"செலெரியோ In, சிட்டி Out"! பிப்ரவரியில் டாப்- 10 கார்கள்!

By Saravana

கடந்த மாத விற்பனையில் வழக்கம்போல் டாப் 10 பட்டியலில் முதல் 4 இடங்களும் மாருதியின் தயாரிப்புக்குதான். கடைசி இடத்திலும் மாருதி தயாரிப்புதான். எனவே, மீதமுள்ள 5 இடங்களுக்குத்தான் போட்டி.

அதில், எந்தெந்த கார்கள் எந்தெந்த இடங்களை பிடித்தன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கடந்த மாதம் டாப் - 10 பட்டியலில் இருந்து ஹோண்டா சிட்டி வெளியேற்றப்பட்டது. இருந்தாலும், அந்த செக்மென்ட்டில், அதுதான் விற்பனையில் சிறந்த மாடல். பிப்ரவரியில் டாப் 10 கார்களை ஸ்லைடரில் காணலாம்.


10. மாருதி செலெரியோ

10. மாருதி செலெரியோ

கடந்த மாதம் டாப் 10 பட்டியலில் ஏறிவிட்டது மாருதி செலெரியோ. கடந்த மாதத்தில் 6772 செலெரியோ கார்கள் விற்பனையாகியுள்ளன. ஜனவரியில் சியாஸ் இடத்தை தற்போது மாருதி செலெரியோ பெற்றிருக்கிறது.

9. ஹோண்டா அமேஸ்

9. ஹோண்டா அமேஸ்

ஜனவரியை போலவே, 9வது இடத்தை ஹோண்டா அமேஸ் தக்க வைத்தது. கடந்த மாதம் 7,163 அமேஸ் கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. ஹோண்டாவுக்கு மிகச்சிறந்த பங்களிப்பை அமேஸ் தொடர்ந்து வழங்கி வருகிறது.

8. ஹூண்டாய் இயான்

8. ஹூண்டாய் இயான்

ஜனவரியை போலேவே தொடர்ந்து பிப்ரவரியிலும் 8வது இடத்தை ஹூண்டாய் இயான் பிடித்தது. கடந்த மாதம் 7200 இயான் கார்கள் விற்பனை செய்யப்பட்டன.

7.மஹிந்திரா பொலிரோ

7.மஹிந்திரா பொலிரோ

கடந்த ஜனவரி மாதத்தை போன்ற பிப்ரவரியிலும் 7வது இடத்தை மஹிந்திரா பொலிரோ பெற்றது. கடந்த ஜனவரி மாதத்தில் 8,515 பொலிரோ எஸ்யூவிகளை மஹிந்திரா விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த மாதத்தில் 8,607 பொலிரோ எஸ்யூவிகள் விற்பனையாகின.

6.ஹூண்டாய் கிராண்ட் ஐ10

6.ஹூண்டாய் கிராண்ட் ஐ10

கடந்த ஜனவரியில் பெற்ற அதே இடத்தை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 பெற்றது. கடந்த மாதத்தில் 8,687 கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

5. ஹூண்டாய் எலைட் ஐ20

5. ஹூண்டாய் எலைட் ஐ20

ஹூண்டாய் எலைட் ஐ20 கார் விற்பனையில் மிகச்சிறப்பான பங்களிப்பை அந்த நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது. கடந்த மாதம் 10,264 எலைட் ஐ20 கார்களை ஹூண்டாய் கார் நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதத்தைவிட பிப்ரவரியில் ஹூண்டாய் எலைட் ஐ20 விற்பனை அதிகம்.

4.மாருதி வேகன் ஆர்

4.மாருதி வேகன் ஆர்

கடந்த மாதம் தனது ஆஸ்தான 4வது இடத்தை தக்க வைத்தது வேகன் ஆர். கடந்த மாதம் 14,315 வேகன் ஆர் கார்களை மாருதி விற்பனை செய்திருக்கிறது.

 3. மாருதி டிசையர்

3. மாருதி டிசையர்

கடந்த மாதம் மூன்றாவது இடத்தை மாருதி டிசையர் பெற்றது. புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட டிசையர் விற்பனைக்கு வருகை தரும் என்ற செய்தியால் பெரிய அளவில் விற்பனை பாதிக்கப்படவில்லை. ஏனெனில், கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்ட அனைத்து டிசையர் கார்களுமே பழைய மாடல்கள்தான். கடந்த மாதம் 17085 டிசையர் கார்களை மாருதி விற்பனை செய்தது.

2. மாருதி ஸ்விஃப்ட்

2. மாருதி ஸ்விஃப்ட்

கடந்த மாதம் 2வது இடத்தை மாருதி ஸ்விஃப்ட் பெற்றது. கடந்த மாதம் 19546 ஸ்விஃப்ட் கார்களை மாருதி விற்பனை செய்திருந்தது.

1. மாருதி ஆல்ட்டோ

1. மாருதி ஆல்ட்டோ

மாருதி ஆல்ட்டோ கார்தான் நம்பர்1 இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 25,673 ஆல்ட்டோ கார்களை மாருதி விற்பனை செய்திருந்தது. பட்ஜெட் பயத்தால் ஆல்ட்டோ விற்பனை நல்ல எண்ணிக்கையை பதிவு செய்தது.

Most Read Articles
English summary

 Let’s take a look at top 10 cars that sold the most in February 2015.
Story first published: Monday, March 9, 2015, 16:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X