இந்தியாவின் டாப் 10 டிராக்டர் நிறுவனங்கள் - முழு தகவல்கள்

By Ravichandran

யூடிலிட்டி வெஹிகிள் வகை அல்லது விவசாய சாதனமாக (ஃபார்மிங் எக்யுப்மெண்ட்) வகையில் உள்ள வாகனங்களில் டிராக்டர் மிக முக்கியமானதாக உள்ளது.

ஏராளமான நிறுவனங்கள், டிராக்டர் மற்றும் அது போன்ற வாகனங்களை தயாரித்து வருகின்றனர்.

இந்தியாவில் டிராக்டர்கள் தயாரிக்கும் டாப் 10 நிறுவனங்கள் குறித்த தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டிராக்டர்கள்...

டிராக்டர்கள்...

ஆட்டோமொபைல் துறையானது, கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களை தாண்டி மிக பெரியதாகும். இதில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், டிரக்குகள், பஸ்கள், யூடிலிட்டி வெஹிகிள் எனப்படும் சிறப்பு பிரயோகத்திற்கான வாகனங்கள், கப்பல்கள், படகுகள் மற்றும் விமானங்கள் உள்ளிட்ட ஏராளமானவையும் இதில் அடங்கும்.

இதனால் தான், ஆட்டோமொபல் நிறுவனங்கள் மேற்குறிப்பிட்ட வகையிலான வாகனங்களையும், யூடிலிட்டி வெஹிகிள் உள்ளிட்டவற்றையும் மும்முரமாக உற்பத்தி செய்து வருகின்றனர்.

10) ஸ்டாண்டர்ட் டிராக்டர்ஸ்;

10) ஸ்டாண்டர்ட் டிராக்டர்ஸ்;

டிராக்டர்கள் தயாரிக்கும் நிறுவனங்களில், ஸ்டாண்டர்ட் டிராக்டர்ஸ் நிறுவனமானது, இந்திய அளவில் 10-வது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனம், 1975-ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கபட்டது.

இந்த நிறுவனம், ஹார்வஸ்டர் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை உருவாக்குவதுதோடு, வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான தேர்வுகளையும் வழங்குகிறது. டெல்லியை மையமாக கொண்டு இயங்கும் ஸ்டாண்டர்ட் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையானது, லூதியானா என்ற இடத்தில் அமைக்கபட்டுள்ளது.

9) ப்ரீத் டிராக்டர்ஸ்;

9) ப்ரீத் டிராக்டர்ஸ்;

இந்தியாவின் டாப் 10 டிராக்டர் நிறுவனங்களின் பட்டியலில், ப்ரீத் டிராக்டர்ஸ் நிறுவனம் 9-வது இடத்தில் உள்ளது. இதி 1980-ஆம் ஆண்டில் நிறுவபட்டது.

ப்ரீத் டிராக்டர்ஸ் நிறுவனம், விவசாயம் தொடர்பான பல்வேறு விதமான வாகனங்களை தயாரித்து வருகிறது. 30 ஹெச்பி முதல் 90 ஹெச்பி வரையிலான திறன் கொண்ட டிராக்டர்கள் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ப்ரீத் டிராக்டர்கள் சிறந்த தேர்வாக அமைகிறது.

8) பல்வான் டிராக்டர்ஸ்;

8) பல்வான் டிராக்டர்ஸ்;

டாப் 10 டிராக்டர் நிறுவனங்களின் பட்டியலில், ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பல்வான் டிராக்டர்ஸ் 8-வது இடத்தில் உள்ளது. பூனேவை மையமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், 1957-ஆம் ஆண்டில் துவங்கபட்டது.

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம், டிராக்டர்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், வர்த்தக (கமர்ஷியல்) வாகனங்கள் மற்றும் பயணியர் (பாஸஞ்ஜர்) வாகனங்களை தயாரித்து வழங்குகிறது.

7) ஹெச்எம்டி லிமிட்டெட்;

7) ஹெச்எம்டி லிமிட்டெட்;

இந்திய அளவில், டிராக்டர்கள் தயாரிக்கும் நிறுவனங்களில், ஹெச்எம்டி லிமிட்டெட் டிராக்டர்ஸ் நிறுவனமானது, 7-வது இடத்தில் உள்ளது.

ஹெச்எம்டி என்ற பிராண்ட் பெயரை கேட்டாலே, அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஹெச்எம்டி என்ற கடிகாரம் தயாரிக்கும் நிறுவனமாக தான் உள்ளது. இதில் தவறு ஏதும் இல்லை. கடிகாரம் தயாரிக்கும் நிறுவனம், டிராக்டர்களையும் தயாரிக்கிறது.

கர்நாடகாவின் பெங்களூருவை மையமாக கொண்டு இயங்கும் ஹெச்எம்டி லிமிட்டெட் நிறுவனம் 1971-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கபட்டது.

