புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் தேர்வுடன் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் அறிமுகம்

By Ravichandran

ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம், தங்களின் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியை, புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் தேர்வுடன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர்.

புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜினுடன் வெளியாகும் டிஸ்கவரி ஸ்போர்ட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின்...

2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின்...

ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்களின் பணத்திற்கு கூடுதல் மதிப்பு வழங்க முடிவு செய்தனர்.

இதன் ஒரு பகுதியாக, லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியை, புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் தேர்விலும் வழங்கப்படுகிறது.

புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் தேர்வில் வெளியாகும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி, ஹெச்எஸ்இ ட்ரிம் தேர்வில் மட்டுமே வெளியாகும்.

2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி 237.36 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

பிற இஞ்ஜின் தேர்வுகள்;

பிற இஞ்ஜின் தேர்வுகள்;

முன்னதாக, லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி, 2.2 லிட்டர் டிடி4 (TD4) டீசல் இஞ்ஜின் அல்லது எஸ்டி4 (SD4) டீசல் இஞ்ஜின் தேர்வுகளில் வழங்கபட்டு வந்தது.

டிரான்ஸ்மிஷன்;

டிரான்ஸ்மிஷன்;

லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி, இந்தியாவில் செப்டம்பர் 2015-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பிரமியம் மற்றும் சொகுசு எஸ்யூவி, ரோட்டரி டிரைவ் செலக்டர் உடைய 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கபட்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், டெர்ரெயின் ரெஸ்பான்ஸ், ரியர் வியூ கேமரா, பார்க் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலை போன்றே காட்சி அளிக்கும்.

சீட் அமைப்பு;

சீட் அமைப்பு;

லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி, தொடர்ந்து 5+2 முறையிலான இருக்கை அமைப்பையே கொண்டிருக்கும்.

புதிய இஞ்ஜின் அறிமுகத்தின் பின்னணி;

புதிய இஞ்ஜின் அறிமுகத்தின் பின்னணி;

டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில், டீசல் வாகனங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தான், புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட

லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் அறிமுகம் செய்யபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

சமீபத்திய சாதனை;

சமீபத்திய சாதனை;

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மிகவும் திறன்மிக்க வாகனம் என்பதனை நிரூபிக்கும் விதமாக லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டிஸ்கவரி ஸ்போர்ட், 108 டன் எடை கொண்ட ரயிலை இழுத்து சென்று சாதனை படைத்துள்ளது.

108 டன் எடையுள்ள ரயிலை இழுத்து சென்று லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் சாதனை - வீடியோ

விலை;

விலை;

புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட டிஸ்கவரி ஸ்போர்ட் ஹெச்எஸ்இ வேரியன்ட், 56.50 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரேஞ்ச்ரோவர் ஆட்டோபயோகிராஃபி சொகுசு எஸ்யூவி வாங்கிய நடிகர் அமிதாப்பச்சன்

அட்ராசக்கை... லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்டுக்கு அமோக வரவேற்பு!

லேண்ட்ரோவர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Jaguar Land Rover India launched their Land Rover Discovery Sport SUV with an all-new 2.0-litre petrol engine. Discovery Sport with new petrol engine will be available only in HSE trim option. Discovery Sport will be offered with 5+2 seating option. This Land Rover Discovery Sport also has Terrain Response, Rear View Camera, Park Assist, and more. To know more, check here...
Story first published: Tuesday, June 21, 2016, 16:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X