பொலிவு கூட்டபட்ட புதிய செவர்லே தவேரா உருவாக்கும் ஜெனரல் மோட்டார்ஸ்

By Ravichandran

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், பொலிவு கூட்டபட்ட புதிய செவர்லே தவேரா உருவாக்குவதில் மும்முரமாக உள்ளது.

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், மிக கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு உட்படும் வகையில், செவர்லே தவேராவின் மேம்பட்ட வடிவத்தை விரைவில் வெளியிடுவது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக உறுதி செய்துள்ளது.

general-motors-chevrolet-working-on-upgraded-tavera-model

சமீபத்தில் தான், செவர்லே நிறுவனம் விரைவில் வெளியாக உள்ள செவர்லே ஸ்பின் எம்பிவி, குறைந்த அளவில் விற்பனையாகும் என்ஜாய் எம்பிவி மற்றும் செயில் மாடல் கார்களை இந்தியாவில் வழங்கப்படும் கார்களின் பட்டியலில் இருந்து விளக்கி கொண்டது.

புதிய செவர்லே தவேராவில், மிக முக்கயமான மாற்றமாக, பிஎஸ்-4 (BS-IV) விதிமுறைகளுக்கு உட்பட்ட இஞ்ஜினாக தான் இருக்கும்.

பொலிவு கூட்டபட்ட புதிய செவர்லே தவேரா, குஜராத்தில் ஹலோல் என்ற இடத்தில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன கார் உற்பத்தி ஆலையில் அசம்பிள் செயப்படும். இந்த கார் உற்பத்தி ஆளை விற்கப்படும் நிலையிலும், மார்ச் 2017 வரை இங்கும் உற்பத்தி நீட்டிக்கப்பட்டுள்ளது.

செவர்லே நிறுவனம் வழங்கும் பீட் ஹேட்ச்பேக், செவர்லே தவேரா மற்றும் குரூஸ் செடான் ஆகிய மாடல்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பு பெற்று வருவதால், புதிய செவர்லே தவேரா மேம்படுத்தப்படுவது பெரிய ஆச்சரியமான செய்தி அல்ல என்றே கூறலாம்.

செவர்லே நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில், புதிய பீட், பீட் ஆக்டிவ் சாஃப்ட்-ரோடர், பீட் எசென்சியா காம்பேக்ட் செடான், புதிய குரூஸ் மற்றும் புதிய ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி ஆகிய 5 மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Most Read Articles

English summary
American automotive giant General Motors has confirmed that it is working on an upgraded version of Chevrolet Tavera, in order to help it comply with more stringent emission norms. Biggest change with facelifted Tavera would be the new BS-IV Emission Norms compliant engine. New Tavera will be assembled at General Motors facility in Halol, Gujarat. To know more, check here...
Story first published: Saturday, June 25, 2016, 10:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X