ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின், ஏஎம்டி தேர்வுகள் தீபாவளிக்கு முன்னதாக அறிமுகம்

By Ravichandran

ரெனோ க்விட் ஹேட்ச்பேக்கின் 1.0 லிட்டர் இஞ்ஜின் மற்றும் ஏஎம்டி ஆகியவை வரும் தீபாவளிக்கு முன்னதாக அறிமுகம் செய்யபடும்.

ரெனோ நிறுவனம் சார்பாக செய்யபடும் செய்யப்பட உள்ள இந்த அறிமுகங்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

1.0 லிட்டர் மற்றும் ஏஎம்டி...

1.0 லிட்டர் மற்றும் ஏஎம்டி...

1.0 லிட்டர் இஞ்ஜின் கொண்ட க்விட் ஹேட்ச்பேக்கை ரெனோ நிறுவனம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தியது.

தற்போது க்விட் காருக்கான 1.0 லிட்டர் இஞ்ஜின் மற்றும் ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனை (Automated Manual Transmission) இந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்கு முன்னதாக அறிமுகம் செய்யபடும் என ரெனோ நிறுவனம் தெரிவிக்கிறது.

முந்தைய வடிவம்;

முந்தைய வடிவம்;

ரெனோ க்விட், முன்னதாக இன்லைன், 3-சிலிண்டர்கள் உடைய 800 சிசி பெட்ரோல் இஞ்ஜின் கொண்டிருந்தது. ரெனோ நிறுவனம் சார்பாக வழங்கப்படும் ரெனோ க்விட், இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யபட்ட வாகனங்களில் மிகவும் புகழ்மிக்க வாகனமாக உள்ளது.

இந்த 1.0 லிட்டர் இஞ்ஜின் மற்றும் ஏஎம்டி வசதிகளின் சேர்ப்பு மூலம் ரெனோ நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பினை வழங்குகிறது.

1.0 லிட்டர் இஞ்ஜின்;

1.0 லிட்டர் இஞ்ஜின்;

ரெனோ க்விட் ஹேட்ச்பேக்கின் 1 லிட்டர் இஞ்ஜின், சுமாராக 67 பிஹெச்பியை வெளிபடுத்தும் வகையில் டியூன் செய்யபட்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

க்விட் ஹேட்ச்பேக்கின் 1 லிட்டர் இஞ்ஜினை, 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் ரெனொ இஞ்ஜினியர்கள் இணைத்துள்ளனர்.

முக்கிய விசேஷம்;

முக்கிய விசேஷம்;

அதிர்ஷ்டவசமாக, ஏஎம்டி தேர்வானது, ரெனோ க்விட் ஹேட்ச்பேக்கின் 800 சிசி மற்றும் 1,000 சிசி ஆகிய 2 கொள்ளளவு கொண்ட இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர்;

ரெனோ க்விட் ஹேட்ச்பேக் காருடைய புதிய மாடல்களின் வெளிப்புற அமைப்புகளில் எந்த விதமான மாற்றங்களும் செய்யபடாது.

1.0 லிட்டர் பேட்ஜ்;

1.0 லிட்டர் பேட்ஜ்;

ரெனோ நிறுவனம், 1.0 லிட்டர் மாடல்களை வெரும் ஏஎம்டி தேர்வுடன் மட்டும் வழங்கும்.

மேலும், தங்களின் 1.0 லிட்டர் இஞ்ஜின் கொண்ட மாடல்களை, தனியாக அடையாளபடுத்த கூடிய வகையிலான பிரத்யேக பேட்ஜுடன் வழங்குகிறது. இது, பிற மாடல்களில் இருந்து வேறுபடுத்துவதற்காக செய்யபடுகிறது.

பிரத்யேக நிறங்கள்;

பிரத்யேக நிறங்கள்;

1.0 லிட்டர் அளவிலான ரெனோ க்விட் ஹேட்ச்பேக், பிரத்யேக வண்ணங்களில் வழங்கப்பட உள்ளது.

இது, 1.0 லிட்டர் மாடல்களை, முந்தைய பிற மாடல்களில் இருந்து வேறுபடுத்துவதற்காக செய்யபடுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

ரெனோ க்விட் ஹேட்ச்பேக்கில், ட்யூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் தேர்வு முறையில் வழங்கப்படுகிறது.

போட்டி;

போட்டி;

ரெனோ க்விட் ஹேட்ச்பேக்கின் 1.0 லிட்டர் மாடல் அறிமுகம் செய்யபடும் போது, ஏஎம்டி தேர்வு உடைய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மாடலுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

ஏஎம்டி வசதியுடன் வெளியாகும் ரெனோ க்விட் ஹேட்ச்பேக்கின் 1.0 லிட்டர் மாடல், தற்போது கிடைக்கும் மாடல்களை காட்டிலும் விலை கூடுதலாக இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

1.0 லிட்டர் இஞ்ஜின் கொண்ட ரெனோ க்விட் கார் விரைவில் அறிமுகம்

ரெனோ க்விட் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

க்விட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Renault Kwid with 1.0-Litre Engine and AMT (Automated Manual Transmission) are to be launched prior to Diwali. Renault would only provide its new Kwid with an AMT and 1.0-litre badge to differentiate their models. These 1.0-litre models could get different colours to separate itself from previous models. To know more about 1.0 Litre new Kwid, check here...
Story first published: Tuesday, April 12, 2016, 20:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X