மாருதி பலேனோவின் டெல்டா, ஸீட்டா வேரியண்ட்களின் ஒப்பீடு - முழு தகவல்கள்

By Ravichandran

மாருதி கார் நிறுவனம், இந்தியாவில் முன்னோடி கார் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிறுவனம், பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதில், பலேனோவும் புகழ் பெற்ற மாடல் ஆகும்.

மாருதி பலேனோ மாடலில் மாருதி பலேனோ டெல்டா மற்றும் மாருதி பலேனோ ஸீட்டா என 2 வேரியண்ட்கள் உள்ளன. இந்த 2 வேரியண்ட்களில் எது சிறந்தது என வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

மாருதி பலேனோ...

மாருதி பலேனோ...

மாருதி நிறுவனம் வழங்கும் மாருதி பலேனோ மாபெரும் ஹிட் மாடலாக உள்ளது. இதன் காத்திருப்பு காலம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

மாருதி பலேனோ மாடலின் கீழ் உள்ள நடு ரக வேரியண்ட்களான மாருதி பலேனோ டெல்டா மற்றும் மாருதி பலேனோ ஸீட்டா ஈர்க்கும் வகையிலான வேரியண்ட்களாக உள்ளது.

எக்ஸ்டீரியர் - டோர் ஹேண்டில்;

எக்ஸ்டீரியர் - டோர் ஹேண்டில்;

வெளிப்புற அம்சங்களின் படி, மாருதி பலேனோ டெல்டா, பாடி (காரின் உடல் பாகம்) வண்ணத்திலான டோர் ஹேண்டில்கள் கொண்டுள்ளது. ஆனால், மாருதி பலேனோ ஸீட்டாவின் டோர் ஹேண்டில்கள் குரோம் பூச்சு கொண்டுள்ளது.

வீல்;

வீல்;

மாருதி பலேனோ ஸீட்டா அல்லாய் வீல்களை கொண்டுள்ளது. ஆனால், மாருதி பலேனோ டெல்டா வீல் கேப்கள் கொண்டுள்ளது.

மேலும், ஸீட்டா வேரியண்ட்டின் விண்டோஸ் (ஜன்னல்) மற்றும் குவார்டர் கிளாஸ்களுக்கு யூவி கட் கிளாஸ்கள் வழங்கபட்டுள்ளது.

இல்லாதவை;

இல்லாதவை;

மாருதி பலேனோ டெல்டா மற்றும் மாருதி பலேனோ ஸீட்டா வேரியண்ட்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை தவிர்த்து, பலேனோவின் டாப் எண்ட் வேரியண்ட்டான பலேனோ ஆல்ஃபா வேரியண்ட்டில் உள்ள டிஆர்எல் மற்றும் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மேற்குறிப்பிட்ட இரு வேரியண்ட்களிலுமே இல்லை.

இண்டீரியர் - டெல்டா;

இண்டீரியர் - டெல்டா;

மாருதி பலேனோ டெல்டா வேரியண்ட்டின் கிளௌவ் பாக்ஸ் அல்லது லக்கேஜ் ரூம் அல்லது ஃப்ரண்ட் ஃபுட்வெல் பகுதியில் இல்லுமினேஷன் வசதி இல்லை.

ஸீட்டா;

ஸீட்டா;

மாருதி பலேனோ ஸீட்டா, மல்டி - இன்ஃபர்மேஷன் ஸ்பீடோமீட்டர் டிஸ்பிளே மற்றும் லெதர் சுற்றபட்டுள்ள ஸ்டியரிங் வீல் கொண்டுள்ளது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

மாருதி நிறுவனம், பலேனோ மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும், ஸ்டாண்டர்ட் ட்யூவல் ஏர்பேக்குகள், ஈபிடி உள்ளிட்ட ஏபிஎஸ் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை வழங்கியுள்ளனர்.

டெல்டா மற்றும் ஸீட்டா வேரியண்ட்களிலுக்கு மத்தியில், ஃப்ரண்ட் ஃபாக் லேம்ப்கள், ஆட்டோ ஹெட்லேம்கள், ஆட்டோ டிம்மிங் ஐவிஆர்எம் உள்ளிட்டவை முக்கிய வித்தியாசங்களாக உள்ளன.

இல்லாதவை - ஸீட்டா;

இல்லாதவை - ஸீட்டா;

மாருதி பலேனோ டெல்டாவை காட்டிலும் மாருதி பலேனோ ஸீட்டா உயர்ந்த வேரியண்ட்டாக இருக்கும் போதிலும் பலேனோ ஆல்ஃபா வேரியண்ட்டில் உள்ள ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் ஸீட்டாவில் இல்லை.

ரிவர்ஸ் பார்க்கிங் தவிர்த்து ஆராய்ந்து பார்த்தால், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா வசதியை சேர்க்காமல் இருந்தால், பலேனோ ஆல்ஃபா மற்றும் ஸீட்டா வேரியண்ட்களுக்கு இடையிலான பாதுகாப்பு அம்சங்களில் எந்த பெரிய வித்தியாசங்களும் இல்லை.

