இந்தியாவில் தயாரிக்கப்படும் மாருதி பலேனோ, ஜுன் 1-ல் இங்கிலாந்தில் அறிமுகம்

By Ravichandran

இந்தியாவில் தயாரிக்கப்படும் மாருதி சுஸுகி பலேனோ ஹேட்ச்பேக், ஜுன் மாதம் 1-ஆம் தேதி இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மாருதி சுஸுகி பலேனோவின் இங்கிலாந்து பிரவேசம் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மாருதி பலேனோ...

மாருதி பலேனோ...

மாருதி சுஸுகி நிறுவனம் தயாரித்து வழங்கும் மாடல்களில், மாருதி பலேனோ ஹேட்ச்பேக், மிகவும் புகழ்பெற்ற மாடலாக விளங்குகிறது.

இது தற்போது இந்தியாவில் தயாரிக்கபட்டு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகிறது.

பிரிமியம் ஹேட்ச்பேக்காக அறிமுகம் செய்யப்பட்ட இது, நெக்ஸா ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்யபட்டு வருகிறது.

இங்கிலாந்தில் அறிமுகம்;

இங்கிலாந்தில் அறிமுகம்;

இந்தியாவில் தயாரிக்கபட்டு, இந்திய வாகன சந்தைகள் மற்றும் உலகின் பல்வேறு வாகன சந்தைகளில் சாதனை படைத்து வந்த மாருதி பலேனோ ஹேட்ச்பேக், இங்கிலாந்தில் முறைப்படி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வேரியன்ட்கள்;

வேரியன்ட்கள்;

இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள மாருதி பலேனோ ஹேட்ச்பேக், வித்தியாசமான விவரக்குறிப்புகள் கொண்டதாக இருக்கும்.

இங்கிலாந்து வாடிக்கையாளர்களுக்கு, எஸ்இசட்டி மற்றும் எஸ்இசட்5 என இரு வேரியன்ட்களில் மாருதி பலேனோ ஹேட்ச்பேக், வழங்கப்பட உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இங்கிலாந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பலேனோ ஹேட்ச்பேக்கிற்கு பூஸ்டர் ஜெட் இஞ்ஜின் பொருத்தபட்டிருக்கும்.

இந்த டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின், 109 பிஹெச்பியையும், 170 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

இந்த மாருதி பலேனோ ஹேட்ச்பேக், 5-ஸ்பீட் மேனுவல் அல்லது 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடேன் இணைக்கபட்டிருக்கும்.

மற்றொரு இன்ஜின்;

மற்றொரு இன்ஜின்;

இந்த மாருதி பலேனோ ஹேட்ச்பேக்கில், எஸ்ஹெச்விஎஸ் எனப்படும் ஸ்மார்ட் ஹைப்ரிட் வெஹிகிள் சிஸ்டம் கொண்ட மற்றொரு 1.2 லிட்டர் ட்யூவல்ஜெட் பெட்ரோல் இன்ஜினும் பொருத்தபட்டிருக்கும்.

மைலேஜ்;

மைலேஜ்;

இந்த மாருதி பலேனோ ஹேட்ச்பேக், ஒரு லிட்டருக்கு 24.99 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

எஸ்ஹெச்விஎஸ்;

எஸ்ஹெச்விஎஸ்;

எஸ்ஹெச்விஎஸ் ஒரு மைக்ரோ-ஹைப்ரிட் சிஸ்டம் ஆகும். இந்த மைக்ரோ-ஹைப்ரிட் சிஸ்டத்தில், பலேனோ ஹேட்ச்பேக்கை இயங்க செய்வதற்கு லித்தியம் பேட்டரிகள் பொருத்தபடுகிறது. இதனால், பெட்ரோலை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதனால், எரிபொருள் விஷயத்தில் மாருதி பலேனோ ஹேட்ச்பேக், மிகுந்த திறனுடன் செயல்பட உள்ளது.

இந்தியாவில் எஸ்ஹெச்விஎஸ்;

இந்தியாவில் எஸ்ஹெச்விஎஸ்;

இந்திய வாகன சந்தைகளில், எஸ்ஹெச்விஎஸ் தொழில்நுட்பம், மாருதி நிறுவனத்தின் சியாஸ் மற்றும் எர்டிகா மாடல்களில் வழங்கபடுகிறது. இது நல்ல எரிபொருள் திறன் அடைவதற்கு உதவிகரமாக உள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

இவை எல்லாவற்றையும் தாண்டி, ஹெச்ஐடி ஹெட்லேம்ப்கள், 16 இஞ்ச் அல்லாய் வீல்கள், ரியர் பிரைவஸி கிளாஸ், சேட்டலைட் நேவிகேஷேன், எல்இடி ரியர் லைட்கள், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், 4.2 சென்ட்ரல் கலர் டிஸ்பிளே உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

இங்கிலாந்து சந்தைகளுக்கு வழங்கபடும் மாருதி பலேனோ ஹேட்ச்பேக்கில், ரேடார் பிரேக் வசதி வழங்கபடுகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

மாருதி சுஸுகி பலேனோ ஹேட்ச்பேக், ஜுன் மாதம் 1-ஆம் தேதி இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

போட்டி;

போட்டி;

இங்கிலாந்து வாகன சந்தைகளில், மாருதி பலேனோ ஹேட்ச்பேக், ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஃ போர்டு ஃபியஸ்ட்டா ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

ஐரோப்பிய சந்தைகளுக்கு, மாருதி சுஸுகி வழங்கும் கார்களில், மாருதி பலேனோ ஹேட்ச்பேக் தான் இலகு ரக எடை கொண்ட மாடல் ஆகும்.

விலை;

விலை;

இங்கிலாந்து வாகன சந்தைகளில், மாருதி பலேனோ ஹேட்ச்பேக் 12,999 பவுண்ட் முதல் 15,349 பவுண்ட் (இந்திய மதிப்பில் 12.8 லட்சம் ரூபாய் முதல் 15.11 லட்சம் ரூபாய்) லட்சம் ரூபாய் அறிமுகம் செய்யபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி பலேனோ ஹேட்ச்பேக்கிற்கு 3 ஸ்டார் ரேட்டிங்

மாருதி பலேனோ கார் நிறைகளும், குறைகளும்!

பலேனோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Made in India - Maruti Suzuki Baleno Hatchback is to be launched in England on June 1, 2016. Suzuki Baleno will have different specs for UK customers. This hatchback comes in two variants - SZT and SZ5. Booster Jet engine will power this Baleno. Maruti Suzuki Baleno will also get 1.2-litre Dualjet petrol engine with SHVS (Smart Hybrid Vehicle System). To know more, Check here...
Story first published: Friday, May 20, 2016, 20:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X