டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் பெட்ரோல் வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

டொயோட்டா நிறுவனம், தங்களின் இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பெட்ரோல் வேரியன்ட்டை இன்று (ஆகஸ்ட் 8) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளனர்.

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம், இந்தியாவில் கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் என்ற கூட்டு முயற்சியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் பல்வேறு தயாரிப்புகள் விற்பனை செய்து வந்தாலும், இதன் டொயோட்டா இன்னோவா மிகவும் புகழ்பெற்ற மாடலாக உள்ளது.

கடந்த சில மாதங்களாக, இந்தியாவில், டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாசு உமிழ்வு தொடர்பான கட்டுபாடுகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தான், டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பெட்ரோல் வேரியன்ட்டை அறிமுகம் செய்துள்ளனர்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி...

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி...

டொயோட்டா நிறுவனம் தயாரிக்கும் இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, பிரிமியம் எம்பிவியாக வழங்கப்பட்டு வருகிறது.

இது முந்தைய தலைமுறை டொயோட்டா இன்னோவா எம்பிவியின் நவீன வடிவம் ஆகும்.

இது இந்த ஆண்டு மே மாதம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுகத்திற்கான கட்டாயம்;

அறிமுகத்திற்கான கட்டாயம்;

சமீப காலமாக, இந்தியாவில் மாசு உமிழ்வு தொடர்பான நெறிமுறைகள் கடுமையாகி கொண்டே வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லி மற்றும் அதனை சுற்றிலும் உள்ள பகுதிகளில் 2,000சிசி அல்லது அதற்கும் கூடுதலான கொள்ளளவு கொண்ட இஞ்ஜின் பொருத்தபட்டுள்ள வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றம் மூலம் தடை விதிக்கபட்டுள்ளது.

இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் டீசல் வேரியன்ட், 2,000சிசி-க்கும் கூடுதலான கொள்ளளவு உடைய இஞ்ஜின் கொண்டுள்ளதால், இதை டெல்லியில் விற்பதில் சிக்கல் இருந்து வந்தது. இதனால், கடந்த 8 மாதங்களாக, இன்னோவாவை டெல்லியில் விற்க முடியாத நிலை இருந்தது.

தற்போது, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பெட்ரோல் வேரியன்ட், இந்த பிரச்னைக்கு தீர்வாக அமைந்துள்ளது. இனி இந்நிறுவனம், டெல்லி போன்ற பகுதிகளிலும் தங்கள் கார்களை விற்க முடியும்.

எதிர்பார்ப்பு;

எதிர்பார்ப்பு;

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பெட்ரோல் வேரியன்ட், இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும்.

இருப்பினும், இது டெல்லி போல் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கபட்ட பகுதிகளில் தங்களின் விற்பனை அளவுகளை தொடர்ந்து தக்கவைத்து கொள்ளவே, இவை அறிமுகம் செய்யபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், டொயோட்டா நிறுவனம் இவ்வளவு மாதங்களாக இழந்து வந்த விற்பனையை ஈடுகட்டி கொள்ள முடியும் என எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

அமோக வரவேற்பு;

அமோக வரவேற்பு;

டொயோட்டா நிறுவனம், தங்களின் இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியை இந்த மே மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அப்போது முதல் இது வரை, சுமார் 24,000 இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி-கள் விற்பனையாகியுள்ளது.

மேலும், 9,000-ற்கும் கூடுதலான ஆர்டர்கள், டெலிவரி செய்யபடுவதற்கு காத்துகிடக்கிறது.

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல், 2 மாத காத்திருப்பு காலத்துடனேயே கிடைக்கிறது.

இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி-க்கு இப்படி அமோக வரவேற்பு நிலவி வருகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பெட்ரோல் வேரியன்ட்டில் 2.7 லிட்டர் டியூவல் விவிடிஐ இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின் 164 பிஹெச்பியையும், 245 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பெட்ரோல் மாடலின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டிருக்கும்.

