புதிய 2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் கார் பெங்களூருவில் அறிமுகம்

By Ravichandran

போர்ஷே நிறுவனம், பொலிவு கூட்டப்பட்ட புதிய 2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரை, பிராந்திய அளவில் பெங்களூருவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தனர்.

புதிய போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் கார் பற்றிய அதிகப்படியான விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2016 போர்ஷே 911...

2016 போர்ஷே 911...

பொலிவு கூட்டப்பட்ட புதிய போர்ஷே 911, ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் போர்ஷே நிறுவனம் தயாரித்து வழங்கும் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும்.

முதன் முதலாக, இது 2015 செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற ஃபிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தபட்டது. இது கடந்த மாத இறுதியில், இந்திய அளவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இஞ்ஜின் வகை;

இஞ்ஜின் வகை;

2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் கரீரா, கரீரா எஸ், டர்போ மற்றும் டர்போ எஸ் ஆகிய வேரியன்ட்கள், ட்வின்-டர்போ ஃபிளாட்-சிக்ஸ் வகை இஞ்ஜின் கொண்டுள்ளன.

இஞ்ஜின் கொள்ளளவு;

இஞ்ஜின் கொள்ளளவு;

2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் கரீரா மற்றும் கரீரா எஸ் ஆகிய வேரியன்ட்கள் 2,981 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது.

டர்போ மற்றும் டர்போ எஸ் ஆகிய வேரியன்ட்களுக்கு 3,800 சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பவர் மற்றும் டார்க்;

பவர் மற்றும் டார்க்;

2,981 சிசி இஞ்ஜின் உடைய 2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் கரீரா வேரியன்ட், 365 பிஹெச்பியையும், 450 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் மிக்கது.

2,981 சிசி இஞ்ஜின் கொண்டுள்ள 2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் கரீரா எஸ் வேரியன்ட், 414 பிஹெச்பியையும், 500 என்எம் டார்க்கையும் திறன் உடையதாகும்.

3,800 சிசி இஞ்ஜின் உடைய 2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் டர்போ வேரியன்ட், 533 பிஹெச்பியையும், 660 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

3,800 சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ள 2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் டர்போ எஸ் வேரியன்ட், 572 பிஹெச்பியையும், 700 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் கரீரா, கரீரா எஸ், டர்போ மற்றும் டர்போ எஸ் ஆகிய வேரியன்ட்களின் இஞ்சின்கள், 7-ஸ்பீட் பிடிகே டியூவல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

செயல் திறன்;

செயல் திறன்;

2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் கரீரா வேரியன்ட், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 4.2 நொடிகளில் எட்டிவிடும்.

கரீரா எஸ் வேரியன்ட், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 3.9 நொடிகளில் எட்டும்.

2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் டர்போ வேரியன்ட், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 3.0 நொடிகளில் எட்டும் திறன் உடையதாகும்.

டர்போ எஸ் வேரியன்ட், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 2.9 நொடிகளில் எட்டும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் கரீரா வேரியன்ட், ஒரு லிட்டருக்கு 13.3 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் எரிபொருள் திறன் உடையதாகும்.

கரீரா எஸ் வேரியன்ட், ஒரு லிட்டருக்கு 13 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் மிக்கதாகும்.

2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் டர்போ வேரியன்ட், ஒரு லிட்டருக்கு 11 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் உடையதாக உள்ளது.

டர்போ எஸ் வேரியன்ட், ஒரு லிட்டருக்கு 10.75 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் உடையதாகும்.

டிரைவிங் மோட்கள்;

டிரைவிங் மோட்கள்;

போர்ஷே நிறுவனம், இந்தியாவில் விற்பனை செய்யும் அனைத்து 911 வேரியன்ட்களுக்கும் ஸ்போர்ட் குரோனோ பேக்கேஜ் பொருத்தபட்டுள்ளன.

இந்த ஸ்போர்ட் குரோனோ பேக்கேஜ் மூலம் டிரைவர்களுக்கு, நார்மல், ஸ்போர்ட், ஸ்போர்ட் ப்ளஸ் மற்றும் இன்டிவிஜிவல் ஆகிய 4 டிரைவிங் மோட்களை வழங்குகிறது.

ஃப்யூவல் டேங்க்;

ஃப்யூவல் டேங்க்;

2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் கரீரா வேரியன்ட், 64 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்யூவல் டேங்க் கொண்டுள்ளது.

போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் கரீரா எஸ் வேரியன்ட், 64 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்யூவல் டேங்க் கொண்டுள்ளது.

