சென்னையில் பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வாக ‘ஸ்பாட் பார்க்கிங்’ ஆப் விரைவில் அறிமுகம்

By Ravichandran

சென்னை பெருநகரில் பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வாக 'ஸ்பாட் பார்க்கிங்' என்ற பெயரில் புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்று விரைவில் அறிமுகம் செய்யபட உள்ளது.

சென்னை மற்றும் அதை போன்ற எந்த ஒரு மாநகரிலும் பார்க்கிங்கிற்கான தகுந்த இடத்தை கண்டுபிடிப்பது மிகுந்த கடினமான விஷயமாக உள்ளது. இந்த பிரச்னை தீர்பதற்காக சென்னையில் ஸ்பாட் பார்க்கிங் என்ற ஒரு புத்திசாலித்தனமான தீர்வு ஏற்கபட உள்ளது.

இந்த ஆப், ஒரு மென்பொருள் நிறுவனத்தின் மூலம் உருவாக்கபட்டுள்ளது. இந்த ஸ்பாட் பார்க்கிங் நடைமுறைபடுத்துவது தொடர்பாக, ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் சென்னை மாநகராட்சிக்கு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

ஸ்பாட் பார்க்கிங்கானது, சென்னை நகரில் 4 சக்கர வாகனங்களுக்காக ஏற்ற வகையில் உள்ள பார்க்கிங் இடங்கள் தொடர்பான ஒரு இன்வெண்ட்ரியை (தொகுப்பு) சேகரிக்க உள்ளது.

இது தொடர்பாக, இந்த மென்பொருள் நிறுவன குழு ஷாப்பிங் மால் உரிமையாளர்கள், கார்பரேஷன் பார்க்கிங் இடங்கள், தனியார் பார்க்கிங் இடங்கள் மற்றும் ஹோட்டல் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கு சம்பந்தபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இவ்வாறு, சென்னை நகரம் முழுவதும் ஆங்காங்கே சுமார் 1,000 பார்க்கிங் இடங்கள் உள்ளது.

ஸ்பாட் பார்க்கிங் மூலம் அமல்படுத்தபடும் நிலையில், எந்த ஒரு டிரைவரும் தனது காரை பார்க்கிங் செய்ய விருப்பபடும் போது, அவருக்கு அனைத்து பார்க்கிங் இடங்களின் பட்டியலில் காண்பிக்கபடும். அதிலிருந்து, அந்த வாகன ஒட்டி தனக்கு அருகிலுள்ள பார்க்கிங் இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், விருப்பபட்டால் அந்த டிரைவர் இந்த ஆப் மூலமாகவும் பார்க்கிங்கிற்கான கட்டணத்தையும் செலுத்த முடியும்.

spott-parking-app-to-be-launched-in-chennai-soon

சென்னையில் பார்க்கிங் நடைமுறைகள் செம்மைபடுத்தபட்டால், சென்னை மாநகராட்சிக்கு சுமார் 450 கோடி ரூபாய் வரையிலான வருவாய் கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த முயற்சிகள் மேற்கொண்டுவருய்ம் ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் கூறுகிறார்.

பார்க்கிங்கிற்கான இடங்கள் எங்கெங்கு உள்ளன என்பது அடையாளம் கண்ட பிறகு, சென்னை மாநகராட்சி 25 ஸ்லாட்களுக்கு ஒரு நபரை கண்கானிக்க நியமிக்கலாம் என்று சுரேஷ் மேனன் கூறுகிறார். மேலும், இப்படி செய்வதன் மூலம், ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், சென்னை நகரில் பொதுப்படையான பாதுகாப்பும் மேம்படும் என்றும் சுரேஷ் மேனன் யோசனைகளை வழங்குகிறார்.

சென்னை போன்ற மாநகருக்கு இத்தகைய புத்திசாலித்தனமான தீர்வு கிடைத்தால், இது கட்டாயமாக வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

Most Read Articles
English summary
A new Parking system called Spott Parking shall be launched in Chennai soon. Spott Parking is an Application which would contain inventory of whole list of Parking Spots in Chennai. As and when a Driver wants to park his vehicle this Spott Parking parking would display the list of Parking Spaces and even Parking charges can be paid through this app.
Story first published: Tuesday, February 16, 2016, 10:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X