புதிய டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் சொகுசு செடான் அறிமுகம்

By Ravichandran

பொலிவுகூட்டபட்ட புதிய டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் சொகுசு செடான் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

புதிய டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் சொகுசு செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய டெஸ்லா மாடல் எஸ்...

புதிய டெஸ்லா மாடல் எஸ்...

முந்தைய மாடலில் வித்தியாசமாக காட்சி அளித்து கொண்டிருந்த கிரில், இந்த புதிய டெஸ்லா மாடல் எஸ் மாடலில் அகற்றபட்டுள்ளது.

இந்த புதிய டெஸ்லா மாடல் எஸ், அதன் உடன்பிறப்பு காரான மாடல் எக்ஸ் போல் காட்சி அளிக்கிறது.

புதிய டெஸ்லா மாடல் எஸ், முன் பகுதியின் மத்தியில் மிக மெல்லிய மீசை போன்ற அமைப்பிலான கிரில் கொண்டுள்ளது. இங்கு தான், டெஸ்லா பேட்ஜும் பொருத்தபட்டுள்ளது.

ஹெட்லேம்ப்கள்;

ஹெட்லேம்ப்கள்;

புதிய டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் செடானில் சிறு மாற்றங்கள் செய்யபட்டு, தற்போது எல்இடி யூனிட்களாக உள்ளது.

இவை 14 3-நிலை டைனமிக் டர்னிங் லைட்களாக உள்ளது.

ட்ரிம் ஆக்சென்ட்கள்;

ட்ரிம் ஆக்சென்ட்கள்;

புதிய டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் செடான், 2 புதிய ட்ரிம் ஆக்சென்ட்கள் கொண்டுள்ளது.

அவை, ஃபிகர்ட் ஆஷ் வுட் மற்றும் டார்க் ஆஷ் வுட். ட்ரிம் ஆக்சென்ட்கள், மாடல் எக்ஸ் காரின் ‘மெடிக்கல் கிரேட்' ஹெச்இபிஏ ஏர் ஃபில்ட்ரேஷன் உள்ளது. இது பயோ-வெபன் டிஃபன்ஸ் மோட் செம்மையாக இயங்க ஏதுவாக உள்ளது.

பவர் யூனிட்;

பவர் யூனிட்;

புதிய டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் செடானில் உள்ள பவர் யூனிட்களை டெஸ்லா நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. இதனால், புதிய டெஸ்லா மாடல் எஸ் காரின் ரேஞ்ச் கூடியுள்ளது.

சார்ஜிங் நேரம்;

சார்ஜிங் நேரம்;

புதிய டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் செடானில், முன்னதாக இருந்த 40 ஆம்பயர் சார்ஜிங் அமைப்பு, தற்போது 48 ஆம்பயர் என்ற அளவில் உயர்த்தபட்டுள்ளது. இதனால் சார்ஜிங் நேரம் குறைகிறது.

மேலும், தேர்வு முறையிலான 72 ஆம்பயர் அளவிலான சார்ஜர் வழங்கபடுகிறது. இதனால், சார்ஜிங் பணிகளை வெகு சீக்கிரத்தில் செய்து கொள்ள முடிகிறது.

செயல் திறன்;

செயல் திறன்;

புதிய டெஸ்லா மாடல் எஸ் பி90டி, நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 3 நொடிகளில் எட்டிவிடுகிறது. இந்த திறன் லுடிக்ரஸ் மோட் மூலம் இயங்கும் போது வெளிபடுகிறது.

லுடிக்ரஸ் மோட்-டில், ட்யூவல் மோட்டார் சிஸ்டம் கொண்டு இயங்கும் போது, 762 பிஹெச்பியும், 976 என்எம் டார்க்கையும் வெளியாகிறது.

டெலிவரி;

டெலிவரி;

புதிய டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் செடானின் டெலிவரி வரும் மே மாதம் துவங்கும் என அறிவிக்கபட்டுள்ளது.

விலைகள்;

விலைகள்;

புதிய டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் செடானின் விலைகள் 71,500 டாலர்களில் துவங்கி 147,500 டாலர்கள் வரை செல்கிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பிஎம்டபிள்யூ, ஆடி கார்களை ஓவர்டேக் செய்த டெஸ்லா மாடல் எஸ் கார்!

ராணுவ உடுப்பு அணிந்த தெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார்!

டெஸ்லா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Tesla has launched their refreshed Model S electric luxury sedan. The new Model S looks more like its SUV sibling, the Model X. Tesla Model S P90D could hit 100km/h from a dead stop in under 3 seconds. New Model S deliveries starts in May. Prices for new Model S starts at $71,500 and goes up to $147,500. To know more about New Model S, check here...
Story first published: Friday, April 15, 2016, 16:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X