ஹூண்டாய் கிரெட்டா காருக்கு போட்டியாக எம்.ஜி மோட்டார்ஸ் இந்தியாவில் களமிறக்கும் கார் இதுதான்..!!

ஹூண்டாய் கிரெட்டா காருக்கு போட்டியாக எம்.ஜி மோட்டார்ஸ் இந்தியாவில் களமிறக்கும் கார் இதுதான்..!!

By Azhagar

பிரிட்டன் நாட்டை சேர்ந்த எம்.ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தை, சீனாவை சேர்ந்த சாயக் (SAIC) ஆட்டோமொபைல் நிறுவனம் அதன் வசப்படுத்தியுள்ளது.

2019ம் ஆண்டில் இந்தியாவில் எம்.ஜி மோட்டார்ஸ் பெயரில் களமிறங்கும் சாயக் பல அதிரடி திட்டங்களை கைவசம் வைத்துள்ளதாக தெரிகிறது.

ஹூண்டாய்-க்கு போட்டியாக எம்ஜி மோட்டார்ஸ் வெளியிடும் கார்

இந்தியாவில் களமிறங்கிய உடன் வாகன விற்பனையில் முன்னணி இடத்திற்கு வந்துவிட வேண்டும் என்பது சாயக்கின் கணக்கு.

அதனால் இங்கு கார் மாடல்களில் எந்த செக்மென்ட் நல்ல விற்பனை திறனை பெற்று வருகிறது என சாயக் ஆழம் பார்க்கிறது.

ஹூண்டாய்-க்கு போட்டியாக எம்ஜி மோட்டார்ஸ் வெளியிடும் கார்

இதுகுறித்து காடிவாடி இணையதளம், இந்தியாவில் களமிறங்க சாயக் தேர்ந்தெடுத்திருப்பது காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட் தான் என தகவல் வெளியிட்டுள்ளது.

Recommended Video

Horrifying Footage Of A Cargo Truck Going In Reverse, Without A Driver - DriveSpark
ஹூண்டாய்-க்கு போட்டியாக எம்ஜி மோட்டார்ஸ் வெளியிடும் கார்

அதனால் வரும் 2019ல் ஹூண்டாய் கிரெட்டா மாடலுக்கு போட்டியாக சாயக் எம்.ஜி மோட்டார்ஸ் பிராண்டில் புதிய இசட்.எஸ் காம்பேக்ட் எஸ்யூவி காரை வெளியிட இருக்கிறது.

ஹூண்டாய்-க்கு போட்டியாக எம்ஜி மோட்டார்ஸ் வெளியிடும் கார்

இந்தியாவின் ஹூண்டாய் கிரெட்டா கார் சிறப்பான விற்பனை மற்றும் நல்ல வரவேற்பை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெற்று வருகிறது.

அதை சகபோட்டி மாடலாக கருதி, தனது எல்லையை விரிவுப்படுத்தும் நோக்கில் கிரெட்டாவை குறிவைத்துள்ளது எம்.ஜி மோட்டார்ஸ் (சாயக்).

ஹூண்டாய்-க்கு போட்டியாக எம்ஜி மோட்டார்ஸ் வெளியிடும் கார்

எம்.ஜி மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவெ இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் இசட்.எஸ் காம்பேக்ட் எஸ்யூவி காரை விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் வெளிவரும் இசட்.எஸ் மற்றும் ஜிஎஸ் கார்கள் குறித்த டீசர்களை ஏற்கனவே எம்.ஜி மோட்டார்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஹூண்டாய்-க்கு போட்டியாக எம்ஜி மோட்டார்ஸ் வெளியிடும் கார்

மேலும் இதற்கான தயாரிப்புகள் குஜராத்தின் ஹலோல் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் விரைவில் தொடங்கப்படும் என சாயக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹூண்டாய்-க்கு போட்டியாக எம்ஜி மோட்டார்ஸ் வெளியிடும் கார்

அங்கு 1 லிட்டர் டர்போசார்ஜிடு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஏஸ்பிரேடட் பெட்ரோல் என இருவேறு எஞ்சின் தேர்வுகளில் இசட்.எஸ் கார் விற்பனையில் உள்ளது.

