ஜெனரல் மோட்டர்ஸ் வழங்கும் செவர்லே என்ஜாய் எம்பிவியின் உற்பத்தி நிறுத்தம்

By Ravichandran

ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் தங்களின் செவர்லே என்ஜாய் எம்பிவி காரின் உற்பத்தியை நிறுத்தி கொள்ள உள்ளனர்.

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் செவர்லே நிறுவனம், சமீபத்தில் தான் தங்களுக்கு சொந்தமான குஜராத்தில் உள்ள ஹலோல் உற்பத்தி மையத்தை விற்பனை செய்துவிட்டது. இதனால், செவர்லே என்ஜாய் எம்பிவியின் உற்பத்தி நிறுத்தி கொள்ளப்பட உள்ளது.

general-motors-likely-to-discontinue-chevrolet-enjoy-mpv-in-india-soon

செவர்லே என்ஜாய் எம்பிவியின் விற்பனை தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் எம்பிவிக்களை காட்டிலும், எஸ்யூவிகளை விரும்ப துவங்கிவிட்டனர்.

செவர்லே என்ஜாய் எம்பிவி, 2013 மே மாதம் அறிமுகம் செய்யபட்டது. அப்போது முதல், சராசரியாக ஒரு மாதத்திற்கு 877 கார்கள் தான் விற்பனையாகியுள்ளது. இது, நிச்சயம் ஜெனரல் மோட்டர்ஸ் மூலம் விற்கப்படும் மாடல்களில் சிறந்த முறையில் விற்பனையாகும் மாடலாக இல்லை.

செவர்லே என்ஜாய் எம்பிவி, பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளில் வெளியாகிறது. இதன் 1.4 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 99 பிஹெச்பியையும், 131 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின், 74 பிஹெச்பியையும், 172 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

செவர்லே என்ஜாய் எம்பிவி, மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி மாடளிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர் கொண்டது. இதனால், செவர்லே என்ஜாய் எம்பிவியின் விற்பனை பின்னுக்கு தள்ளபட்டது.

general-motors-likely-to-discontinue-chevrolet-enjoy-mpv-in-india-shortly

குஜராத்தில் உள்ள ஹலோல் உற்பத்தி மையத்தில் தான், செவர்லே தவேராவும் உற்பத்தி செய்யபட்டு வந்தது. இதன் உற்பத்தி, தற்போது ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் தாலேகாவ்ன் என்ற இடத்தில் உள்ள உற்பத்தி மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த செவர்லே தவேரா, கட்டாயம் நன்கு விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக உள்ளது. கடந்த 2015-16 நிதி ஆண்டில், சுமார் 10,000 செவர்லே தவேரா கார்கள் விற்பனை ஆனது.

வருங்கால அறிமுகங்களின் திட்டங்களின் ஒரு பகுதியாக, செவர்லே நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில், செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடான், பொலிவு கூட்டப்பட்ட பீட் மற்றும் பீட் ஆக்டிவ் உள்ளிட்ட மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Most Read Articles
English summary
General Motors is likely to end production of its MPV Chevrolet Enjoy with sell out of their Halol production facility in Gujarat. Chevrolet Enjoy is witnessing decrease in sales. Chevrolet Enjoy clocks an average of 877 units per month since its launch in May 2013. Chevrolet Enjoy faced severe competition from Maruti Suzuki Ertiga and had to take back seat in sales...
Story first published: Thursday, June 23, 2016, 19:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X