புதிய ஹூண்டாய் சான்ட்டா பீ சிகாகோ ஆட்டோ ஷோவில் அறிமுகம்... விரைவில் இந்தியா வருகை!

By Ravichandran

புதிய ஹூண்டாய் சான்ட்டா பீ, அமெரிக்காவில் நடைபெறும் சிகாகோ ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யபட்டது. விரைவில் இந்த கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்டா பீ குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸலைடரில் காணலாம்.

ஹூண்டாய் சான்ட்டா பீ பற்றி...

ஹூண்டாய் சான்ட்டா பீ பற்றி...

ஹூண்டாய் சான்ட்டா பீ, பெரிதும் எதிர்பார்க்கபட்ட வாகனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

சமீபத்தில் தான், இது சிக்காகோ ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யபட்டது.

வேரியண்ட்கள்;

வேரியண்ட்கள்;

ஹூண்டாய் சான்ட்டா பீ, சான்ட்டா பீ மற்றும் சான்ட்டா பீ ஸ்போர்ட் ஆகிய 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

மேம்பாடுகள்;

மேம்பாடுகள்;

ஹூண்டாய் சான்ட்டா பீ காரில் குறிப்பிடதக்க மேம்பாடுகள் செய்யபட்டுள்ளது.

இதில், புதிய எல்ஈடி லேம்ப்கள், இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டத்தில் கூடுதல் அம்சங்கள், சேஃப்டி கியர்கள் (பாதுகாப்பிற்கான கியர்கள்) மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

டிரைவ் மோட்கள்;

டிரைவ் மோட்கள்;

ஹூண்டாய் சான்ட்டா பீ, ஸ்போர்ட், எகோ மற்றும் நார்மல் என்ற புதிய டிரைவ் மோட்களில் கிடைக்கிறது.

இந்த 3 டிரைவ் மோட்களும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்ட் அம்சங்களாக கிடைக்கிறது.

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர்;

ஹூண்டாய் சான்ட்டா பீ காரின் எக்ஸ்டீரியர் பொருத்த வரை, ஒரு கூடுதலான ஸ்லாட்-டுடன் இதன் ஃப்ரண்ட் கிரில் அகலமாக ஆக்கபட்டுள்ளது.

இதன் பம்பருக்கு பக்கவாட்டில் உள்ள ஸ்லைட் ஸ்பிளிட்டர் கொண்ட இதன் தாழ்வான வெண்ட், அகன்று காணப்படுகிறது.

ரியர்;

ரியர்;

ஹூண்டாய் சான்ட்டா பீ காரின் ரியர் பகுதியை பொருத்த வரை, இதன் டெய்ல்லைட்கள், ஆங்குலார் வடிவத்தை காட்டிலும், அதிக செவ்வக வடிவத்தில் காணப்படுகிறது.

இதன் கதவுகளில் உள்ள சைட் ராக்கர் பேனல், சில்வர் ஃபினிஷ் கொண்டுள்ளது.

வீல்கள்;

வீல்கள்;

ஹூண்டாய் சான்ட்டா பீ காரின் அல்லாய் வீல் ரேஞ்ச்கள் வேரியண்ட்களை பொருத்து, 17 அல்லது 18 அல்லது 19 இஞ்ச் அளவுகளில் இருக்கிறது.

டிரைவ் தேர்வுகள்;

டிரைவ் தேர்வுகள்;

ஹூண்டாய் சான்ட்டா பீ காரை, ப்ரண்ட் வீல் டிரைவ் அல்லது ஆல்-வீல் டிரைவ் ஆகிய தேர்வுகளில் ஹூண்டாய் நிறுவனம் வழங்குகிறது.

சான்ட்டா பீ ஸ்போர்ட் இஞ்ஜின்;

சான்ட்டா பீ ஸ்போர்ட் இஞ்ஜின்;

சான்ட்டா பீ ஸ்போர்ட், 2.4 லிட்டர், சிலிண்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 187 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

அல்லது, இன்னும் கூடுதல் திறன் கொண்ட 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்ட், 4-சிலிண்டர்கள் கொண்ட இஞ்ஜின் 237 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

சான்ட்டா பீ இஞ்ஜின்;

சான்ட்டா பீ இஞ்ஜின்;

சான்ட்டா பீ பொருத்த வரை, இது 3.3 லிட்டர், வி6 இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 286 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இது 286 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ள இதன் இஞ்ஜின், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்ட் அம்சமாக வெளியாகிறது.

ஏடபுள்யூடி;

ஏடபுள்யூடி;

ஹூண்டாய் சான்ட்டா பீ காரின் ஏடபுள்யூடி அல்லது ஆல்-வீல் டிரைவ் என அழைக்கபடும் வசதி, ஆக்டிவ் கார்னரிங் கண்ட்ரோல் வசதி ஸ்டாண்டர்ட் அம்சமாக வெளியாகிறது.

சீட் விவரங்கள்;

சீட் விவரங்கள்;

ஹூண்டாய் சான்ட்டா பீ, 6 - சீட்டர் அல்லது 7 - சீட்டர் ஏற்பாட்டுடன் வெளியாகிறது. ஹூண்டாய் சான்ட்டா பீ, 5 - சீட்டர் ஏற்பாட்டுடன் வெளியாகிறது.

ஹூண்டாய் சான்ட்டா பீ காரின் 7 - சீட்டர் ஏற்பாடு, லிமிடெட் எடிஷன் போலவே வெளியாக உள்ளது.

அறிமுகம்?

அறிமுகம்?

ஹூண்டாய் சான்ட்டா பீ, இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்யபடும் என தகவல்கள் வெளியாகிறது.

விலை;

விலை;

ஹூண்டாய் சான்ட்டா பீ, 17 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் என்ற விலைகளில் விற்கபடலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரூ.23.5 லட்சத்தில் புதிய ஹூண்டாய் சான்டா ஃபீ எஸ்யூவி அறிமுகம்

அமெரிக்காவில் 7 சீட்டர் ஹூண்டாய் சான்டா பீ அறிமுகம்: இந்தியா வருமா?

சான்டா ஃபீ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Hyundai Santa Fe was unveiled at the Chicago Auto Show, being held in USA. Santa Fe unveiled at the Chicago Auto Show is available in two variants - Santa Fe and Santa Fe Sport. It could be launched in India by this year end. The prices of the Santa Fe Models might be somewhere in the range of 17 to 20 lakhs Rupees.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X