ஆகஸ்ட் விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார்கள்!!

By Saravana

புதிய மாடல்களின் வரவு இந்தியாவின் டாப் 10 கார் பட்டியலின் பின்பகுதியை வெகுவாக மாற்றிக் கொண்டே வருகிறது. இதுவரை நிலைந்திருந்த சில மாடல்கள் பட்டியலை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், அந்த இடங்களை புதிய மாடல்கள் நிரப்பி வருகின்றன.

அதேநேரத்தில், டாப் 10 பட்டியலின் முதல் 5 இடங்களில் அதிக மாற்றங்களை தராமல், சில மாடல்கள் தங்களது இடங்களை கெட்டியாக பிடித்து அசத்தி வருகின்றன. கடந்த மாத விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்து அசத்திய கார் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

10. ஃபோர்டு ஆஸ்பயர்

10. ஃபோர்டு ஆஸ்பயர்

கடந்த ஜூலையில் விற்பனைக்கு வந்த ஃபோர்டு ஆஸ்பயர் பட்டியலில் 10வது இடத்தை பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 5,176 ஃபோர்டு ஆஸ்பயர் கார்களை விற்பனை செய்திருப்பதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நவீன தொழில்நுட்ப வசதிகள், மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்கள், டிசைன் ஆகியவை இந்த காருக்கான விற்பனையை நல்ல முறையில் எடுத்துச் சென்றுள்ளது. இந்த புதிய காம்பேக்ட் செடானின் வரவு பல மாடல்களுக்கு நெருக்கடியை தந்தாலும், தொடர்ந்து இந்த விற்பனை எண்ணிக்கையை ஃபோர்டு ஆஸ்பயர் தக்க வைக்குமா என்பதை வரும் மாதங்களின் விற்பனை எண்ணிக்கையை வைத்து பார்க்கலாம்.

09. ஹோண்டா ஜாஸ்

09. ஹோண்டா ஜாஸ்

கடந்த மாதம் 9வது இடத்தை புதிய ஹோண்டா ஜாஸ் கார் பிடித்திருக்கிறது. கடந்த மாதம் 5,404 ஹோண்டா ஜாஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. பெட்ரோல் மட்டுமின்றி, டீசல் மாடலிலும் புதிய ஹோண்டா ஜாஸ் கார் வந்திருப்பதே, விற்பனை சிறப்பாக இருப்பதற்கு காரணமாக கூறலாம். ஆனால், ஜூலை மாதத்தைவிட ஆகஸ்ட்டில் விற்பனை குறைந்திருப்பதையும் கூற வேண்டியிருக்கிறது.

08. ஹோண்டா சிட்டி

08. ஹோண்டா சிட்டி

கடந்த மாதம் பட்டியலில் 8வது இடத்தில் புதிய ஹோண்டா சிட்டி கார் இருக்கிறது. மிட்சைஸ் செக்மென்ட்டில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் ஹோண்டா சிட்டி விற்பனை கடந்த மாதம் 5,405 என்ற எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள், தரமான பாகங்கள், அழகான டிசைன் போன்றவை இந்த காரை தொடர்ந்து முன்னிலை பெற செய்து வருகிறது.

07. மாருதி செலிரியோ

07. மாருதி செலிரியோ

மாருதி செலிரியோ காரின் விற்பனைக்கு, சில மாதங்களுக்கு முன் வந்த டீசல் மாடலின் வரவும் முக்கிய காரணமாகியுள்ளது. கடந்த மாதம் 7,927 செலிரியோ கார்கள் விற்பனையாகி அசத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, விற்பனை 19 சதவீதம் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் விலையில் டீசல் மாடல் வாங்க ஆசைப்படுவோர்க்கு சிறந்த சாய்ஸாக இருந்து வருகிறது.

 06. ஹூண்டாய் எலைட் ஐ20

06. ஹூண்டாய் எலைட் ஐ20

கடந்த மாதம் 8,521 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, கடந்த மாதம் விற்பனை 29 சதவீதம் உயர்ந்திருக்கிறது. டிசைன், வசதிகளுக்காகவே இந்த காரின் விற்பனை மிகச்சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

 05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

கடந்த மாதம் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் பட்டியலில் 5வது இடத்தை பிடித்தது. கடந்த மாதம் 10,255 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்களை விற்பனை அசத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், கடந்த மாத விற்பனை 54 சதவீதம், அதாவது 50 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

04. மாருதி வேகன் ஆர்

04. மாருதி வேகன் ஆர்

நான்காவது இடத்தை மிக கெட்டியாக பிடித்து வைத்திருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 13,133 வேகன் ஆர் கார்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் 14,648 வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இது 12 சதவீத உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

03. மாருதி ஸ்விஃப்ட்

03. மாருதி ஸ்விஃப்ட்

கடந்த மாதம் 3வது இடத்தை மாருதி ஸ்விஃப்ட் தக்க வைத்தது. கடந்த மாதம் 16,811 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிசைன், மைலேஜ், கையாளுமை என பல விதத்திலும் வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு மிகச்சிறந்த மாடல் என்ற பெருமையுடன் விற்பனையிலும் சாதித்து வருகிறது.

02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

கடந்த ஜூலை மாதம் விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 இடத்தில் இருந்த மாருதி டிசையர் விற்பனை கடந்த மாதம் தடாலடியாக சரிந்தது. மோசமான எண்ணிக்கை என்று கூற முடியாவிட்டாலும், ஜூலை மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், விற்பனை கடுமையாக சரிந்தது. கடந்த மாதம் 18,718 டிசையர் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. ஃபோர்டு ஆஸ்பயர் வரவு காரணமாக, இந்த காரின் விற்பனையில் சிறிது சரிவு காணப்படுவதாக தெரிகிறது.

 01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

மீண்டும் முதலிடத்துக்கு வந்துவிட்டது மாருதி ஆல்ட்டோ. கடந்த மாதம் 23,017 ஆல்ட்டோ கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. குறைவான விலை, சிக்கனமான பராமரிப்பு செலவு, மாருதியின் சிறப்பான சர்வீஸ் கட்டமைப்பு போன்றவை இந்த காரின் விற்பனையை தூக்கிப் பிடித்து வருகிறது.

Most Read Articles
English summary
Take a look at how carmakers fared in August 2015 with sales of passenger cars.
Story first published: Monday, September 7, 2015, 14:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X