இந்தியாவில் சாங்யாங் ரெக்ஸ்டன் கார்களை ரீகால் செய்கிறது மஹிந்திரா!

By Meena

தென் கொரியாவின் சாங்யாங் நிறுவனமும், மஹிந்திரா அண்டு மஹிந்திராவும் இணைந்து இந்தியாவில் அறிமுகப்படுத்திய பிரம்மாண்ட எஸ்யூவி மாடல் ரெக்ஸ்டன். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2012-இல் அந்த கார், நம் நாட்டு மார்க்கெட்டுக்கு வந்தது.

அதன் வடிவமைப்பும், தொழில்நுட்பத் திறனும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்ததால், ரெஸ்டனின் விற்பனையும் சொல்லிக் கொள்ளும்படி நன்றாகவே இருந்தது.

சாங்யாங் ரெக்ஸ்டன்

2.7 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் வந்த அந்த காரில், 162 பிஎச்பி திறன் அல்லது 184 பிஎச்பி திறன் என இருவேறு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டன. விலை ரூ.21.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது (மும்பை எக்ஸ் ஷோ ரூம் விலை).

இப்படி மார்க்கெட்டில் ஒரு சிறப்பிடத்தைப் பிடித்து, அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராக இருந்த அந்த கார், திடீரென புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது. அதாவது, ரெஸ்டன் காரின் டிரைவ் சாஃப்ட் எனப்படும் டார்க் திறனை கடத்தும் உதிரிபாகம் சரிவர இயங்குவதில்லை என்ற புகார் பரவலாக எழுந்தது.

இதையடுத்து சர்ச்சைக்குரிய அந்த கார்களை திரும்பப் பெறுவதாக முடிவெடுத்துள்ளது சேங்யாங் - மஹிந்திரா நிறுவனம். எந்த மாடல்களில் அந்தப் பிரச்னைகள் வந்துள்ளன? அதற்கு என்ன காரணம்? எந்தெந்த பாதிப்புகளின் அடிப்படையில் கார்கள் திரும்பப் பெறப்படவுள்ளன? என்பன குறித்த எந்தத் தகவல்களையும் அந்நிறுவனங்கள் வெளியே மூச்சு விடவில்லை. தங்கமலை ரகசியம் போல அதை அடைகாத்து வருகின்றன சேங்யாங் - மஹிந்திரா நிறுவனங்கள்.

ரெக்ஸ்டன் மாடல் கார்களை வாங்கிய வாடிக்கையாளர்களை தனிப்பட்ட முறையில் அழைத்து குறைகளைக் கேட்டறி்ந்து வருகின்றனவாம் அந்நிறுவனம். அப்படி ஏதேனும் பழுது இருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக தங்களது தொழில்நுட்பக் குழுவை அனுப்பி சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சேங்யாங் - மஹிந்திரா நிறுவனங்கள் சரி செய்து கொடுக்கின்றன. அதுவும் இலவசமாக...

இதெல்லாம் சரிதாங்க.., ஆனால் வாடிக்கையாளர்கள் இழந்த நம்பிக்கை எந்தக் குழுவை அனுப்பி மீட்டெடுக்கப் போகின்றன அந்நிறுவனங்கள்? இதுபோன்ற பிரச்னைகள் வரும் போது அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று, பொது வெளியில் விஷயத்தைச் சொல்லி பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதே நல்ல செயல்பாட்டின் வெளிப்பாடு.

ஆனால், மஹிந்திராவும் சாங்யாங் நிறுவனமும் எந்த மாடலில் பிரச்னை என்பதைக் கூட வெளியே தெரிவிக்காமல், மூடி மறைத்து வருகின்றன... இந்த சிக்கலுக்கு இது நல்ல ஒரு தீர்வாக அமையாது...

Most Read Articles
English summary
Ssangyong Issues Recall Of Rexton SUV In India For Driveshaft Issue.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X