அராய் அமைப்பு சார்பாக புதிய ஹோமோலோகேஷன் அண்ட் டெக்னாலஜி செண்டர் துவக்கம்

By Ravichandran

அராய் அமைப்பு புதிய ஹோமோலோகேஷன் அண்ட் டெக்னாலஜி செண்டரை பூனேவில் துவங்கியுள்ளது.

அராய் என்பது ஆட்டோமோடிவ் ரிசர்ச் அசோஸியேஷன் ஆஃப் இந்தியா என்பதை குறிக்கிறது. தங்கள் அமைப்பு சார்பாக, ஆராய் பூனேவின் அருகே உள்ள சகன் என்ற இடத்தில் புதிய ஹோமோலோகேஷன் அண்ட் டெக்னாலஜி செண்டரை துவங்கியுள்ளது. இந்த செண்டரானது, இந்தியாவின் மிக முக்கியமான ஆட்டோமோடிவ் உற்பத்தி மையங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

அராய் அமைப்பு தங்களின் பொன்விழாவை கொண்டாடியது. இந்த புதிய ஹோமோலோகேஷன் அண்ட் டெக்னாலஜி செண்டரின் திறப்பு, இந்த பொன்விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமைந்தது.

இந்த புதிய ஹோமோலோகேஷன் அண்ட் டெக்னாலஜி செண்டரானது, மஹாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்களால் துவக்கபட்டது. இந்த நிகழ்ச்சியில், கனரக தொழில் மற்றும் பொதுதுறை நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் ஆனந்த் கீதே-வும் பங்கேற்றார்.

இந்த ஹோமோலோகேஷன் அண்ட் டெக்னாலஜி செண்டரை அமைக்க 370 கோடி ரூபாய் முதலீடு தேவைபட்டது. அதில், ஆராய் அமைப்பு 270 கோடி ரூபாயையும், நேட்ரிப் எனப்படும் அமைப்பு 100 கோடி ரூபாயையும் முதலீடு வழங்கியுள்ளது.

இந்த புதிய செண்டர், நேட்ரிப் அல்லது நேஷனல் ஆட்டோமோடிவ் டெஸ்டிங் அண்ட் ஆர் அண்ட் டி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிராஜக்ட் என்பதை குறிக்கிறது.

ஆட்டோமோடிவ் துறைக்கு தேவையான அனைத்து சமீபத்திய உபகரணங்களையும் கொண்டுள்ள, உயரிய தொழில்நுட்பங்கள் நிறைந்த மையமாக திகழும் என அராய் உறுதி அளித்துள்ளது. இந்த ஹோமோலோகேஷன் அண்ட் டெக்னாலஜி செண்டரில், ஆட்டோமோடிவ் எலக்ட்ரானிக்ஸ் லெபாரட்ரி, பவர்ட்ரெய்ன் லெபாரட்ரி, பாஸ்ஸிவ் ஃசேப்டி லெபாரட்ரி, மெட்டிரியல்ஸ் அண்ட் ஃபேட்டிக் லெபாரட்ரி உள்ளிட்ட உயரிய வசதிகளை கொண்டுள்ளது.

arai-homologation-and-technology-centre-pune

ஒவ்வொரு லெபாரட்ரிகளும், ஆட்டோமோடிவ் துறையின் பல்வேறு வகையிலான தேவைகளை பூர்த்தி செய்யும். இந்த ஹோமோலோகேஷன் அண்ட் டெக்னாலஜி செண்டர் மிக சரியாக பூனே அருகில் உள்ள சகன்-ல் அமைந்துள்ளது.

இந்திய அரசாங்கம், மாசு வெளிப்பாடு தொடர்பான நெறிமுறைகளில் கடுமையாக மாறி கொண்டே இருக்கிறது. எரிபொருள், மாசுவெளிப்பாடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு உயர் முன்னுரிமை வழங்கி, அவற்றை தொடர்ந்து உறுதி செய்து கொண்டே இருப்பதில், இந்த ஹோமோலோகேஷன் அண்ட் டெக்னாலஜி செண்டர் மிக முக்கிய பங்கு ஆற்ற உள்ளது.

Most Read Articles

English summary
ARAI has inaugurated the new Homologation & Technology Centre In Pune. ARAI is the short form of Automotive Research Association of India. This all-new Homologation and Technology Centre is situated in Chakan near Pune. This centre is situated right at the epicentre of the India's automotive manufacturing hub.
Story first published: Friday, January 8, 2016, 11:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X