பொழுதுபோக்கு;

பொழுதுபோக்கு;

பொழுதுபோக்கு விஷயத்தில், மாருதி பலேனோ டெல்டா மற்றும் மாருதி பலேனோ ஸீட்டா உள்ளிட்ட வேரியண்ட்களுக்கு இடையில் பெரிய அளவிலான வித்தியாசங்கள் எதுவும் இல்லை.

2 வேரியண்ட்களிலுமே, ரேடியோ உடைய ஆடியோ சிஸ்டம், எம்பி3, சிடி பிளேயர் உள்ளிட்ட வசதிகள் உள்ளது. புளுடூத் கனெக்டிவிட்டி, ஆக்ஸ் மற்றும் யூஎஸ்பி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இதில் அடங்கும்.

இந்த அனைத்து வசதிகளும், ஸ்டியரிங் வீல் பகுதியில் இருந்தே கட்டுபடுத்த முடியும்.

பொழுதுபோக்கு - வித்தியாசங்கள்;

பொழுதுபோக்கு - வித்தியாசங்கள்;

ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம், நேவிகேஷன் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட் / ஆப்பிள் கார்பிளே ஆகிய அம்சங்களினால் தான் மாருதி பலேனோ டெல்டா, மாருதி பலேனோ ஸீட்டா வேரியண்ட்கள் ஆல்ஃபா வேரியண்ட்டுடன் வேறுபடுகிறது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

இந்த பிரிவில், சொகுசு குறித்த சிறிய சிறிய விவரங்களை பார்போம். மாருதி பலேனோ டெல்டா வேரியண்ட்டில் டெலஸ்கோபிக் ஸ்டியரிங், ஃபால்லோ மீ ஹோம் / லீட் டு வெஹிகிள் ஹெட்லேம்ப்கள், ஸ்டோரேஜ் உடைய ஃப்ரண்ட் செண்டர் ஆர்ம் ரெஸ்ட் அல்லது ஹைட் அட்ஜஸ்டிபிள் டிரைவர் சீட், ஸ்மார்ட் கீ உடைய புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன் ஆகிய அம்சங்கள் இல்லை.

ஆல்ஃபோ உடன் ஒப்பீடு;

ஆல்ஃபோ உடன் ஒப்பீடு;

ஸீட்டா வேரியண்ட்டை ஆல்ஃபோ வேரியண்ட்டுடன் ஒப்பிடுகையில், எந்த விதமான வித்தியாசங்களும் இல்லை.

வழக்கமான டீலர்ஷிப்கள் மூலம் விற்கபடும் கார்களுடன் ஒப்பிடுகையில், பிரிமியம் ஷோரூம்களான நெக்ஸா மூலம் விற்கபடும் அனைத்து கார்களின் அனைத்து வேரியண்ட்களிலும் பிரிமியம் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை மாருதி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

மாருதி பலேனோ, பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய இரு இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

மாருதி பலேனோவின் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 6,000 ஆர்பிஎம்களில் 83 பிஹெச்பியையும், 4,000 ஆர்பிஎம்களில் 115 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

மாருதி பலேனோவின் 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின், 4,000 ஆர்பிஎம்களில் 74 பிஹெச்பியையும், 2000 ஆர்பிஎம்களில் 190 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்;

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்;

மாருதி பலேனோவின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு, மாருதி பலேனோ டெல்டா மற்றும் மாருதி பலேனோ ஸீட்டா பெட்ரோல் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கிறது.

விலைகள் - டெல்டா;

விலைகள் - டெல்டா;

வேரியண்ட் - மாருதி பலேனோ டெல்டா

பெட்ரோல் - 6.01 லட்சம் ரூபாய்

டீசல் - 7.22 லட்சம் ரூபாய்

ஆட்டோமேட்டிக் (பெட்ரோல்) - 7.09 லட்சம் ரூபாய்

அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலைகள் ஆகும்.

விலைகள் - ஸீட்டா;

விலைகள் - ஸீட்டா;

வேரியண்ட் - மாருதி பலேனோ ஸீட்டா

பெட்ரோல் - 6.63 லட்சம் ரூபாய்

டீசல் - 7.85 லட்சம் ரூபாய்

ஆட்டோமேட்டிக் (பெட்ரோல்) - 7.47 லட்சம் ரூபாய்

அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலைகள் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி பலேனோ கார் நிறைகளும், குறைகளும்!

மாருதி பலேனோ காரின் புதிய படங்கள் மற்றும் கூடுதல் விஷயங்கள்!

பலேனோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Maruti Suzuki launched their Baleno Hatchback few months ago. Baleno has many Variants like Zeta, Delta, Alpha and so on. All these variants are loaded with lots of features. Zeta and Delta belong to the mid-range variants of Baleno. To know the special features of Zeta and Delta variants of Baleno Hatchback, check here...
Story first published: Wednesday, April 20, 2016, 16:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X