இந்தியாவில் செவர்லே கார் பிராண்டு சகாப்தம் முடிவுக்கு வருகிறது... ?!

By Saravana Rajan

இந்தியாவில் செவர்லே கார் வர்த்தகத்தை நிறுத்துவதற்கு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் செவர்லே கார் பிராண்டு சகாப்தம் முடிவுக்கு வருகிறது... ?!

கடந்த 2003ம் ஆண்டு ஒபல் கார் பிராண்டுக்கு பதிலாக, செவர்லே பிராண்டில் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்.

இந்தியாவில் செவர்லே கார் பிராண்டு சகாப்தம் முடிவுக்கு வருகிறது... ?!

குஜராத் மாநிலம் ஹலோல் மற்றும் மஹாராஷ்டிர மாநிலம் தலேகான் ஆகிய இடங்களில் கார் ஆலைகளை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் எதிர்பார்த்த அளவு வர்த்தகத்தை ஜெனரல் மோட்டார்ஸ் பெற முடியவில்லை.

இந்தியாவில் செவர்லே கார் பிராண்டு சகாப்தம் முடிவுக்கு வருகிறது... ?!

தொடர்ந்து மிக மோசமான வர்த்தகத்தை பதிவு செய்து வந்ததுடன், மாசு உமிழ்வு மோசடியிலும் சிக்கியது. இதையடுத்து, செவர்லே கார்கள் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் அவநம்பிக்கை எழுந்தது.

இந்தியாவில் செவர்லே கார் பிராண்டு சகாப்தம் முடிவுக்கு வருகிறது... ?!

இந்த நிலையில், வர்த்தகம் மிக மோசமான நிலையில் இருந்து வந்ததையடுத்து, இந்தியாவில் கார் வர்த்தகத்தை நிறுத்துவதற்கு ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவில் செவர்லே கார் பிராண்டு சகாப்தம் முடிவுக்கு வருகிறது... ?!

இந்த மாத இறுதியில் ஹலோல் ஆலையை மூடுவதற்கு முடிவு செய்திருக்கும் அந்த நிறுவனம் க்ரூஸ் காரின் உற்பத்தியை ஏற்கனவே நிறுத்தி விட்டது. தவேரா கார் உற்பத்தியும் வரும் 28ந் தேதியுடன் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் செவர்லே கார் பிராண்டு சகாப்தம் முடிவுக்கு வருகிறது... ?!

ஏற்கனவே செவர்லே கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீடு செய்திருக்கும் டீலர்களை மனதில் வைத்து படிப்படியாக கார் விற்பனையை நிறுத்துவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

இந்தியாவில் செவர்லே கார் பிராண்டு சகாப்தம் முடிவுக்கு வருகிறது... ?!

மேலும், வலது பக்க டிரைவிங் வசதி கொண்ட கார் மாடல்களின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டு வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இடதுபக்க டிரைவிங் வசதி கொண்ட கார்கள் மட்டும் உற்பத்தி செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

இந்தியாவில் செவர்லே கார் பிராண்டு சகாப்தம் முடிவுக்கு வருகிறது... ?!

இந்த கார்கள் மெக்சிகோ நாட்டுக்கு ஏற்றுமதி செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. அடுத்த மாதம் முதல் இந்தியாவில் கார் விற்பனையை முழுவதுமாக நிறுத்துவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் செவர்லே கார் பிராண்டு சகாப்தம் முடிவுக்கு வருகிறது... ?!

இதனிடையே, பீட் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எசென்சியா செடான் கார் சோதனை ஓட்டத்தில் இருந்து வருகிறது. இந்த கார் விற்பனைக்கு வருமா அல்லது கைவிட படுமா என்பதில் குழப்பம் நிலவுகிறது.

இந்தியாவில் செவர்லே கார் பிராண்டு சகாப்தம் முடிவுக்கு வருகிறது... ?!

மேலும், ஹலோல் பகுதியில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே கார் ஆலையை பயன்படுத்திக் கொள்ள சீனாவை சேர்ந்த செயிக் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: ET Auto

Most Read Articles

English summary
General Motors India has hinted that it will put an end to its india operations by halting the production of right-hand drive vehicles.
Story first published: Friday, April 7, 2017, 12:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X