சென்னையில் தயாரிக்கப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் - என்ன ஸ்பெஷல்?

சென்னையில் தயாரிக்கப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் - என்ன ஸ்பெஷல்?

By Staff

சொகுசுக் கார் தயாரிப்பில் சிறந்து விளங்கும் பிஎம்டபிள்யூ நிறுவனம், புதிய தலைமுறை 5 சீரீஸ் காரை சச்சின் டெண்டுல்கர் மூலமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய 2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ஒரு மாடலாகும். இது 7வது தலைமுறை 5 சீரீஸ் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய 2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

உலகளவில் சிறந்த சொகுசு செடன் காராக விளங்கும் 5 சீரீஸ் 1972ம் ஆண்டு முதல் முறையாக அறிமுகமானது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இந்த மாடல் தற்போது முதல் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய 2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் புதிய 5 சீரீஸ் காரின் உற்பத்தி கடந்த ஜூன் 13ம் தேதி தொடங்கியது.

புதிய 2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

புதிய தலைமுறை 5 சீரீஸ் காரை, இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், பிஎம்டபிள்யூவின் விளம்பரத்தூதருமான சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பாவாஹ் இணைந்து அறிமுகம் செய்தனர்.

புதிய 2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் புதிய கிளஸ்டர் ஆர்க்கிடெக்சர் அடிப்படையிலான டிசைனில் தயாரிக்கப்பட்டுள்ளது. 7 சீரீஸ் காருக்கு அடுத்தபடியாக இந்த டிசைன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது மாடல் இது என்பது கவனிக்கத்தக்கது.

புதிய 2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

புதிய தலைமுறை 5 சீரீஸ் கார் உடற்கட்டில் அதிகமான அலுமினியம் கொண்டு கட்டமைப்பு பெற்றுள்ளதால் முந்தைய தலைமுறை காரைக் காட்டிலும் 70 கிலோ குறைவான எடை கொண்டதாக உள்ளது.

புதிய 2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

7 சீரீஸ் காரில் இருந்து பெரும்பாலான வடிவமைப்பை தழுவி புதிய 5 சீரீஸ் கார் வந்துள்ளதால் 7 சீரீஸ் காரில் காணப்படும் அதே கிட்னி வடிவ முகப்பு கிரில் அமைப்பு, எல்ஈடி முகப்பு விளக்கு, பின்புற விளக்கு ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

புதிய 2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

2017 5 சீரீஸ் காரில் 18 இஞ்ச் அலாய் வீல்கள், 10.25 இஞ்ச் டச்ஸ்கிரீன் டிஸ்பிளே, ரிமோட்டுடன் கூடிய ஐ-டிரைவ் கண்ட்ரோலர், 16 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம் ஆகியவை உள்ளன.

புதிய 2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

ரிமோட் கண்ட்ரோல் பார்க்கிங் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி, 10.2 இஞ்ச் பின்பக்க டிஸ்பிளே மானிட்டர்கள், வாய்ஸ் கண்ட்ரோல், கெயிஸ்ஷர் கண்ட்ரோல், மல்டி ஃசோன் கிளைமேட் கண்ட்ரோல், லெதர் சீட்கள் ஆகிய அம்சங்கள் உள்ளன.

புதிய 2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

இதேபோல புதிய 5 சீரீஸ் காரில் 6 ஏர் பேக்குகள், பிரேக் அஸிஸ்டுடன் கூடிய ஏபிஎஸ் சிஸ்டம், டைனமிக் பிரேக்கிங் லைட்டுகள், பார்க் டிஸ்டன்ஸ் கண்ட்ரோல், ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ட்ரேக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் கார்னரிங் பிரேக் கண்ட்ரோல் ஆகிய எண்ணற்ற பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளன.

புதிய 2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

புதிதாக அறிமுகமாகியுள்ள 5 சீரீஸ் கார் ஒரு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் என 3 இஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இஞ்சினின் ஆற்றலை 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பின்சங்கரங்களுக்கு அளிக்கிறது.

புதிய 2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

அதிகபட்சமாக 248.5 பிஹச்பி ஆற்றலையும், 350 என்எம் டார்க்கையும் வழங்கவல்ல 2.0 லிட்டர் டர்போசார்ஜூடு பெட்ரோல் இஞ்சின், 0-100 கிமீ வேகத்தை வெறும் 6.2 வினாடிகளில் எட்டிப்பிடித்து விடும். இதன் அதிகபட்ச வேகம் 250 கிமீ ஆகும். இவை 530ஐ என்ற வேரியண்டில் வெளிவருகிறது.

புதிய 2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

520டி என்ற வேரியண்டில் கிடைக்கும் தொடக்க நிலை டீசல் இஞ்சினில் அதிகபட்சமாக 187 பிஹச்பி ஆற்றலையும், 400 என்எம் டார்க்கையும் வழங்கவல்ல 2.0 லிட்டர் டீசல் இஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 235 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 7.5 வினாடிகளில் அடைந்துவிடுகிறது.

புதிய 2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

530டி வேரியண்டில் கிடைக்கும் பெரிய அளவு இஞ்சினில் அதிகபட்சமாக 261 பிஹச்பி ஆற்றலையும், 620 என்எம் டார்க்கையும் வழங்கவல்ல 3.0 லிட்டர் டீசல் இஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 250 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 5.7 வினாடிகளில் அடைந்துவிடுகிறது.

புதிய 2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் 4,935மிமீ நீளமும், 1,868மிமீ அகலமும், 1,466மிமீ உயரமும் கொண்டது. முந்தைய மாடலைக்காட்டிலும் 7மிமீ உயரம் அதிகரிக்கப்பட்டுள்ள இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 2,975மிமீ ஆக உள்ளது. இதன் பூட் ஸ்பேஸ் 10 லிட்டர்கள் அதிகரிக்கப்பட்டு 530 லிட்டர்களாக உள்ளது.

புதிய 2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

புதிய தலைமுறை 5 சீரீஸ் கார் 8 புதிய வண்ணங்களில் கிடைக்கிறது.

  • ஆல்பைன் ஒயிட் (Alpine White)
  • பிளாக் சஃபயர் (Blavk Sapphire)
  • புளூஸ்டோன் மெட்டாலிக் (Bluestone metallic)
  • கார்பன் பிளாக் (Carbon black)
  • கேஷ்மீர் சில்வர் (Cashmere Silver)
  • இம்பீரியல் புளூ பிரில்லியண்ட் எஃபக்ட் (Imperial Blue Brilliant Effect)
  • ஜடோபா (Jatoba)
  • மெடிடெரேனியன் புளூ (Mediterranean Blue)
  • புதிய 2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

    ஸ்போர்ட் லைன் (Sport Line), லக்ஸுரி லைன் (Luxury Line) மற்றும் எம் ஸ்போர்ட் (M SPort) என்ற 3 வேரியண்ட்களில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    விலை விபரம்

    விலை விபரம்

    • 520டி ஸ்போர்ட் லைன் - ரூ. 49.90 லட்சம்
    • 530ஐ ஸ்போர்ட் லைன் - ரூ.49.90 லட்சம்
    • 520டி லக்ஸூரி லைன் - ரூ. 53.60 லட்சம்
    • 530டி எம் ஸ்போர்ட் - ரூ.61.30 லட்சம்
    • புதிய 2017 பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

      மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ், வால்வோ எஸ்90, ஆடி ஏ6 ஆகிய சிறந்த மாடல்களுடன் புதிய பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Read in Tamil about 2017 bmw 5 series car launch in india.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X