ஹூண்டாய்-க்கு போட்டியாக எம்ஜி மோட்டார்ஸ் வெளியிடும் கார்

அவற்றில் 1 லிட்டர் டர்போசார்ஜிடு எஞ்சின் பெற்ற காரில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் 1.5 லிட்டர் எஞ்சின் கொண்ட மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேவைகள் இடம்பெறுகின்றன.

ஹூண்டாய்-க்கு போட்டியாக எம்ஜி மோட்டார்ஸ் வெளியிடும் கார்

ஆக்ரோஷமான நிலைப்பாடு கொண்ட தோற்றத்தில் தான் இசட்.எஸ் எஸ்யூவி கார் உள்ளது. காரின் முன்பக்கத்தில் பெரிய கிரில், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், எல்.இ.டி பகலில் எரியும் விளக்குகள் மற்றும் ஸ்கிட் பிளேட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

,ஹூண்டாய்-க்கு போட்டியாக எம்ஜி மோட்டார்ஸ் வெளியிடும் கார்

இசட்.எஸ் காரின் பின்பகுதி ரூஃப் பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ள ஸ்பாய்லர், எல்.இ.டி டெயில்லேம்ப் கிளஸ்டர் ஸ்கிட் பிளேட் மற்றும் 17-இஞ்ச் டைமன்டு கட் அலாய் சக்கரங்கள் இடம்பெற்றுள்ளன.

,ஹூண்டாய்-க்கு போட்டியாக எம்ஜி மோட்டார்ஸ் வெளியிடும் கார்

ஸ்டீயரிங் சக்கரங்கள், கனெக்ட்டிவிட்டு தேர்வுகளுடன் கொண்ட பெரியளவிலான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கிடைமட்ட ஏர் வென்டுகள், மத்திய பகுதி கன்சோல், சில்வர் டிரிம் செய்யப்பட்ட டாஷ் ஃபோர்டு, உயர் ரக லெதர்கள் கொண்டு உருவாக்கப்பட்ட இருக்கை கவர்கள் என இசட். எஸ் காரின் உள்கட்டமைப்பு அசத்துகின்றன.

,ஹூண்டாய்-க்கு போட்டியாக எம்ஜி மோட்டார்ஸ் வெளியிடும் கார்

டூயல்-முன்பக்க ஏர்பேகுகள், கர்டன் ஏர்பேகுகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்பி, அவசர தேவைக்கான பிரேக் அமைப்பு, ஹில் அசிஸ்ட், டயர்கள் மீது எழும் அழுத்தத்தை உணரும் அமைப்பு மற்றும் ரியர் பார்க்கிங் அசிஸ்ட் என எம்.ஜி இசட்.எஸ் காரின் பாதுகாப்பு அம்சங்களும் கவனிக்கவைக்கின்றன.

,ஹூண்டாய்-க்கு போட்டியாக எம்ஜி மோட்டார்ஸ் வெளியிடும் கார்

செயல்திறன், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தோற்ற பொலிவு என எல்லாவற்றிலும் அசத்தும் எம்.ஜி இசட் எஸ் கார் இந்தியாவில் 5 பேர் அமரும் வசதியுடன் வெளிவரவுள்ளது.

,ஹூண்டாய்-க்கு போட்டியாக எம்ஜி மோட்டார்ஸ் வெளியிடும் கார்

இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கான வரவேற்பு தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே உள்ளது. இதன்காரணமாகவே சயாக் எம்.ஜி மோட்டார்ஸ் பிராண்டில் இந்தியாவில் களமிறங்கும் போது, காம்பேக்ட் எஸ்யூவி காரை அறிமுகம் செய்ய விரும்புகிறது.

ஹூண்டாய்-க்கு போட்டியாக எம்ஜி மோட்டார்ஸ் வெளியிடும் கார்

செயல்திறன், தோற்றம் மற்றும் வடிவமைப்பு ஆகிய தேவைகளில் எம்.ஜி மோட்டார்ஸின் இசட்.எஸ் எஸ்யூவி கார் ஹூண்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் நிஸான் டெரனோ கார்களுக்கு போட்டியாக அமையும்.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Most Read Articles
English summary
Read in Tamil: MG Motors’ Creta Rival Is Coming To India Launch Details Revealed. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X