ரேஞ்ச்ரோவர் சென்டினல் எஸ்யூவி, டெஃப்எக்ஸ்போ 2016-ல் காட்சிபடுத்தபட்டது

By Ravichandran

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச்ரோவர் சென்டினல் எஸ்யூவி, டெஃப்எக்ஸ்போவில் 2016-ல் காட்சிபடுத்தபட்டது.

சமீபத்தில் காட்சிபடுத்தபட்ட ரேஞ்ச் ரோவர் சென்டினல் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

ரேஞ்ச்ரோவர் சென்டினல்...

ரேஞ்ச்ரோவர் சென்டினல்...

ரேஞ்ச்ரோவர் சென்டினல் எஸ்யூவி, லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஸ்பெஷல் வெஹிகிள் ஆபரேஷன்ஸ் அல்லது எஸ்விஓ எனப்படும் பிரிவு மூலம் தயாரிக்கபட்டுள்ளது.

இது இங்கிலாந்தில் உள்ள லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஆக்ஸ்ஃபோர்ட் மையத்தில் (ஆக்ஸ்ஃபோர்ட் ரோட் ஃபெசிலிட்டி) உருவாக்கபட்டுள்ளது. இது ஸ்டாண்டர்ட் வீல்பேஸ் ரேஞ்ச்ரோவர் ஆட்டோபயோகிராஃபி வாகனத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

டெஃப்எக்ஸ்போ 2016...

டெஃப்எக்ஸ்போ 2016...

டெஃப்எக்ஸ்போ 2016 என்ற பெயரிலான கண்காட்சி கோவாவில் நடைபெற்றது. டெஃப்எக்ஸ்போ 2016 என்ற பெயரிலான இந்த கண்காட்சி, டெஃப்எக்ஸ்போ-வின் 9-வது பதிப்பு ஆகும்.

நிலம், கடல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான இந்த டெஃப்எக்ஸ்போ கண்காட்சி, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.

பாதுகாப்பு அமைச்சகம் நடத்தும் இந்த கண்காட்சியை, பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. மனோஹர் பார்ரிகர் துவக்கி வைத்தார்.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

சென்டினல் எஸ்யூவி, மிக உயரிய அளவிலான பாதுக்காப்பு வழங்கும் திறன் கொண்டுள்ளது என லேண்ட்ரோவர் நிறுவனம் தெரிவிக்கிறது.

மேலும், இந்த சென்டினல் , தொலைதூர பாலிஸ்டிக் ஆபத்துகளையும் தாங்கும் வகையிலான விஆர்8 ஸ்டாண்டர்ட் கொண்டுள்ளது. இதற்கு அர்த்தம், இது காரின்

உடல்பாகங்களில் துளையிட்டு, தீ மூட்டும் குண்டுகளில் (armour piercing incendiary bullets) இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும், டிஎம்51 கிரனேட் குண்டு

வெடிப்புகளில் இருந்தும் பாதுகாப்பு வழங்குகிறது.

மேலும், 15 கிலோகிராம்கள் வரையிலான எடை கொண்ட டிஎன்டி மூலம் நிகழ்த்தப்படும் குண்டு வெடிப்புகளில் இருந்தும், சென்டினல் எஸ்யூவி பாதுகாப்பு அளிக்கிறது.

விஆர்8 ஸ்டாண்டர்ட் சான்றிதழ்;

விஆர்8 ஸ்டாண்டர்ட் சான்றிதழ்;

ரேஞ்ச்ரோவர் சென்டினல் எஸ்யூவிக்கு, இந்த விஆர்8 ஸ்டாண்டர்ட் சான்றிதழ் வழங்கபடுவதற்கு ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளது. சென்டினல் எஸ்யூவி, மிக அதிக வலுவான (சூப்பர்-ஹை-ஸ்ட்ரெங்த்) ஸ்டீலில் ஆன 6 துண்டுகளால் செய்யபட்ட பயணியர் கவச கூடு (armoured passenger cell) போன்ற அமைப்பு உள்ளது.

மேலும், பல நிலைகளினால் லேமினேஷன் செய்யபட்ட கவசம் போன்ற கிளாஸ் (armoured privacy glass), பாதிப்புகள் ஏற்பட்டால் தானாக சரி செய்து கொள்ளும் எரிபொருள் டேங்க் (self-healing fuel tank), ஆண்டி டேம்பர் எக்ஸ்ஹாஸ்ட் (anti-tamper exhaust) உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ளது.

ரேஞ்ச்ரோவர் சென்டினல் எஸ்யூவி, ரன்-பிளாட் டயர்கள் கொண்டுள்ளது. இந்த டயர்கள் முழுமையாக காற்று இழந்துவிட்ட நிலையிலும் இயங்கும் திறன் கொண்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ரேஞ்ச்ரோவர் சென்டினல் எஸ்யூவி, 3.0 லிட்டர், சூப்பர் சார்ஜ்ட், வி6 இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 340 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

இதன் இஞ்ஜின், ஸ்பெஷலாக கேலிபரேட் செய்யபட்ட இசட்எஃப் 8-ஸ்பீட் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது. இதன் மூலம் தான், 4 சக்கரங்களுக்கும் பவர் கடத்தபடுகிறது.

அறிமுகம், விலை;

அறிமுகம், விலை;

ரேஞ்ச்ரோவர் சென்டினல் எஸ்யூவி, எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் என்பது குறித்தோ அல்லது எந்த விலையில் அறிமுகம் செய்யபடும் என்பது குறித்தோ எந்த விதமான தகவல்களையும் லேண்ட்ரோவர் நிறுவனம் வெளியிடவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரேஞ்ச்ரோவர் ஆட்டோபயோகிராஃபி சொகுசு எஸ்யூவி வாங்கிய நடிகர் அமிதாப்பச்சன்

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்

ரேஞ்ச்ரோவர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Land Rover showcased their Range Rover Sentinel at 2016 DefExpo India in Goa. Range Rover Sentinel is made by Land Rover's Special Vehicle Operations (SVO) Division. Sentinel SUV is based on standard wheelbase Range Rover Autobiography. Range Rover Sentinel SUV is verified to VR8 standard against ballistic threats. To know more, check here.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X