கோவையில் சாங்யாங் டிவோலி சோதனை: எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

By Saravana Rajan

மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனம் டிவோலி என்ற காம்பேக்ட் எஸ்யூவியை வெளிநாடுகளில் அறிமுகம் செய்தது. இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி வடிவமைப்பில் மிக அசத்தலாக இருந்ததால், இந்தியாவிலும் விற்பனைக்கு வருமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி வந்தது.

கோவையில் சாங்யாங் டிவோலி சோதனை: எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

இந்த சூழலில், கோவையில் சாங்யாங் டிவோலி எஸ்யூவி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வரும் சாங்யாங் டிவோலி எஸ்யூவியை எமது டிரைவ்ஸ்பார்க் தள வாசகர் ஜித்தேஷ் ஜெகதீசன் எமக்கு அனுப்பி இருக்கிறார்.

கோவையில் சாங்யாங் டிவோலி சோதனை: எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

சாங்யாங் டிவோலி எஸ்யூவியுடன் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியும் சேர்த்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேலும், இரண்டு சாங்யாங் டிவோலி எஸ்யூவிகள் சோதனை ஓட்டம் செய்யப்பட்டு இருப்பதும் ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வருகிறது.

கோவையில் சாங்யாங் டிவோலி சோதனை: எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

ஒன்று காம்பேக்ட் ரக மாடலாகவும் மற்றொன்று சற்றே கூடுதல் நீளம் கொண்ட மாடலாகவும் தெரிகிறது. அதாவது, ஒன்று மூன்று வரிசை இருக்கை கொண்ட மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.

Recommended Video - Watch Now!
High Mileage Cars In India - DriveSpark
கோவையில் சாங்யாங் டிவோலி சோதனை: எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

அடையாளங்கள் மறைக்கப்பட்டிருந்த போதிலும், டிவோலி எஸ்யூவியில் சில முக்கிய அம்சங்களை காண முடிகிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல் நேர விளக்குகள், பனி விளக்குகள், பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

கோவையில் சாங்யாங் டிவோலி சோதனை: எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

கருப்பு வண்ண பில்லர்கள், அலாய் வீல்கள் ஆகியவையும் முக்கியமானதாக இருக்கின்றன. பின்புறத்தில் உயர்த்தப்பட்ட அமைப்பிலான விண்ட் ஷீல்டு, எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

Trending On DriveSpark Tamil:

ரூ.15 லட்சத்தை ஸ்வாஹா செய்த டீலர்... வாடிக்கையாளரை டீலாவில் விட்ட இசுஸு நிறுவனம்!

சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழர் பற்றி தெரியுமா?

கோவையில் சாங்யாங் டிவோலி சோதனை: எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

நீளம் குறைவான மாடலில் தற்காலிக டெயில் லைட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பதுடன், ஸ்டீல் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பிற முக்கிய அம்சங்கள் குறித்து தெரியவில்லை.

கோவையில் சாங்யாங் டிவோலி சோதனை: எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

புதிய சாங்யாங் டிவோலி எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இரட்டை வண்ண டேஷ்போர்டு, டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவை பிற முக்கிய அம்சங்களாக இருக்கும். பாதுகாப்பு அம்சங்களிலும் குறைவிருக்காது.

கோவையில் சாங்யாங் டிவோலி சோதனை: எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

ஏற்கனவே, சாங்யாங் டிவோலி எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டமில்லாமல் இருந்தது மஹிந்திரா. ஆனால், தற்போது சோதனை ஓட்டங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, அடுத்த ஆண்டு மத்தியில் சாங்யாங் டிவோலி எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பிருக்காது.

Trending On DriveSpark Tamil:

2017ல் வெளியாகி விற்பனையில் நின்று ஆடிய டாப் 5 ஸ்கூட்டர்கள்..!!

டிரெய்லர் லாரியில் சிக்கி பிஎம்டபுள்யூ பைக்கில் சென்ற இளம் விமானி உயிரழப்பு..!

டாடா டியாகோ காரின் ஏஎம்டி மாடல் அறிமுகம் குறித்த வீடியோ செய்தி!

Most Read Articles

மேலும்... #சாங்யாங் #ssangyong
English summary
South Korean automaker SsangYong's Tivoli compact SUV has been spotted testing on Indian roads again with heavy camouflage covering up the car.
Story first published: Thursday, December 28, 2017, 10:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X