பிஎம்டபுள்யூ ஐ8 ஹைப்ரிட் காரை, முழுமையான எலக்ட்ரிக் காராக மாற்ற பிஎம்டபுள்யூ மும்முரம்

By Ravichandran

பிஎம்டபுள்யூ நிறுவனம், தங்களின் ஐ8 ஹைப்ரிட் காரை, முழுமையான எலக்ட்ரிக் காராக மாற்றும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பிஎம்டபுள்யூ ஐ8 ஹைப்ரிட்...

பிஎம்டபுள்யூ ஐ8 ஹைப்ரிட்...

பிஎம்டபுள்யூ ஐ8 ஹைப்ரிட், ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் பிஎம்டபுள்யூ நிறுவனத்தால் வழங்கப்படும் கார் ஆகும்.

தற்போதைய நிலையில், பெட்ரோல் இஞ்ஜின்-எலக்ட்ரிக் மோட்டார் கொண்ட ஹைப்ரிட் மாடலாக விற்கப்படும் இந்த ஐ8 ஹைப்ரிட் மாடலை, பிஎம்டபுள்யூ நிறுவனம் முழுவதுமான எலக்ட்ரிக் காராக மாற்ற திட்டம் கொண்டுள்ளனர். இதற்காக, ஒரு புரோட்டோ டைப் மாடலை வடிவமைத்து வருகின்றனர்.

எலக்ட்ரிக் மோட்டார்கள்;

எலக்ட்ரிக் மோட்டார்கள்;

பிஎம்டபுள்யூ நிறுவனம் இந்த ஐ8 காரில் உள்ள பெட்ரோல் இஞ்ஜின்-எலக்ட்ரிக் மோட்டார் ஆகியவற்றை நீக்கிவிட்டு, ஒரு பெரிய பேட்டரி மற்றும் 3 சக்திவாய்ந்த எலக்ட்ரிக் மோட்டார்களை பொருத்த உள்ளது.

விரிவாக்கம்;

விரிவாக்கம்;

பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் ஐ டிவிஷன் என்ற பிரவு தான், இந்த ஐ8 மாடல் கார்களை டிசைன் செய்து, உருவாக்கி வருகிறது.

இந்த பிஎம்டபுள்யூ ஐ டிவிஷன், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு, தற்போது உள்ள மாடல்களை காட்டிலும், கூடுதல் மாடல்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

எடை;

எடை;

திட்டமிடப்பட்டு வரும் இந்த பிஎம்டபுள்யூ ஐ8 எலக்ட்ரிக் கார், தற்போது உள்ள மாடலை காட்டிலும் கூடுதலான எடை கொண்டதாக இருக்காது.

தற்போதைய பிஎம்டபுள்யூ ஐ8 ஹைப்ரிட் மாடலின் எடை சுமார் 1485 கிலோகிராம் என்ற அளவில் இருக்கும்.

ரேஞ்ச்;

ரேஞ்ச்;

பிஎம்டபுள்யூ ஐ8 எலக்ட்ரிக் காரை, ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 400 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும்.

மோட்டார் அமைப்பு;

மோட்டார் அமைப்பு;

பிஎம்டபுள்யூ ஐ8 எலக்ட்ரிக் கார், 3 புதிய பிரஷ்லஸ் (பிரஷ்கள் இல்லாத) மோட்டார் கொண்டிருக்கும். இதன் 1 மோட்டார் முன் பகுதியலும், 2 மோட்டார்கள், தற்போது 3 சிலிண்டர்கள் உடைய 1.5 லிட்டர் பெட்ரோல் யூனிட் பொருத்தப்பட்டுள்ள பின் பகுதியில், பொருத்தப்படும்.

