மஹிந்திரா நிறுவனத்தின் கான்செப்ட் கார் டிசைன்கள் வெளியிடபட்டுள்ளது

By Ravichandran

மஹிந்திரா நிறுவனம், பினின்ஃபரீனா நிறுவனம், இணைந்து உருவாக்கிய சமீபத்திய கான்செப்ட் காரின் டிசைன்கள் வெளியிடபட்டுள்ளது.

மஹிந்திரா வெளியிட்ட கான்செப்ட் கார் டிசைன்கள் குறித்த தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

மஹிந்திரா டிசைன்கள்;

மஹிந்திரா டிசைன்கள்;

ஆட்டோமோட்டிவ் துறை ஜாம்பவானான மஹிந்திரா, இத்தாலிய கார் டிசைன் வடிவமைப்பு நிறுவனமான பினின்ஃபரீனா, வருங்கால ஃபார்முலா இ ரேசர் கார்கள் தொடர்பான தங்களின் படைப்புகளை வெளியிட்டுள்ளனர். இது தான் வருங்கால கார் டிசைன்களில் மிக சுத்தமான, மாசற்ற கார்களை சார்ந்ததாக இருக்கும்.

பினின்ஃபரீனா நிறுவனத்தை, மஹிந்திரா நிறுவனம் கையகபடுத்தியதை அடுத்து, அது இப்போது மஹிந்திரா நிறுவனத்தின் கட்டுபாட்டின் கீழ் உள்ளது.

கான்செப்ட் கார்கள்;

கான்செப்ட் கார்கள்;

மஹிந்திரா நிறுவனம் இ ரேசிங் எனப்படும் எலக்ட்ரிக் கார்களுக்கான ரேசிங் தொடர்புடைய 3 கான்செப்ட் மாடல்களை வெளியிட்டனர். இவை அனைத்தும் தற்போதைக்கு கான்செப்ட் ஏ, கான்செப்ட் பி மற்றும் கான்செப்ட் சி என அழைக்கபடுகிறது.

இவை மூன்றும், 2016 ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபட்டு சிறந்த கான்பெட் டிசைன் பரிசை பெற்ற ரோபோரேஸ் ஆட்டோமேட்டட் கார்கள் மற்றும்

பினின்ஃபாரினாவின் ஹெச்2 ஸ்பீட் கான்செப்ட் டிசைன் மாடல்களின் மேஷ் அப் போல் காட்சியளிக்கிறது.

ஒற்றுமைகள்;

ஒற்றுமைகள்;

கான்செப்ட் ஏ, கான்செப்ட் பி மற்றும் கான்செப்ட் சி ஆகிய 3 கான்செப்ட் மாடல்களுக்கும் இருக்கும் முக்கியமான ஒற்றுமை, இதன் முன் சக்கரங்கள் பகுதியை சுற்றி அமைக்கபட்டுள்ள ஏரோடைனமிக் பரப்புகள் ஆகும்.

கார்பன் ஃபைபரின் உதவியுடன் இது காற்றை சுலபமாக கடத்த உதவுகிறது.

வேற்றுமைகள்;

வேற்றுமைகள்;

இந்த 3 கான்செப்ட் மாடல்கள், இவற்றின் காக்பிட் மற்றும் ரியர் டிசைன்களில் வேறுபடுகிறது. கான்செப்ட் ஏ, கான்செப்ட் பி மூடிய காக்பிட் டிசைன் கொண்டுள்ளது. கான்செப்ட் சி திறந்தபடியான கான்செப்ட் டிசைன் கொண்டுள்ளது.

மஹிந்திரா ரேசிங் தலைவர் கருத்து;

மஹிந்திரா ரேசிங் தலைவர் கருத்து;

இந்த கான்செப்ட் டிசைனின் அறிமுகம் குறித்து, மஹிந்திரா ரேசிங் தலைவரான தில்பாக் சிங் மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார்.

மேலும், "2022, 2023 ஆண்டுகளிலும் ஏற்ற கார்களுக்கான ஏற்ற டிசைன் கொண்ட கார்கள் தொடர்பான விவாதத்தை துவக்கவதே முக்கியமான நோக்கமாக உள்ளது. இது நீண்ட காலத்திற்கு புதுமையாகவே இருக்க வேண்டும் என்பதே இந்த டிசைன்களின் முக்கிய சவாலாக உள்ளது" என தில்பாக் சிங் தெரிவித்தார்.

"கூடுதலாக, பாதுகாப்பு, ஃபார்முலா இ ரேசிங் தொடர்பான செலவுகள், மற்றும் இந்த கான்செப்ட் கார்களின் வருங்காலம் ஆகிய விஷயங்களை மனதில் கொண்டு டிசைன் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது" என தில்பாக் சிங் தெரிவித்தார்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

சுண்டி இழுக்கும் செர்ஜியோ பினின்ஃபரீனா கார் டிசைன்... ஆனால்?!

பினின்ஃபரீனா கார் டிசைன் நிறுவனத்தை கையகப்படுத்தியது மஹிந்திரா!

மஹிந்திரா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Indian automotive giant Mahindra and Italian car design house Pininfarina (presently owned by Mahindra) unveiled their vision of future Formula E racer. These 3 concepts unveiled are called Concept A, Concept B and Concept C. The three concepts have a lot in common including smooth aerodynamic surfaces. To know more, check here...
Story first published: Thursday, April 21, 2016, 20:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X