மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான் வேரியன்ட்கள் - விரிவான அலசல்

By Ravichandran

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், சில தினங்களுக்கு முன் ஜூன் 2-ஆம் தேதி அறிமுகம் செய்யபட்டது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மஹிந்திரா இ-வெரிட்டோவின் வேரியன்ட்கள் குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா இ-வெரிட்டோ

மஹிந்திரா இ-வெரிட்டோ

மஹிந்திரா இ-வெரிட்டோ, மஹிந்திரா நிறுவனம் தயாரித்து வழங்கும் எலக்ட்ரிக் செடான் ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால், 100 கிலோமீட்டர் பயணிக்கும் வகையிலான ரேஞ்ச் கொண்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம், எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

கிடைக்கும் வேரியன்ட்கள்;

கிடைக்கும் வேரியன்ட்கள்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், டி2, டி4 மற்றும் டி6 என 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது.

டி2;

டி2;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடானின், அடிப்படை வேரியன்ட்டான டி2, அல்லாய் வீல்களுக்கு பதிலாக ஸ்டீல் வீல்களுடன் வருகிறது. இத ஃபிரண்ட் கிரில்லில் உள்ள குரோம் பெசல் காணப்படவில்லை.

இதன் பக்கவாட்டில், அடிப்பகுதியில் உள்ள பாடி கிலாட்டிங் பிளாக் நிறத்தில் உள்ளது. இதன் அப்ஹோல்ஸ்ட்ரி நெய்யப்பட்ட ஃபேப்ரிக் மூலம் உருவாக்கபட்டுள்ளது.

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான் வேரியன்ட்கள் - விரிவான அலசல்

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடானின், இந்த டி2 வேரியன்ட்டில் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் உடைய 2-DIN ஆடியோ சிஸ்டம் இல்லை. இதன் ஓஆர்விஎம்-கள் மேனுவல் அமைப்பில் உள்ளன.

மேலும், இதில் கிலெஸ் என்ட்ரி எனப்படும் சாவி இல்லாமல் நுழையும் வசதி மற்றும் ரிமோட் லாக் உள்ளிட்ட வசதிகள் இல்லை.

டி4;

டி4;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடானின் நடுத்தர வேரியன்ட்டான டி4 வேரியன்ட்டிலும், ஃபாஸ்ட் சார்ஜிங் தேர்வு இல்லை. எனினும், இதில் யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் உடைய 2-DIN ஆடியோ சிஸ்டம் பொருத்தபட்டுள்ளது.

இந்த டி4 வேரியன்ட்டில், அல்லாய் வீல்கள், பாடி நிறத்தில் ஆனா பாடி கிலாட்டிங் மற்றும் ஃபிரண்ட் கிரில்லில், குரோம் பெசல் உள்ளது.

டி6;

டி6;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடானின் டாப் என்ட் வேரியன்ட்தான ஏராளமான அம்சங்களுடன் நிறைந்துள்ளது.

மிக முக்கியமானதாக ஃபாஸ்ட் சார்ஜிங் தேர்வு கொண்டுள்ளது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில், மஹிந்திரா இ-வெரிட்டோவின் எலக்ட்ரிக் மோட்டாரின் சுமார் 80% சார்ஜிங், 1 மணி நேரம், 45 நிமிடங்களில் நடைப்பெற்றுவிடுகிறது.

ஒற்றுமைகள்;

ஒற்றுமைகள்;

இது வரை, மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடானின் டி2, டி4 மற்றும் டி6 ஆகிய 3 வேரியன்ட்களுக்கு இடையே இருந்த வேறுபாடுகளை பார்த்தோம். இனி, இந்த 3 வேரியன்ட்களுக்கு இடையே இருக்கும் ஒற்றுமைகளை பார்போம்.

மோட்கள்;

மோட்கள்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடானின் அனைத்து வேரியன்ட்களும், ஈக்கோ மற்றும் பூஸ்ட் என இரு டிரைவ் மோட்களில் கிடைக்கிறது.

இதர வசதிகள்;

இதர வசதிகள்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடானின் அனைத்து வேரியன்ட்களும், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், ரிமோட் டையாக்னாஸ்டிக்ஸ், பவர் விண்டோஸ், ஹீட்டர் உடனான ஏசி, ஃபிரண்ட் பகுதியில் மொபைல் சார்ஜிங் செய்வதற்கான சாக்கெட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

பாதுகாப்பை பொருத்த வரை, மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடானில், ஏபிஎஸ் உடனான ஏர் பேக்குகள் தேர்வு முறையில் கிடைக்கிறது.

மேலும், இதில் கொள்ளாப்சிபில் ஸ்டியரிங் காலம்ன், சைட் இன்ட்ரூஷன் பீம்கள், ஆட்டோ டோர் லாக், மற்றும் இம்மொபைலைசர் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இதில் உள்ளது.

மோட்டார்;

மோட்டார்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், 72V 3-முனை (ஆல்டர்நேட் கரண்ட்) இண்டக்ஷன் மோட்டார் (72V 3-phase AC (Alternate Current) induction motor) கொண்டுள்ளது.

சிங்கிள் கியர்பாக்ஸுடேன் இணைக்கப்பட்ட இதன் மோட்டார், 40 பிஹெச்பியையும், 91 டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாகும்.

உச்சபட்ச வேகம், சார்ஜிங்;

உச்சபட்ச வேகம், சார்ஜிங்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான் உச்சபட்சமாக, மணிக்கு 86 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

இதன் மோட்டாரை முழுமையாக சார்ஜிங் செய்ய 8 மணி நேரம் ஆகும்.

விலை விவரம்;

விலை விவரம்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடானின், விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வேரியன்ட் - டி2

விலை - 9.50 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

வேரியன்ட் - டி4

விலை - 9.75 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

வேரியன்ட் - டி6

விலை - 10 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

வெரிட்டோ தொடர்புடைய செய்திகள்

மஹிந்திரா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Mahindra, which spearheads electric vehicles in Indian auto industry has launched their Mahindra e-Verito Electric Sedan in India. It has driving range of 100kms on single charge. It comes in variants named as D2, D4, and D6. e-Verito can go in top speed of 86kmph. It takes takes 8 hours for full charge. Mahindra e-Verito comes with two drive modes of ECO and BOOST. To know more, check here...
Story first published: Wednesday, June 8, 2016, 13:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X