இந்தியாவில் செவர்லே கார் விற்பனையை நிறுத்துகிறது ஜெனரல் மோட்டார்ஸ்!

இந்தியாவில் தனது வாகன விற்பனையை இந்தாண்டு இறுதியுடன் நிறுத்திக் கொள்வதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் (செவர்லே) அறிவித்துள்ளது.

By Azhagar

ஆட்டோமொபைல் துறையில் அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், தனது கீழ் செயல்படும் செவர்லே பிராண்டில் இந்தியாவில் கார் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், வர்த்தகம் எதிர்பார்த்த அளவு இல்லாததால், இந்தியாவில் செவர்லே கார்களை விற்கபோவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் முடிவடைகிறது செவர்லே-வின் சகாப்தம்

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் செவர்லே கார்கள் சந்தையில் மிகவும் பின்தங்கி இருப்பதுடன், வருவாயும் ஈட்டித் தரவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முடிவடைகிறது செவர்லே-வின் சகாப்தம்

மேலும் பிரதமர் நரேந்திர மோடி, உள்நாட்டு தயாரிப்புகளுக்கு வரவேற்கும் அளிக்கும் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு அதிக ஊக்கம் அளித்து வருவதால், சில நிதி சிக்கல்களை இந்தியாவில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் சந்தித்து வருகிறது.

இந்தியாவில் முடிவடைகிறது செவர்லே-வின் சகாப்தம்

பயணிகளின் கார் விற்பனையை பொறுத்தளவில் இந்தியாவில் செவர்லே கார்கள் ஒரு சதவீதம் தான் விற்பனை திறனை பெற்றுள்ளன. இது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பேரிழப்பு.

இந்த மூன்று காரணங்களால் இந்தியாவில் செவர்லே கார்களின் விற்பனையை இந்தாண்டுடன் நிறுத்தப்போவதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் முடிவடைகிறது செவர்லே-வின் சகாப்தம்

மேலும் இதுகுறித்து ராய்டர்ஸ் செய்தித்தளம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், செவர்லே கார்களின் விற்பனையை நிறுத்தினாலும், இங்கியிருந்து கார்களை ஏற்றுமதி செய்யும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முடிவடைகிறது செவர்லே-வின் சகாப்தம்

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு குஜராத்தின் ஹலோல் பகுதியிலும், மும்பை நகருக்கு மிக அருகில் இருக்கக்கூடிய தலேகான் பகுதியிலும் தொழிற்சாலைகள் உள்ளன.

இந்தியாவில் முடிவடைகிறது செவர்லே-வின் சகாப்தம்

இவற்றில் குஜராத் ஹலோல் பகுதியில் உள்ள தொழிற்சாலையை சீனாவின் பிரபல SIAC வாகன தயாரிப்பு நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் மும்பை தொழிற்சாலை ஏற்றுமதிக்கான மையமாக செயல்படவுள்ளது.

மேலும் கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் ஜெனரல் மோட்டார்ஸின் தொழில்நுட்ப மையம் உள்ளது. இது தொடர்ந்து இயங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முடிவடைகிறது செவர்லே-வின் சகாப்தம்

இதுப்பற்றி, ஜெனரல் மோட்டார்ஸிற்கு சர்வதேச தலைமை செயல் அதிகாரியாக உள்ள ஸ்டீவன் ஜகாபை கூறும்போது, "இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தினாலும், வியாபார வட்டங்களில் மிக போட்டியான நாடு இந்தியா தான்".

"அதனாலேயே ஏற்றுமதி சார்ந்த செயல்பாடுகளுக்காக ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவில் தொடர்ந்து இயங்கும்" என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முடிவடைகிறது செவர்லே-வின் சகாப்தம்

2015ம் ஆண்டு தொடங்கி 2016 வரை டிலகான் தொழிற்சாலையிலிருந்து மெக்சிகோவிற்கு ஜெனரல் மோட்டார்ஸ், மொத்தம் 70,969 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இதற்கு முன்னதான நிதியாண்டில் செவர்லே கார்களின் உற்பத்தி இந்தியாவில் இரண்டு மடங்காக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் முடிவடைகிறது செவர்லே-வின் சகாப்தம்

தலேகான் பகுதியில் ஜெனரல் மோட்டார்ஸ் கட்டமைத்த செவர்லே கார்களுக்கான தொழிற்சாலையில், ஆண்டிற்கு சுமார் 1,30,000 கார்களை உருவாக்கும் திறன் உள்ளது.

இந்தியாவில் முடிவடைகிறது செவர்லே-வின் சகாப்தம்

இந்தியாவில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையை கைவிடும் முன் இரண்டு தேர்வுகள் அதற்கு இருந்தன...

ஒன்று, உலகளவிலான வியாபாரத்தை கவனத்தில் கொண்டு இயங்குவதை விட இந்தியாவில் விற்பனை திறனை உருவாக்க வழிவகை செய்யவேண்டும்.

இரண்டு, உள்ளூர் கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து உற்பத்தி மற்றும் விற்பனை திறனில் ஈடுபடவேண்டும்.

ஆனால் இதை இரண்டையும் செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் தயாராக இல்லை. இந்த ஒரு காரணத்தினால் தான் கார் உற்பத்தியில் உலகின் மூன்றாவது பெரிய நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸின் சகாப்தம் இந்தியாவில் முடிவடைகிறது.

Most Read Articles
English summary
General Motors has announced that it will stop selling cars in India and will instead use the country as an export hub.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X