இங்கிலாந்து ராணி எலிசபெத், 90-வது பிறந்தநாளில் கஸ்டம் ரேஞ்ச்ரோவரில் வலம்

By Ravichandran

இங்கிலாந்து ராணி எலிசபெத் உலக அளவில் மிக முக்கியமான மனிதர்களில் ஒருவர் ஆவார். இவர் தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தனது கஸ்டம் ரேஞ்ச்ரோவர் காரில் லண்டன் நகரில் வலம் வந்தார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் குறித்தும், அவருக்கு கார்கள் மீதுள்ள பற்று குறித்தும் கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்வோம்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்...

இங்கிலாந்து ராணி எலிசபெத்...

இங்கிலாந்து ராணி எலிசபெத், ஏப்ரல் 21-ஆம் தேதி, 1926 - ல், லண்டனில் உள்ள மேஃபேர் என்ற இடத்தில் பிறந்தார்.

இவர் இங்கிலாந்து ராணியாக 1952-ஆம் ஆண்டு பொறுப்பு ஏற்றார். பிரின்ஸ் ஃபிலிப் இவரின் கணவர் ஆவார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் தான், சரித்திரத்திலேயே மிக நீண்ட காலம் அரியணையில் (சுமார் 64 ஆண்டுகள்) இருப்பவர் ஆவார்.

90-வது பிறந்தநாள்;

90-வது பிறந்தநாள்;

இங்கிலாந்து ராணி எலிசபெத், ஏப்ரல் 21-ஆம் தேதி தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத், இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தனது கஸ்டம் ரேஞ்ச்ரோவர் காரில் லண்டன் நகரில் வளம் வந்தார்.

ராணி எலிசபெத்தின் ரேஞ்ச்ரோவர்...

ராணி எலிசபெத்தின் ரேஞ்ச்ரோவர்...

இங்கிலாந்து ராணி எலிசபெத் கொண்டுள்ள லாங்க் வீல்பேஸ் ரேஞ்ச்ரோவர் காரின் சீட்கள் முழுவதுமாக அகற்றபட்டுள்ளது. மேலும், இந்த காரின் மேற்கூரை, டி-பிள்ளர் ஆகியவையும் அகற்றபட்டுள்ளது.

உண்மையில், இந்த காரின் மோட்-டில், மேற்கூரையே இல்லை. இந்த ரேஞ்ச்ரோவர் கார், ஸ்டேஜ்கோச் ஸ்டைலில் ஆன சீட்களும், ரூஃப்லைன் சுற்றி ரெய்லிங் கொண்டுள்ளது.

கொடி;

கொடி;

இங்கிலாந்து ராணி எலிசபெத் கொண்டுள்ள ரேஞ்ச்ரோவர் காரின் மீது முன் பக்கத்தில் இங்கிலாந்து அரச குடும்பத்தின் சின்னம் (Royal Standard Of The United Kingdom) கொண்ட கொடி உள்ளது.

இந்த கொடி காரின் மீது வைக்கபட்டு வருவதன் அர்த்தம் யாதெனில், இங்கிலாந்து ராணி எலிசபெத் வந்து கொண்டு கொண்டிருக்கிறார் என்பதை குறிக்கிறது.

ராணி எலிசபெத்தின் எளிமை;

ராணி எலிசபெத்தின் எளிமை;

கார்கள் விஷயத்தில், இங்கிலாந்து ராணி எலிசபெத் மிகவும் வித்தியாசமானவர். சில அரச குடும்பத்தினர், கார்களின் வலம் வந்து அடிக்கடி மக்களின் பார்வையிலும், ஊடகங்களின் பார்வையில் வர விரும்புவது வழக்கம்.

ஆனால், இங்கிலாந்து ராணி எலிசபெத் அப்படிபட்ட விளம்பர நடவடிக்கைகளை விரும்பாதவர் ஆவார்.

அவர் மக்களிடம் இல்லாத போது தான், வெளியே பயணம் செய்ய விரும்புவார்.

கார்கள் மீதான பற்று...

கார்கள் மீதான பற்று...

இங்கிலாந்து ராணி எலிசபெத்திற்கு கார்களின் மீதான பற்று, இரண்டாவது உலக போர் காலத்தில் இருந்தே துவங்கியது.

2-வது உலக போர் நடைபெற்ற காலத்தில், இங்கிலாந்து ராணி எலிசபெத், இங்கிலாந்து ராணுவத்தின் (Women's Auxiliary Territorial service) மகளிர் பிரிவில், டிரைவர் மற்றும் மெக்கானிக் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டிருந்தார்.

லைசன்ஸ் இல்லாதவர்...

லைசன்ஸ் இல்லாதவர்...

இன்னொரு அதிசயதக்க செய்தி என்னவென்றால், இங்கிலாந்து ராணி எலிசபெத்திற்கு இன்றைய தேதி வரை டிரைவர் லைசன்ஸ் இல்லவே இல்லை.

உண்மையில், உலகிலேயே இங்கிலாந்து ராணி எலிசபெத்திற்கு மட்டும் டிரைவர் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ராணி எலிசபெத்தின் புதிய கார்...

ராணி எலிசபெத்தின் புதிய கார்...

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கார் கேரேஜில் சமீபத்திய வரவாக அமைந்த கார், பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி ஆகும்.

இந்த பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி, இந்தியாவில் இந்த ஏப்ரல் 22-ல் தான் அறிமுகம் செய்யபட்டது.

சிறப்பு தகவல்;

சிறப்பு தகவல்;

இங்கிலாந்து ராணி எலிசபெத், 64 ஆண்டுகள் ராணியாக இருக்கும் காலகட்டத்தில் இன்று வரை அனைத்து விதமான அளவிலும், வகையிலும் கார்களை உபயோகித்துள்ளார்.

அவர் உபயோகித்த, உபயோகிக்கும் அனைத்து கார்களுக்கும் இருக்கும் மிக முக்கியமான ஒற்றுமை, அவை அனைத்தும் இங்கிலாதில் தயாரிக்கபட்டவை ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ கார் விற்பனைக்கு வந்தது!

இங்கிலாந்து ராணிக்கு முதல் பென்ட்லீ பென்டைகா... மான் வேட்டைக்கு செல்ல பயன்படுத்துவார்!!

அரச குடும்பத்தினரின் கார்களும், அதில் மறைந்திருக்கும் சுவாரஸ்யங்களும்...!!!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

கார்களுடன் இங்கிலாந்து ராணி எலிசபெத் - கூடுதல் படங்கள்

Most Read Articles

English summary
Her majesty Queen Elizabeth II celebrated her 90th Birthday recently. Queen Showed off her Custom Range Rover on her 90th Birthday in London, England. This Range Rover car carries the flag of Royal Standard Of The United Kingdom which basically means the " The queen is coming through". To know more about Range Rover car of Queen Elizabeth II, check here...
Story first published: Sunday, April 24, 2016, 8:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more