2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் டர்போ வேரியன்ட், 68 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்யூவல் டேங்க் கொண்டுள்ளது.

2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் டர்போ எஸ் வேரியன்ட், 68 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்யூவல் டேங்க் கொண்டுள்ளது.

ஸ்போர்ட் ரெஸ்பான்ஸ் பட்டன்;

ஸ்போர்ட் ரெஸ்பான்ஸ் பட்டன்;

2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரில், ஸ்போர்ட் ரெஸ்பான்ஸ் பட்டன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்போர்ட் ரெஸ்பான்ஸ் பட்டன், உபயோகிப்பதனால் 20 நொடிகளுக்கு அதிகப்படியான ஆக்சிலரேஷனுக்கு இஞ்ஜின் ஆயத்தம் செய்யப்படுகிறது.

2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் டர்போ மற்றும் டர்போ எஸ் வேரியன்ட்களில், 50 என்எம் வரையிலான டார்க் கூடுதலாக வெளியாகிறது.

ரியர் வீல் ஸ்டீயரிங்;

ரியர் வீல் ஸ்டீயரிங்;

இதோடு மட்டுமல்லாமல், போர்ஷே நிறுவனம், தங்கள் கார்களுக்கு ரியர் வீல் ஸ்டீயரிங்-கையும் பொருத்தியுள்ளனர்.

இதனால், முன் சக்கரங்களை காட்டிலும், பின் சக்கரங்கள் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் எதிர் திசையில், நகர்கிறது. இதனால், மூலைகளில் காரை இயக்கும் போது கூடுதல் வசதி கிடைக்கிறது.

டிசைன்;

டிசைன்;

போர்ஷே நிறுவனம், தங்களின் கார்களில், அதிரடி டிசைன் மாற்றங்களை ஒரேடியாக மேற்கொள்வதில்லை. அந்த வகையில், 2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரிலும் பெரிய அளவிலான டிசைன் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் இரு பகுதிகளிலும் புதிய பம்பர்கள் இணைக்கபட்டுள்ளது. இதன் முன் பகுதியில், ஆக்டிவ் ஏர் இன்டேக்குள் உள்ளது.

இதன் பின் பகுதியில் உள்ள இஞ்ஜினை கூல் செய்வதற்காக வென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ரியர்;

ரியர்;

2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் ரியர் பகுதியில், எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் உடைய புதிய ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், இதன் டெயில் லேம்ப்களில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய இஞ்ஜின் கவரும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்போர்ட் குரோனோ பேக்கேஜ்;

ஸ்போர்ட் குரோனோ பேக்கேஜ்;

ஸ்போர்ட் குரோனோ பேக்கேஜ் பொருத்தப்பட்டுள்ள போர்ஷே கார்களின் ஸ்டீயரிங் வீலில், புதிய 4-மோட் ரோட்டரி ஸ்விட்ச் நாப் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு, 918 ஹைப்பர் காரில் இருந்து ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு;

பொழுதுபோக்கு;

2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரில், பிசிஎம் எனப்படும் போர்ஷே கம்யூனிகேஷன் மேனேஜ்மென்ட் டச்ஸ்கிரீன் சிஸ்டம் உள்ளது.

இதன் மூலம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ ஆகிய இரண்டையும் உபயோகிக்கும் வசதிகள் உள்ளன.

போட்டி;

போட்டி;

2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் கார், மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி, ஜாகுவார் எஃப் டைப், ஃபெராரி 488 ஜிடிபி மற்றும் லம்போர்கினி ஹுராகேன் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

மேலும், ஃபெராரி 488 ஜிடிபி மற்றும் லம்போர்கினி ஹுராகேன் மாடல்கள், போர்ஷே 911 டர்போ மற்றும் போர்ஷே 911 டர்போ எஸ் வேரியன்ட்களுக்கு போட்டியாக விளங்குகிறது.

விலை;

விலை;

2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் நுழைவு நிலை வேரியன்ட், 1,44,86,000 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் கர்நாடகா) விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது

இந்தியாவில் துரு போர்வை போர்த்தபட்ட முதல் போர்ஷே 911 படங்கள் வெளியாகியது

போர்ஷே தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles

English summary
German sports car maker Porsche has launched their facelifted 2016 Porsche 911 Super Car regionally in Bangalore. Porsche has fitted all their 911 variants on sale in india with Sport Chrono package, which gives drivers four different driving modes — Normal, Sport, Sport Plus and Individual. Porsche has fitted their cars with rear-wheel steering, which slightly turn in opposite direction. To know more, check here...
Story first published: Saturday, July 23, 2016, 19:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X