6) நியூ ஹாலண்ட்;

6) நியூ ஹாலண்ட்;

இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் நியூ ஹாலண்ட் நிறுவனம், இந்தியாவின் டாப் 10 டிராக்டர் நிறுவனங்களின் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

நல்ல தயாரிப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்குவதினால், இந்த நிறுவனம் பிரபலமாகி கொண்டே வருகிறது.

1996-ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்களின் விற்பனை நடவடிக்கைகளை துவங்கிய இந்த நியூ ஹாலண்ட் நிறுவனம், இது வரை சுமார் 2.5 லட்சம் டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது.

5) ஜான் டீர்;

5) ஜான் டீர்;

இந்தியாவின் டாப் 10 டிராக்டர் நிறுவனங்களின் பட்டியலில், 5-வது இடத்தில் ஜான் டீர் நிறுவனம் உள்ளது. அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் இந்த ஜான் டீர் நிறுவனம், இந்தியாவில் குறிப்பிடதக்க அளவிலான விற்பனை செய்து வருகிறது.

1837-ஆம் ஆண்டில் துவங்கபட்ட இந்த ஜான் டீர் நிறுவனம், குளோபல் பார்ச்சூன் 500 என்ற உலகின் சிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலில், சுமார் 300-வது இடத்தில் உள்ளது.

4) சோனாலிகா இண்டர்நேஷனல்;

4) சோனாலிகா இண்டர்நேஷனல்;

டாப் 10 டிராக்டர் நிறுவனங்களின் பட்டியலில், பஞ்சாப்-பை மையமாக கொண்டு இயங்கும் சோனாலிகா இண்டர்நேஷனல் நிறுவனம், 4-வது இடத்தில் உள்ளது.

இந்நிறுவனம், இந்தியாவின் மிக பழமையான டிராக்டர் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

சோனாலிகா இண்டர்நேஷனல் நிறுவனம், 2004-ஆம் ஆண்டில், பயணியர்களுக்கான கார்கள் தயாரிக்கும் பணிகளிலும் ஈடுபட துவங்கியது.

3) எஸ்கார்ட்ஸ் அக்ரி மிஷனரி;

3) எஸ்கார்ட்ஸ் அக்ரி மிஷனரி;

இந்திய அளவில், டிராக்டர்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பட்டியலில், எஸ்கார்ட்ஸ் அக்ரி மிஷனரி நிறுவனம் 3-வது இடத்தில் உள்ளது. எஸ்கார்ட்ஸ் என்ற பிராண்ட் ஆனது, இந்தியாவிலும், சர்வதேச அளவில் விவசாயம் தொடர்பான தயாரிப்பதில் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற நிறுவனம் ஆகும்.

1960-ஆம் ஆண்டில் நிறுவபட்ட இந்த எஸ்கார்ட்ஸ் அக்ரி மிஷனரி நிறுவனம், இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலக அளவில் சுமார் 40 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்கிறது.

2) டஃபே (TAFE);

2) டஃபே (TAFE);

டஃபே அல்லது டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யுப்மெண்ட்ஸ் லிமிடெட் (Tractors And Farm Equipments Limited (TAFE)), இந்திய அளவில், டிராக்டர்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பட்டியலில், 2-வது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையை மையமாக கொண்டு இயங்கும் டஃபே நிறுவனம், 1960-ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கபட்டது. மஸ்ஸே, ஃபெர்குஸன் மற்றும் டஃபே உள்ளிட்டவை டஃபே நிறுவனத்தின் முக்கியமான பிராண்ட்களாக உள்ளன.

டஃபே நிறுவனம், ஐஷர் டிராக்டர் பிராண்டை, 2005-ஆம் ஆண்டில் கைபற்றியது.

1) மஹிந்திரா;

1) மஹிந்திரா;

இந்தியாவின் டாப் 10 டிராக்டர் நிறுவனங்களின் பட்டியலில், மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனம், 1-வது இடத்தில் உள்ளது.

மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனம், விற்பனையின் குறியீடுகளின் படி இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் முதன்மையான நிறுவனமாக உள்ளது.

டிராக்டர்கள் உருவாக்குவதில் கவனம் செலுவதோடு மட்டுமல்லாமல், மஹிந்திரா நிறுவனம் சிறந்த தரத்தில் ஆன, பயணியர் வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களை நல்ல முறையில் தயாரித்து வழங்குகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

12ல் லம்போர்கினி டிராக்டர்கள் அறிமுகம்: ராணிப்பேட்டையில் தயாராகிறது

மஹிந்திரா யூவோ டிராக்டர் பிராந்திய அளவில் பெங்களூருவில் விற்பனைக்கு அறிமுகம்

டிராக்டர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles

English summary
The World of automobiles involves more than just cars and motorcycles. There are electric scooters, trucks, buses, utility vehicles, farm equipments, boats, ships, and planes and much more. Tractor is a very major utility vehicle, farming equipment. Many companies makes Tractors. To know more about the Top 10 Tractor manufacturers in India, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X