பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்தியாவின் டாப் 6 கார்கள்!

By Saravana

அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பு தரம் சர்வதேச தர நிர்ணயங்களின் அளவுக்கு மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக, மேலை நாடுகளில் உள்ளது போன்ற கிராஷ் டெஸ்ட் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதை மனதில் கொண்டு பல நிறுவனங்கள் தற்போதே, கார்களில் கூடுதல் பாதுகாப்பு வசதியை வழங்கத் துவங்கியிருக்கின்றன. இந்தநிலையில், தற்போது விற்பனையில் இருக்கும் கார்களில் அதன் ரகத்தில் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கும் சில முன்னணி கார் மாடல்களின் விபரங்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

01. ஃபோர்டு ஆஸ்பயர்

01. ஃபோர்டு ஆஸ்பயர்

ஃபோர்டு கார்கள் சிறந்த கட்டமைப்புக்கு பெயர் பெற்றவை. ஃபோர்டு கார்களில் வலுவான, தரமுடைய பாடி பேனல்கள் பயன்படுத்துவது உங்களுக்கு தெரிந்த விஷயம். கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஃபோர்டு ஆஸ்பயர் கார், காம்பேக்ட் செடான் கார் செக்மென்ட்டில் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது. ஃபோர்டு ஆஸ்பயர் காரில் இருக்கும் பெரிமீட்டர் அலாரம் மூலமாக, யாரேனும் காரை உடைத்து உள்ளே அத்துமீறி நுழைய முயன்றால், அலாரம் மூலமாக எச்சரிக்கும். இந்த காரில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமா...

 ஆஸ்பயர் பாதுகாப்பு வசதிகள்

ஆஸ்பயர் பாதுகாப்பு வசதிகள்

அத்துடன், மலைப்பாங்கான சாலைகளில் ஏறும்போது கார் பின்னோக்கி வருவதை தவிர்க்கும் ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் சிஸ்டம், அதிக நிலைத்தன்மையை வழங்கும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்ளன. மேலும், இந்த காரில் அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரியாக பிரித்து செலுத்தும் இஎஸ்பி தொழில்நுட்பத்துடன் இணைந்து ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஃபோர்டு ஆஸ்பயர் காரில் கொடுக்கப்படம் மைகீ என்ற ஸ்மார்ட் சாவி மூலமாக, வேறு நபர்கள் காரை எடுத்துச் செல்லும்போது காரின் அதிகபட்ச வேகத்தை நிர்ணயித்து அனுப்ப முடியும். விபத்து ஏற்பட்டால் எரிபொருள் சப்ளையை நிறுத்திவிடும் வசதி இருப்பதுடன், தானியங்கி முறையில் அருகிலுள்ள அவசர மையத்திற்கு தொடர்பு கொண்டு காரின் இருப்பிடத்தை தெரிவிக்கும். இதன்மூலமாக விரைவான உதவியை காரில் இருப்பவர்களுக்கு கிடைக்கும்.

 02. ஹூண்டாய் எலைட் ஐ20

02. ஹூண்டாய் எலைட் ஐ20

விற்பனையில் சக்கைபோடு போட்டு வரும் ஹூண்டாய் எலைட் ஐ20 காரும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை இடம்பெற்று இருக்கின்றன.

கூடுதல் பாதுகாப்பு வசதிகள்

கூடுதல் பாதுகாப்பு வசதிகள்

இருள் வந்தால் தானாக எரியும் ஹெட்லைட்டுகள், பவர் விண்டோ மூடும்போது கை மாட்டிக் கொண்டால் தானாக திறந்துவிடும் ஆன்ட்டி பின்ச் ரோல் வசதி, மழையை உணர்ந்து செயல்படும் ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் உள்ளன. ரியர் பார்க்கிங் அசிஸ்ட் சிஸ்டம் போன்றவையும் முக்கியமானவை. தவறுதலாக ஆக்சிலரேட்டையும், பிரேக் பெடலையும் அழுத்திவிட்டால், பிரேக் பெடல் மட்டுமே செயலாற்றும் ஸ்மார்ட் பெடல் சிஸ்டமும் உண்டு.

03. ஃபோக்ஸ்வேகன் போலோ

03. ஃபோக்ஸ்வேகன் போலோ

சிறந்த கட்டுமானத் தரம் கொண்ட கார் ஃபோக்ஸ்வேகன் போலோ. இந்த காரும் பேஸ் மாடலிலிருந்து பல்வேறு சிறப்பான பாதுகாப்பு வசதிகளை அளிக்கிறது. இந்த காரில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், ஏர்பேக்கும் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்று இருக்கின்றன.

கூடுதல் பாதுகாப்பு வசதிகள்

கூடுதல் பாதுகாப்பு வசதிகள்

தடம் மாறுவதை எச்சரிக்கும் வசதி, ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர், கண்ணாடி ஜன்னல்களை உயர்த்தும்போது தடை இருந்தால் உணர்ந்து திறந்து கொள்ளும் ஆன்ட்டி பின்ச் ரோல் வசதியும் உள்ளது.

04. ஹூண்டாய் க்ரெட்டா

04. ஹூண்டாய் க்ரெட்டா

இந்தியாவின் பிளாக் பஸ்டர் மாடலான ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த காரில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் கன்ட்ரோல், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.

கூடுதல் பாதுகாப்பு வசதிகள்

கூடுதல் பாதுகாப்பு வசதிகள்

மலைச் சாலைகளில் ஓட்டுவதற்கு ஏதுவான ஹில் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் அசிஸ்ட், தடம் மாறுதலை எச்சரிக்கும் லேன் சேஞ்ச் இன்டிகேட்டர் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

05. டொயோட்டா லிவா

05. டொயோட்டா லிவா

டொயோட்டா நிறுவனம் தனது அனைத்து கார் மாடல்களிலும் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக வழங்குகிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்

கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஹெட்லைட் எரிவதை எச்சரிக்கும் வசதி, சீட் பெல்ட் ரீமைன்டர் உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.

06. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

06. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

இரண்டு நாட்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு முதல் 24 மணிநேரத்தில் 2,800 புக்கிங்குகளை பெற்றுள்ளதாம். மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு முன்பதிவு அதிகளவில் வர பல காரணங்கள் இருந்தாலும், அதில் இடம்பெற்றிருக்கும் பாதுகாப்பு அம்சங்களும் முக்கிய காரணம். ஆம், அடுத்த ஆண்டு இந்தியாவில் அமலுக்கு வர இருக்கும் பாதுகாப்பு தர அம்சங்களுடன் வந்திருக்கும் முதல் கார் என்று மாருதி குறிப்பிடுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் கட்டுமானத் தரம் சிறப்பானது என மாருதி தெரிவிக்கிறது. அத்துடன், பேஸ் மாடல்களிலிருந்தே ஆப்ஷனலாக டியூவல் ஏர்பேக்குகளும், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் வழங்கப்பட்டு இருக்கிறது. ரியர் பார்க்கிங் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், விபத்துக்களின்போது மோதல் தாக்கத்தை உறிஞ்சி பயணிகளை பாதுகாக்கும் சுஸுகி டிஇசிடி பாடி பேனல்கள் கொண்ட கட்டமைப்பு உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

Most Read Articles
English summary
Are we safe in our cars? Let us look at top 5 cars - in no particular order - with the best safety features.
Story first published: Thursday, March 10, 2016, 16:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X