மாருதி ஸ்விப்ட் மாடலில், புதிய டிஎல்எக்ஸ் லிமிடெட் எடிஷன் அறிமுகம்

By Ravichandran

மாருதி நிறுவனம், ஸ்விப்ட் மாடலில் புதிய டிஎல்எக்ஸ் லிமிடெட் எடிஷன் அறிமுகம் செய்துள்ளனர்.

மாருதி ஸ்விப்ட் மாடல், எல்எக்ஸ்ஐ (பெட்ரோல்) மற்றும் எல்டிஐ (டீசல்) ஆகிய பேஸ் வேரியன்ட்களில் வழங்கப்பட்டு வருகிறது. இதை தவிர்த்து, தற்போது ஸ்விப்ட் மாடல், புதிய லிமிடெட் டிஎல்எக்ஸ் எடிஷனிலும் கிடைக்கிறது.

maruti-swift-dlx-limited-edition-launched-all-price-details-revealed

மாருதியின் புதிய ஸ்விப்ட் டிஎல்எக்ஸ் லிமிடெட் எடிஷனில், புளுடூத் உடைய சோனி எஃப்எம் மியூசிக் சிஸ்டம், 4 பவர் விண்டோக்கள், சென்ட்ரல் லாக்கிங், பாடி நிறத்திலான விங் மிர்ரர்கள் மற்றும் டோர் ஹேண்டில்கள், யூஎஸ்பி மற்றும் ஃபிரண்ட் டோர் ஸ்பீக்கர்கள், பிளாக்ட் அவுட் பி-பில்லர், ஃ பாக் லேம்ப்கள் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

மேலும், இதில் டிரைவருக்கு, தோராயமான மைலேஜ் விவரங்கள் காண்பிக்கும் மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்பிளே வசதியும் உள்ளது.

புதிய ஸ்விப்ட் டிஎல்எக்ஸ் லிமிடெட் எடிஷனில், 83 பிஹெச்பியை வெளிப்படுத்தும் ஸ்டாண்டர்ட் 1.2 லிட்டர் கே-சீரீஸ் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 74 பிஹெச்பியை வெளிப்படுத்தும் 1.3 டிடிஐஎஸ் இஞ்ஜின் தேர்வுகள் உள்ளன.

விற்பனையை பொருத்த வரை, மாருதி ஸ்விப்ட்டின் விற்பனையில் தேக்க நிலை நிலவி வருகிறது. மாருதி ஸ்விப்ட் மந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போது, இதில் மேம்பாடுகள் செய்ய வேண்டிய நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது.

அடுத்த தலைமுறை மாருதி ஸ்விப்ட், இந்திய வாகன சந்தைகளில் 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

மாருதி ஸ்விப்ட் டிஎல்எக்ஸ் லிமிடெட் எடிஷனின் பெட்ரோல் மாடலின் விலை 4.54 லட்சம் ரூபாய் என்ற விலையில் இருந்தும், டீசல் மாடலின் விலை 5.95 லட்சம் ரூபாய் என்ற விலையில் இருந்தும் துவங்குகிறது.

Most Read Articles
English summary
Maruti has launched the Limited Edition of their Swift. Maruti Swift base variants - LXi (Petrol) and LDi (Diesel) are now available in new limited DLX edition. Prices for Swift DLX petrol start at Rs. 4.54 lakh, while the diesel model starts at Rs. 5.95 lakh. Swift DLX edition is offered with Sony FM music system with Bluetooth, all four power windows, central locking etc...
Story first published: Wednesday, July 13, 2016, 17:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X