ஆகஸ்ட் மாதத்தில் அசத்தலான சலுகைகள் வழங்கும் செவர்லே

By Ravichandran

செவர்லே இந்தியா நிறுவனம், இந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்களின் கார் மாடல்கள் மீது அசத்தலான சலுகைகளை அளிக்கின்றனர்.

கார் நிறுவனங்கள், வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றனர். இச்சலுகைகள், விற்பனையை கூட்டவும், பிராண்டினை பிரபலப்படுத்தவும் செய்யப்படுகிறது.

செவர்லே நிறுவனம், ஆதாயங்கள், இன்சூரன்ஸ், வாரண்டி உள்ளிட்ட பல்வேறு விதங்களில் இச்சலுகைகளை வழங்குகின்றனர்.

செவர்லே கார் மாடல்கள் மீது கிடைக்கும் சலுகைகள் குறித்து விரிவான தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

சலுகைகள் கிடைக்கும் மாடல்கள்;

சலுகைகள் கிடைக்கும் மாடல்கள்;

செவர்லே இந்தியா நிறுவனம் வழங்கும் இந்த தள்ளுபடிகள், சலுகைகளில் செயில் காம்பேக்ட் செடான், என்ஜாய் எம்பிவி மற்றும் பீட் ஹேட்ச்பேக் ஆகிய 3 மாடல்கள் மட்டுமே சேர்க்கபட்டுள்ளது.

இந்த செவர்லே வாகனங்களை வாங்கும் போது, அதிகப்படியாக 62,000 ரூபாய் வரையிலான சலுகைகளை பெறலாம்.

செயில் காம்பேக்ட் செடான்;

செயில் காம்பேக்ட் செடான்;

செவர்லே செயில் காம்பேக்ட் செடான், 55,000 ரூபாய் வரையிலான சலுகைகளுடன் கிடைக்கிறது. இப்போது, செவர்லே செயில் வாங்கும் போது, முதல் வருடத்திற்கான இன்சூரன்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து செவர்லே ஷோரூம்களிலும் இந்த சலுகைகள், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.

என்ஜாய் எம்பிவி;

என்ஜாய் எம்பிவி;

செவர்லே என்ஜாய் எம்பிவி மீது, 55,000 ரூபாய் மதிப்பிலான சலுகைகள் கிடைக்கும். இதில், 20,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் முதல் வருடத்திற்கான இலவச இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளும் அடங்கும்.

இந்த சலுகைகள் மற்றும் ஆதாயங்கள், குறிப்பிட்ட அளவில் ஸ்டாக்குகள் உள்ளவரை மட்டுமே கிடைக்கும்.

இதற்கிடையில், செவர்லே என்ஜாய் எம்பிவியின் விற்பனை இந்தியா வாகன சந்தைகளில் இருந்து விளக்கி கொள்ளப்படும் என்றும் செய்திகள் வெளியாகிறது.

பீட் ஹேட்ச்பேக்;

பீட் ஹேட்ச்பேக்;

பீட் ஹேட்ச்பேக் மீது தான், செவர்லே இந்தியா நிறுவனம், அதிகப்படியாக 62,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் கொடுக்கப்படுகிறது.

இதில், முதல் வருடத்திற்கான இலவச இன்சூரன்ஸ், 2 வருடங்கள் அல்லது 50,000 கிலோமீட்டர் வரையிலான நீட்டிக்கப்பட்ட வாரண்டி கிடைக்கும்.

மேலும், 17,000 ரூபாய் மதிப்பிலான ரொக்க ஆதாயம் (cash benefit) மற்றும் 20,000 ரூபாய் மதிப்பு கொண்ட எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கிறது.

சிறப்பு சலுகைகள்;

சிறப்பு சலுகைகள்;

ஜெனெரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், தங்களின் வாகனங்கள் மீது ஆகஸ்ட் 2016 இன்வாய்ஸ் கொண்ட 100% கேஷ்பேக் சலுகையும் அளிக்கின்றனர்.

இந்த 100% கேஷ்பேக் சலுகையின் வெற்றியாளர்கள், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். இதன் வெற்றியாளர்களுக்கு செப்டம்பர் 2016-ல் உரிய தகவல்கள் வழங்கப்படும்.

வருங்கால திட்டம்;

வருங்கால திட்டம்;

செவர்லே நிறுவனம், அடுத்த ஆண்டுக்குள் பல்வேறு புதிய மற்றும் சுவாரஸ்யமான மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

இதர தொடர்புடைய செய்திகள் - 1;

இதர தொடர்புடைய செய்திகள் - 1;

ஆகஸ்ட் மாதத்தில் கார் நிறுவனங்களின் அசத்தலான தள்ளுபடிகள் - முழு விவரம்

சுதந்திர தினத்தை ஒட்டி 41,000 ரூபாய் வரையிலான சலுகைகள் வழங்கும் ரெனோ

ஃபோர்டு ஃபிகோ, ஃபிகோ ஆஸ்பயர் விலை அதிரடியாக குறைப்பு - முழு விவரம்

இதர தொடர்புடைய செய்திகள் - 2;

இதர தொடர்புடைய செய்திகள் - 2;

டொயோட்டா லிவா மற்றும் எட்டியாஸ் மீதான தள்ளுபடிகள் - முழு விவரம்

70% தள்ளுபடியில் பைக் சர்வீஸ் மற்றும் கார் பராமரிப்பு ஆக்சஸரீஸ்

ஆஃப் பீட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles

English summary
Chevrolet India introduced Blockbuster deals for August 2016. Maximum benefits worth Rs. 62,000 shall be availed on purchase of Chevrolet vehicles. These benefits and discounts can be availed on Sail compact sedan, Enjoy MPV and Beat hatchback. Beat hatchback attracts maximum benefit of Rs. 62,000. These Offers are vaild only till August 31, 2016. To know more, check here...
Story first published: Wednesday, August 17, 2016, 14:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X