பினின்ஃபரீனா சொகுசு கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகிறது!

இரண்டு புதிய சொகுசு ரக கார் மாடல்களை மஹிந்திரா கீழ் செயல்படும் இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனம் பார்வைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.

By Saravana Rajan

கார் வடிவமைப்பில் உலக அளவில் பிரபலமான நிறுவனம் இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா. ஃபெராரி, பிஎம்டபிள்யூ என உலகின் பல முன்னணி கார் நிறுவனங்களின் பிரபல கார் மாடல்களை வடிவமைத்து கொடுத்த பெருமையும், நெடிய பாரம்பரியமும் கொண்ட நிறுவனம் என்பது கார் பிரியர்கள் அறிந்த உண்மை.

பினின்ஃபரீனா சொகுசு கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், நிதி நெருக்கடியில் சிக்கிய பினின்ஃபரீனா நிறுவனத்தை கடந்த 2015ம் ஆண்டு மஹிந்திரா நிறுவனம் கையகப்படுத்தியது. தற்போது பொருளாதார அளவில் உற்சாகம் பெற்றுள்ள பினின்ஃபரீனா நிறுவனம் மீண்டும் புதிய கார்களை வடிவமைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.

பினின்ஃபரீனா சொகுசு கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகிறது!

ஹாங்காங் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹைப்ரிட் கைனெட்டிக் குழுமம் என்ற மின்சார வாகன தயாரிப்பு நிறுவனத்திற்காக புதிய சொகுசு செடான் காரை வடிவமைத்துள்ளது. எச்600 என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய சொகுசு காரின் கான்செப்ட் மாடலை, அடுத்த வாரம் ஜெனிவா நகரில் நடைபெற இருக்கும் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பினின்ஃபரீனா சொகுசு கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகிறது!

இந்தநிலையில், இந்த புதிய காரின் எதிர்பார்ப்பை தனது ரசிகர்களிடம் தூண்டும் வகையில் சில படங்களை வெளியிட்டு இருக்கிறது. இந்த காரின் முகப்பு மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூ என்ற கான்செப்ட் காரின் முகப்பை ஒத்திருக்கிறது.

பினின்ஃபரீனா சொகுசு கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகிறது!

இன்டீரியர் படமும் இருக்கிறது. டேப்லெட் கம்ப்யூட்டர் போன்ற பெரிய திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருப்பது தெரிகிறது. அடுத்து, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரையும் காண முடிகிறது.

பினின்ஃபரீனா சொகுசு கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகிறது!

இந்த காரின் தொழில்நுட்ப விபரங்கள் குறித்த தகவல்கள் இல்லை. ஆனால், இது ஹைப்ரிட் அல்லது முழுவதும் பேட்டரியில் இயங்கும் மின்சார காராக கூட இருக்கலாம் என்பது இப்போதைய கணிப்பாக கூறலாம். ஏனெனில், ஹைப்ரிட் கைனெட்டிக் நிறுவனம் மின்சார மற்றும் ஹைப்ரிட் வகை பஸ், கார்களை தயாரித்து வருவதே இதற்கு காரணம்.

பினின்ஃபரீனா சொகுசு கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகிறது!

இந்த எச்600 கார் தவிர்த்து, ஃபிட்டிபால்டி இஎஃப்7 விஷன் கிரான் டூரிஷ்மோ என்ற கார் மாடலையும் ஜெனிவா மோட்டார் ஷோவில் பினின்ஃபரீனா கார் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் ஃபார்முலா 1 சாம்பியன் எமர்சன் ஃபிட்டிபால்டியுடன் இணைந்து ஃபினின்ஃபரீனா உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
English summary
Pininfarina has teased its new H600 luxury sedan by releasing two more images of the new hybrid vehicle. The car is set to make its debut at the 2017 Geneva Motor Show.
Story first published: Tuesday, February 28, 2017, 10:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X