ரூ.15 லட்சத்தை ஸ்வாஹா செய்த டீலர்... வாடிக்கையாளரை கைவிட்ட இசுஸு நிறுவனம்!

இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கை வாங்குவதற்கு கட்டிய ரூ.15 லட்சத்தை இசுஸு டீலர் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

டீலர்களில் நடக்கும் முறைகேடுகளால் சில வாடிக்கையாளர்கள் பெரும் இழப்பையும், மன உளைச்சல்களையும் அடைகின்றனர். அதுபோன்ற ரூ.15 லட்சத்தை ஆட்டையை போட்ட இசுஸு டீலர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ரூ.15 லட்சத்தை ஸ்வாஹா செய்த டீலர்... வாடிக்கையாளரை கைவிட்ட இசுஸு நிறுவனம்!

புனேயை சேர்ந்தவர் ஸ்ரீவர்தன் தபஸ்வி. இவர் அங்குள்ள விராஜ் இசுஸு என்ற டீலரில் இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் மாடலை கடந்த ஆகஸ்ட் மாதம் முன்பதிவு செய்தார். இவர் தனது சகோதரர் ஹர்ஷவர்தன் தபஸ்வி பெயரில் அந்த காரை முன்பதிவு செய்துள்ளார்.

ரூ.15 லட்சத்தை ஸ்வாஹா செய்த டீலர்... வாடிக்கையாளரை கைவிட்ட இசுஸு நிறுவனம்!

இந்த நிலையில், ஆக்சிஸ் வங்கியில் கடன் பெற்று அந்த டீலரில் செலுத்தி விட்டார். டவுண் பேமன்ட் கட்டிய பிறகு, இரண்டு நாட்களில் வங்கியிலிருந்தும் கடன் தொகை டீலர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டது.

Recommended Video

Horrifying Footage Of A Cargo Truck Going In Reverse, Without A Driver - DriveSpark
ரூ.15 லட்சத்தை ஸ்வாஹா செய்த டீலர்... வாடிக்கையாளரை கைவிட்ட இசுஸு நிறுவனம்!

கடந்த ஆகஸ்ட் மாதம் இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கிற்கு உண்டான ரூ.15.47 லட்சத்தை விராஜ் இசுஸு டீலர் கேட்டபடி கொடுத்துவிட்டார். இரண்டு நாட்களில் இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கை கொடுத்துவிடுவதாக டீலரில் தெரிவித்துள்ளனர்.

ரூ.15 லட்சத்தை ஸ்வாஹா செய்த டீலர்... வாடிக்கையாளரை கைவிட்ட இசுஸு நிறுவனம்!

ஆனால், சொன்னபடி இரண்டு நாட்களில் டெலிவிரி கொடுக்கவில்லை என்பதுடன், தொடர்ந்து தாமதப்படுத்தி உள்ளனர். மாதக் கணக்கில் நீண்ட நிலையில், கால தாமதத்திற்கு பொறுப்பேற்று ஒரு மாதத் தவணையை செலுத்துவதாக அந்த டீலர் அதிகாரி உறுதியளித்துள்ளார்.

ரூ.15 லட்சத்தை ஸ்வாஹா செய்த டீலர்... வாடிக்கையாளரை கைவிட்ட இசுஸு நிறுவனம்!

இதனிடையே, அந்த டீலர் மீது எழுந்த புகார்களால் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக இசுஸு நிறுவனம் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித் தாளில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் அந்த டீலர்ஷிப் இழுத்து மூடப்பட்டது.

Trending On DriveSpark Tamil:

ரூ.15 லட்சத்தை ஸ்வாஹா செய்த டீலர்... வாடிக்கையாளரை கைவிட்ட இசுஸு நிறுவனம்!

இதனால்,அதிர்ச்சியடைந்த ஸ்ரீவர்தன் தபஸ்வி உடனடியாக இசுஸு நிறுவனத்திற்கு இதுகுறித்து இமெயில் மூலமாக புகார் தெரிவித்துள்ளார். இந்த இமெயில்களுக்கு பதில் வரவில்லை. இதனால், விரக்தியடைந்த ஸ்ரீவர்தன் தபஸ்வி செய்வதறியாது கையறு நிலைக்கு தள்ளப்பட்டார்.

ரூ.15 லட்சத்தை ஸ்வாஹா செய்த டீலர்... வாடிக்கையாளரை கைவிட்ட இசுஸு நிறுவனம்!

இந்த நிலையில், இந்த பிரச்னை குறித்து நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்தார். கடந்த 20ந் தேதி முதல் விசாரணை நடந்தது. அப்போது, டீலர் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை.

ரூ.15 லட்சத்தை ஸ்வாஹா செய்த டீலர்... வாடிக்கையாளரை கைவிட்ட இசுஸு நிறுவனம்!

மேலும், இசுஸு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது வாடிக்கையாளர் மற்றும் டீலருக்கு இடையிலான பிரச்னை, இதிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ளவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இசுஸு நிறுவனமும் கைவிடும் போக்கில் செயல்படுவதால், ரூ.15.50 லட்சத்தை பறிகொடுத்த நிலையில் பரிதவித்து நிற்கிறார் ஸ்ரீவர்தன் தபஸ்வி.

ரூ.15 லட்சத்தை ஸ்வாஹா செய்த டீலர்... வாடிக்கையாளரை கைவிட்ட இசுஸு நிறுவனம்!

டீலர்களுக்கு அங்கீகாரம் வழங்கும்போதே முறையான விசாரணை நடத்தாமலும், அவர்களது பொருளாதார பின்புலம் குறித்து கவலை கொள்ளாமலும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் செய்யும் தவறுகளால், அப்பாவி வாடிக்கையாளர்கள் இதுபோன்ற பெரும் இழப்பையும், மன உளைச்சலையும் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

ரூ.15 லட்சத்தை ஸ்வாஹா செய்த டீலர்... வாடிக்கையாளரை கைவிட்ட இசுஸு நிறுவனம்!

டீலர் நியமன விஷயத்திலும், அவர்களது பண பரிமாற்ற விஷயத்திலும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் கண்காணிப்பது அவசியம் என்பது பலரின் கருத்தாக உள்ளது. மேலும், ஸ்ரீவர்தன் தபஸ்விக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்று டிரைவ்ஸ்பார்க் விரும்புகிறது.

Source: Team BHP

Trending On DriveSpark Tamil:

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Most Read Articles
மேலும்... #இசுஸு #isuzu
English summary
Isuzu Dealer In Mumbai Cheats A Customer.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X