தொடரும் பாரம்பரியம்;

தொடரும் பாரம்பரியம்;

தங்களின் உயர்ந்த ரெவ்விங் கம்பஸ்ஷன் இஞ்ஜினின் (high-revving combustion engine) பாரம்பரியம் தொடர்ந்து கட்டி காக்கப்படும் என்றும், இதனால் பிஎம்டபுள்யூ ஐ8 எலக்ட்ரிக் காரின் மோட்டார் அளவு சிறியதாக கூட காட்சி அளிக்கலாம் என பிஎம்டபுள்யூ நிறுவனம் தெரிவிக்கிறது.

செயல் திறன்;

செயல் திறன்;

தற்போதைய நிலையில், பெட்ரோல் இஞ்ஜின்-எலக்ட்ரிக் மோட்டார் கொண்ட ஹைப்ரிட் மாடலின் கூட்டு திறன் வெளிப்பாடு 362 பிஹெச்பியாக உள்ளது.

எனினும், இந்த முழுமையான பிஎம்டபுள்யூ ஐ8 எலக்ட்ரிக் காரின் மூலம் எவ்வளவு திறன் வெளியாகும் என்று அதிகார்பபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த பிஎம்டபுள்யூ ஐ8 எலக்ட்ரிக் கார் திதடத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து படி, ஒவ்வொரு எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்தும் சுமார் 272 பிஹெச்பி திறன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோதனைகள்;

சோதனைகள்;

பிஎம்டபுள்யூ நிறுவனம், முந்தைய மாடலை காட்டிலும் கூடுதல் திறன் கொண்ட தங்களின் பொலிவு கூட்டப்பட்ட ஐ8 காரின் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அறிமுகம்;

அறிமுகம்;

பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் பொலிவு கூட்டப்பட்ட ஐ8 மாடல், 2017-ல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருங்காலத்தின் போக்கு;

வருங்காலத்தின் போக்கு;

உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள், முழுமையான எலக்ட்ரிக் காரை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், பிஎம்டபுள்யூ நிறுவனமும் இந்த பாதையை நோக்கி செல்வது ஆச்சர்யப்பட கூடிய விஷயம் அல்ல.

புதிய பிஎம்டபுள்யூ ஐ8 எலக்ட்ரிக் கார், ஃபார்முலா இ ரேசிங்கில் உள்ள சேஃப்டி காருக்கு பின்தோன்றல் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் கார் வாங்கி சென்னைக்கு பெருமை சேர்த்த 'தல' அஜீத்!!

ஐ8 தொடர்புடைய செய்திகள்

ஹைப்ரிட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

பிஎம்டபுள்யூ ஐ8 - கூடுதல் படங்கள்

பிஎம்டபுள்யூ ஐ8 - கூடுதல் படங்கள்

பிஎம்டபுள்யூ ஐ8 - கூடுதல் படங்கள்

பிஎம்டபுள்யூ ஐ8 - கூடுதல் படங்கள்

பிஎம்டபுள்யூ ஐ8 - கூடுதல் படங்கள்

பிஎம்டபுள்யூ ஐ8 - கூடுதல் படங்கள்

பிஎம்டபுள்யூ ஐ8 - கூடுதல் படங்கள்

பிஎம்டபுள்யூ ஐ8 - கூடுதல் படங்கள்

பிஎம்டபுள்யூ ஐ8 - கூடுதல் படங்கள்

பிஎம்டபுள்யூ ஐ8 - கூடுதல் படங்கள்

பிஎம்டபுள்யூ ஐ8 - கூடுதல் படங்கள்

பிஎம்டபுள்யூ ஐ8 - கூடுதல் படங்கள்

பிஎம்டபுள்யூ ஐ8 - கூடுதல் படங்கள்

பிஎம்டபுள்யூ ஐ8 - கூடுதல் படங்கள்

பிஎம்டபுள்யூ ஐ8 - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
German car manufacturer BMW is looking to build prototype of an all-electric i8 which will phase off from petrol-electric hybrid to an all-electric vehicle in coming future. Proposed BMW i8 all-electric will not weigh more than current model which is at 1485kgs. This new car will be powered by three new brushless electric motors for i8. To know more, check here...
Story first published: Monday, June 27, 2016, 16:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X