மோட்கள்;

மோட்கள்;

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பெட்ரோல் வேரியன்ட், எகோ மற்றும் பவர் ஆகிய 2 டிரைவிங் மோட்களுடன் கிடைக்கிறது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஆராய் அமைப்பின் ஒப்புதல் படி, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பெட்ரோல் வேரியன்ட், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் லிட்டருக்கு 10.83 கிலோமீட்டர் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் லிட்டருக்கு 9.89 கிலோமீட்டர் என்ற மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொணடுள்ளது.

டிசைன்;

டிசைன்;

தற்போது விற்பனையில் உள்ள டீசல் வேரியன்ட்டுடன் ஒப்பிடுகையில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பெட்ரோல் வேரியன்ட்டின் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியரிலும் பெரிய அளவிலான வித்தியாசங்கள் எதுவும் இல்லை.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பெட்ரோல் மாடலின் அனைத்து வேரியன்ட்களிலும், 3 ஏர் பேக்குகள், இபிடி எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் மற்றும் பிரேக் அசிஸ்ட் உடைய ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், ப்ரீ-டெண்ஷனர் உடைய உயரம் அட்ஜஸ்ட் செய்யகூடிய சீட்பெல்ட், ஃபிரண்ட் சீட்களுக்கு ஃபோர்ஸ் லிமிட்டர் ஆகியவை ஸ்டாண்டர்ட் அம்சங்களாக சேர்க்கபட்டுள்ளது.

மேலும், செகன்டரி பேட்டரியின் உதவியுடன் இயங்கும் அனைத்து பயணிகளுக்குமான இம்பேக்ட் சென்ஸிங் டோர் அன்லாக் வசதியும் உள்ளது. கூடுதலாக, சைல்ட் சீட்களுக்கு ஐஸோஃபிக்ஸ் (ISOFIX) பாயிண்ட்ஸ்கள் உள்ளன.

இவையெல்லாம் தாண்டி, இசட்எக்ஸ் எனப்படும் டாப்-என்ட் மாடலில், விஎஸ்சி எனப்படும் வெஹிகிள் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹெச்ஏசி எனப்படும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் உடைய 4 கூடுதல் ஏர்-பேக்குகளும் வழங்கபட்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

டீசல் மாடலில் உள்ளது போன்றே, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பெட்ரோல் வேரியன்ட்டிலும், கூல்ட் அப்பர் கிளொவ் பாக்ஸ், ஒன்-டச் டம்பிள் இரண்டாம் வரிசை சீட்கள் மற்றும் குளுமையாக காட்சி அளிக்கும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் ஆகிய அம்சங்களும் சேர்க்கபட்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பெட்ரோல் வேரியன்ட், கார்நெட் ரெட், வைட் பியர்ல் கிறிஸ்டல் ஷைன் மற்றும் அவாந்த்-கார்தே பிரான்ஸ் ஆகிய 3 நிறங்களில் கிடைக்கிறது.

புக்கிங், டெலிவரி;

புக்கிங், டெலிவரி;

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பெட்ரோல் வேரியன்ட்டின் புக்கிங் மற்றும் டெலிவரி ஆகஸ்ட் 8-ஆம் தேதி (இன்று) முதல் துவங்கும்.

விலைகள்;

விலைகள்;

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பெட்ரோல் வேரியன்ட்டின், ஜிஎக்ஸ் எனப்படும் பேஸ் மாடல் 13,72,800 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பெட்ரோல் வேரியன்ட்டின், இசட்எக்ஸ் எனப்படும் டாப்-என்ட் மாடல் 19,62,300 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி இந்தியாவில் அறிமுகம்

புதிய டொயோட்டா இன்னோவா காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்!

இன்னோவா க்ரிஸ்ட்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
Japanese carmaker Toyota launched new petrol-powered version of their Innova Crysta MPV in India. Innova Crysta is available in 2 driving models - Eco and Power. Innova Crysta Petrol is available in 3 different colour options - Garnet Red, White Pearl Crystal Shine and Avant-Garde Bronze. This is launched to tackle Diesel vehicles Sales Ban in Delhi and Other places...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X