ஜப்பானுக்கும் மாருதி சுஸுகி பலேனோ கார்களின் ஏற்றுமதி துவக்கம்

By Ravichandran

இந்தியாவில் தயாரிக்கபடும் மாருதி சுஸுகி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக், அந்த நிறுவனத்தின் பிறப்பிடமான ஜப்பானுக்கு ஏற்றுமதியை துவக்கியுள்ளது.

ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யபடும் மாருதி சுஸுகி பலேனோ குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஜப்பானில் மாருதி பலேனோ...

ஜப்பானில் மாருதி பலேனோ...

மாருதி பலேனோ, மாருதி சுஸுகி நிறுவனம் தயாரித்து வழங்கும் கார்களில் மிகவும் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றாக உள்ளது.

ஒரு விதத்தில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிறப்பிடமாக ஜப்பான் விளங்குகிறது. இந்த பலேனோ ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் முறைப்படி அறிமுகம் செய்யபட்டது.

முதல் தயாரிப்பு...

முதல் தயாரிப்பு...

மாருதி சுஸுகி நிறுவனம் தயாரித்து வழங்கும் மாடல்களிலேயே ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்யபடும் முதல் மாடலாக பலேனோ தான் விளங்குகிறது.

1,00,000+ புக்கிங்;

1,00,000+ புக்கிங்;

மாருதி சுஸுகி நிறுவனம் தயாரிக்கும் பலேனோ மாடல் 1,00,000-ற்கும் கூடுதலான புக்கிங்குகள் பெற்று சாதனை படைத்து வருகிறது.

தற்போது வரை, மாருதியின் எக்ஸ்குளூஸிவ் டீலர்ஷிப்களாக விளங்கும் நெக்ஸா மூலம், சுமார் 38,000 பலேனோ கார்கள் டெலிவரி செய்யபட்டுள்ளது.

100+ நாடுகளுக்கு ஏற்றுமதி;

100+ நாடுகளுக்கு ஏற்றுமதி;

மாருதி பலேனோவின் அறிமுகத்தின் போது, இது 100-க்கும் கூடுதலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடும் என அறிவிக்கபட்டது.

மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் பலேனோ, ஜப்பான், தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஃப்ரிக்காவின் சில பகுதிகள் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்யபடும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனோ, இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள கார் உற்பத்தி ஆலையில்

தயாரிக்கபடுகிறது.

மாருதி நிறுவனம் நீண்ட காலமாக ஏற்றுமதி செய்யும் திட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்யபடும் மாருதி பலேனோ, 2 இஞ்ஜின் தேர்வுகளுடன் வழங்கபடுகிறது.

இந்த பலேனோ, 1.2 லிட்டர் ட்யூவல் இஞ்ஜின் மற்றும் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்ஜின் என 2 தேர்வுகளில் வழங்கபடுகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஜப்பானுக்கான மாருதி பலேனோ, பேடல் ஷிஃப்டர்கள் கொண்ட 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

மேலும், இது தேர்வு முறையிலான சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

ஜப்பான் சந்தைகளுக்கு சிறப்பு வசதிகள்;

ஜப்பான் சந்தைகளுக்கு சிறப்பு வசதிகள்;

ஜப்பான் வாகன சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யபடும் மாருதி பலேனோ கார்களுக்கு, இந்திய சந்தைகளில் வழங்கபடும் மாருதி பலேனோவை காட்டிலும் சில கூடுதல் சிறப்பு வசதிகள் சேர்க்கபட்டுள்ளது.

ஜப்பானுக்கு வழங்கபடும் பலேனோவில், கொலிஷன் - மிடிகேஷன் சிஸ்டத்திற்கு (மோதல்-தடுப்பு அமைப்பு) ரேடார் பிரேக் சப்போர்ட் (ரேடார் பிரேக் உதவி) வழங்கபடுகிறது.

மேலும், இத்துடன் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான புதிய அம்சங்கள் சேர்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அட்வான்ஸ் புக்கிங்கில் அசத்தும் புதிய மாருதி பலேனோ காரின் வெற்றிக்கான காரணங்கள்!

மாருதி பலேனோ காரின் புதிய படங்கள் மற்றும் கூடுதல் விஷயங்கள்!

பலேனோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles

English summary
After long delays, Maruti Suzuki finally exported their Baleno premium hatchback to the company's origin, i.e., Japan. Baleno by Maruti Suzuki is first product to be exported to Japanese Automobile market. Maruti Suzuki said that, it Baleno has crossed one lakh+ bookings in India. Japan gets Baleno with two engine options like 1.2-litre Dualjet and 1.0-litre Boosterjet engines.
Story first published: Thursday, March 10, 2016, 17:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X