மாருதி எர்டிகாவுக்கு போட்டியாக புதிய எம்பிவி காரை களமிறக்குகிறது ரெனோ!

4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான புதிய எம்பிவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ரெனோ கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

By Saravana Rajan

இந்திய கார் மார்க்கெட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ மாறி இருக்கிறது.

ரெனோ டஸ்ட்டர், ரெனோ க்விட் போன்ற கார்கள் மூலமாக, மார்க்கெட்டில் சிறப்பான இடத்தை பிடித்திருக்கும் ரெனோ கார் நிறுவனம் அடுத்து ஒரு காம்பேக்ட் எம்பிவி காரை அறிமுகம் செய்ய இருப்பதை உறுதி செய்துள்ளது.

மாருதி எர்டிகாவுக்கு போட்டியாக வரும் புதிய ரெனோ எம்பிவி கார்!

காம்பேக்ட் எம்பிவி கார் ரகத்தில் மாருதி எர்டிகா சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இந்த மார்க்கெட்டை குறி வைத்து பல முன்னணி கார் நிறுவனங்கள் புதிய மாடலை களமிறக்க முனைப்பு காட்டி வருகின்றன.

மாருதி எர்டிகாவுக்கு போட்டியாக வரும் புதிய ரெனோ எம்பிவி கார்!

அந்த வரிசையில், தற்போது ரெனோ கார் நிறுவனமும் இந்த மார்க்கெட்டில் புதிய காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் இறங்கி இருக்கிறது. இந்திய மார்க்கெட்டில் புதிய காம்பேக்ட் ரக எம்பிவி காரை அறிமுகம் செய்ய இருப்பதாக ரெனோ கார் நிறுவனத்தின் உயர் அதிகாரி தியரி போலோர் கூறி இருக்கிறார்.

Recommended Video

[Tamil] Mercedes GLA Launch - DriveSpark
மாருதி எர்டிகாவுக்கு போட்டியாக வரும் புதிய ரெனோ எம்பிவி கார்!

இந்த கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக இருக்கும் என்றும், அதே நேரத்தில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் விதத்தில் இருக்கும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

மாருதி எர்டிகாவுக்கு போட்டியாக வரும் புதிய ரெனோ எம்பிவி கார்!

இந்த கார் டட்சன் ரெடிகோ கார் மற்றும் ரெனோ க்விட் கார்கள் உருவாக்கப்பட்ட ரெனோ- நிஸான் கூட்டணியின் CMF-A பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட உள்ளது. நீளத்தில் மாருதி எர்டிகா, டொயோட்டா இன்னோவாவுக்கு போட்டியாக இருக்காது.

மாருதி எர்டிகாவுக்கு போட்டியாக வரும் புதிய ரெனோ எம்பிவி கார்!

ஆனால், இந்த இரு கார்களுக்கும் இருக்கும் மார்க்கெட்டில் சிறிதளவு பங்களிப்பை பெறும் முனைப்பில் இருக்கிறது. டட்சன் கோ ப்ளஸ் கார் 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட மாடல். ஆனால், ரெனோ நிறுவனத்தின் காம்பேக்ட் எம்பிவி கார் பிரிமியம் வசதிகளுடன் வர இருக்கிறது.

மாருதி எர்டிகாவுக்கு போட்டியாக வரும் புதிய ரெனோ எம்பிவி கார்!

தற்போது ஹேட்ச்பேக் ரகத்தில் க்விட் காரும், எஸ்யூவி ரகத்தில் டஸ்ட்டர் எஸ்யூவியும் இருக்கின்றன. விரைவில் கேப்டூர் எஸ்யூவியும் இணைய இருக்கிறது. லாட்ஜி எம்பிவி காரும் இருக்கும் நிலையில், காம்பேக்ட் எம்பிவி ரகத்தில் புதிய கார் வேண்டும் என்று ரெனோ நினைக்கிறது.

மாருதி எர்டிகாவுக்கு போட்டியாக வரும் புதிய ரெனோ எம்பிவி கார்!

இந்த புதிய காம்பேக்ட் கார் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் இல்லை. அதேநேரத்தில், கூடிய விரைவாக இந்த காரை களமிறக்கும் பணிகளில் ரெனோ தீவிரம் காட்டி வருகிறது.

மாருதி எர்டிகாவுக்கு போட்டியாக வரும் புதிய ரெனோ எம்பிவி கார்!

இந்த புதிய காம்பேக்ட் கார் தவிர்த்து, அடுத்து இரண்டு புதிய கார் மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய ரெனோ திட்டமிட்டுள்ளது. அதில், காம்பேக்ட் ரக எஸ்யூவி மற்றும் க்விட் காரின் மின்சார மாடல் ஆகியவை வர இருப்பதாக செய்திகள் பரபரக்கின்றன.

ரெனோ காம்பேக்ட் எம்பிவி கார் வருகிறது!
Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault India will look to target the sub-4 meter MPV with new and premium features to set it apart from its competitors.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X