி

By Ravichandran

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத்திற்காக, ரெனோ - நிஸ்ஸான் கூட்டணி 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர்.

சமீபத்தில், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளத்தால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர், மேலும் ஆயிரகணக்கான பாதிக்கபட்டுள்ளனர்.

இதற்காக, ஏராளமான நிறுவனங்களும், தனி நபர்களும், மக்களுக்கு ஏராளமான உதவிகளை நேரடியாகவும், அரசு மூலமாகவும் வழங்கி வருகின்றனர்.

பல்வேறு அரசு சாரா சமூக சேவை மையங்கள் ரெனோ - நிஸ்ஸான் கூட்டணியை வெள்ள நிவாரண உதவி தொடர்பாக சந்தித்து வருகின்றனர். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தபட்டு வருகின்றது.

ரெனோ - நிஸ்ஸான் கூட்டணி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரண உதவிக்கு 1 கோடி ரூபாய் வழங்கியுள்ள நிலையில், இந்த நிறுவனங்களின் ஊழியர்களும் இந்த பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர்.

மீட்பு மற்றும் வெள்ள நிவாரண முயற்சிகளுக்கு ஊழியர்களும் தங்களால் ஆன உதவிகளை வழங்கி வருகின்றனர். அரசு செய்து வரும் நிவாரண பணிகளுக்கு, இத்தகைய நிறுவனங்களின் உதவிகள் கூடுதல் வலுவை சேர்க்கிறது.

இதோடு மட்டுமல்லாமல், ரெனோ - நிஸ்ஸான் கூட்டணி சார்பாக, தமிழக அரசின், ஜாய்ண்ட் டைரகடர் ஆஃப் இண்டஸ்ட்ரியல் ஹெல்த் மற்றும் சேஃப்டி அலுவலகத்திற்கும் (தொழில்துறைட்யினர் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு இணை இயக்குநர் அலுவலகம்), 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர்.

renault-nissan-donate-1-crore-rupees-for-chennai-floods-relief-work

மேலும், ரெனோ - நிஸ்ஸான் கூட்டணி சார்பாக, வெள்ள நிவாரண உதவிகளுக்கு, லயன்ஸ் கிளப்-பிற்கும் நன்கொடைகள் வழங்கபட்டுள்ளது.

இதையெல்லாம் தாண்டி, தங்கள் தயாரிப்பு மையங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகில், வசித்து வரும் பாதிக்கபட்ட மக்களுக்கும் உதவிகளை நேரடியாக வழங்கி வருகின்றனர். இந்த 2 நிறுவனங்களால் வழங்கபட்ட உதவிகள், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்தபட்டு வருகின்றது.

சென்னை மற்றும் இதர பகுதிகளில் பாதிக்கபட்ட மக்கள் சகஜ நிலைக்கு திரும்ப ரெனோ - நிஸ்ஸான் நிறுவனங்கள் தங்களால் ஆன சேவைகளை வழங்கி வருகின்றனர்.

Most Read Articles
English summary
Renault-Nissan Alliance has come forward and donated Rs. 1 crore to Tamil Nadu Chief Minister's Public Relief Fund. Apart from this, both these manufacturers have also formed a dedicated employee relief fund for flood affected victims in Chennai. Apart from this, helps are also offered to other neighbouring areas, which got affected by heavy rains.
Story first published: Wednesday, December 16, 2015, 12:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X