மஹிந்திரா பிராண்டில் அறிமுகமாகிறது புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி?

By Saravana Rajan

தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனம் எஸ்யூவி தயாரிப்பில் மிக பிரபலமாக விளங்குகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் இந்த நிறுவனம் தனது புதிய ரெக்ஸ்டன் எஸ்யூவியை கடந்த ஏப்ரல் மாதம் சியோலில் நடந்த மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்தது.

மஹிந்திரா பிராண்டில் புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி அறிமுகம்?

இந்த நிலையில், இந்த புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்த தகவலை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டு இருக்கிறது.

மஹிந்திரா பிராண்டில் புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி அறிமுகம்?

அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் பங்கேற்றிருக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ராஜன் வதேரா கூறி இருக்கிறார்.

மஹிந்திரா பிராண்டில் புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி அறிமுகம்?

ரெக்ஸ்டன் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்து வர்த்தகம் செய்வதற்கான செலவீனம் மிக அதிகமாக இருக்கிறது. ஆயினும், இந்தியாவில் சாங்யாங் ரெக்ஸ்டனுக்கு வர்த்தக வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறோம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மஹிந்திரா பிராண்டில் புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி அறிமுகம்?

விலையை சவாலாக நிர்ணயிக்கும் விதத்தில் சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யவும் திட்டம் இருக்கிறது. ரெக்ஸ்டனுக்காக தனி பெயின்டிங் பிரிவும் ஏற்படுத்தும் திட்டம் மஹிந்திராவிடம் உள்ளது. அதேநேரத்தில், முக்கிய பாகங்கள் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.

மஹிந்திரா பிராண்டில் புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி அறிமுகம்?

இந்த பிரம்மாண்ட எஸ்யூவி பாடி ஆன் ஃப்ரேம் சேஸியில் கட்டமைக்கப்படுகிறது. இந்த எஸ்யூவியில் 185 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிகளின் மார்க்கெட்டை குறி வைத்து களமிறக்கப்பட உள்ளது.

மஹிந்திரா பிராண்டில் புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி அறிமுகம்?

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், சாங்யாங் இல்லாமல் மஹிந்திரா பிராண்டிலேயே புதிய ரெக்ஸ்டன் எஸ்யூவியை அறிமுகம் செய்யவும் திட்டம் இருக்கிறதாம். இதன்மூலமாக, வாடிக்கையாளர்களை எளிதாக கவர முடியும் என்று மஹிந்திரா திட்டம் போட்டு வைத்திருக்கிறது.

Most Read Articles

மேலும்... #சாங்யாங் #ssangyong
English summary
Mahindra Reveals India Launch Details Of The All-New SsangYong Rexton SUV.
Story first published: Saturday, September 16, 2017, 12:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X