நாடு முழுவதும் அதிகாரிகள் வேட்டை தொடங்கியது.. இந்த சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு சிக்கல்

உங்கள் வாகனத்திற்கு இந்த சான்றிதழ் உள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அடுத்த முறை உங்கள் வாகனம் சாலைக்கு வரும்போது, அதிகாரிகளிடம் அபராதம் கட்ட நீங்கள் வரிசையில் நிற்க நேரிடலாம்.

உங்கள் வாகனத்திற்கு இந்த சான்றிதழ் உள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அடுத்த முறை உங்கள் வாகனம் சாலைக்கு வரும்போது, போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் அபராதம் கட்ட நீங்கள் வரிசையில் நிற்க நேரிடலாம்.

நாடு முழுவதும் அதிகாரிகள் வேட்டை தொடங்கியது.. இந்த சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு சிக்கல்

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை நமது சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை உண்டாக்கி வருகிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் அதிகாரிகள் வேட்டை தொடங்கியது.. இந்த சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு சிக்கல்

இதன் ஒரு பகுதியாக அனைத்து வாகனங்களுக்கும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (Pollution Under Control Certificate) பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வைத்திருப்பதில்லை.

நாடு முழுவதும் அதிகாரிகள் வேட்டை தொடங்கியது.. இந்த சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு சிக்கல்

இதனால் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறாத வாகனங்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆங்காங்கே வாகன தணிக்கை நடத்த தொடங்கியுள்ளனர்.

நாடு முழுவதும் அதிகாரிகள் வேட்டை தொடங்கியது.. இந்த சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு சிக்கல்

இதன் ஒரு பகுதியாக தலைநகர் டெல்லியில் கடந்த 5ம் தேதி வாகன தணிக்கை தொடங்கப்பட்டது. அன்று முதல் கடந்த 22ம் தேதி வரை மட்டும் மொத்தம் 10,787 வாகனங்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடியாக அபராதம் விதித்தனர்.

நாடு முழுவதும் அதிகாரிகள் வேட்டை தொடங்கியது.. இந்த சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு சிக்கல்

போக்குவரத்து துறை அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்பட்ட 10,787 வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லை. அவை சுற்றுச்சூழலை மிக அதிகமாக மாசுபடுத்தின. எனவேதான் அந்த வாகனங்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

நாடு முழுவதும் அதிகாரிகள் வேட்டை தொடங்கியது.. இந்த சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு சிக்கல்

இதுதவிர 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய டீசல் வாகனங்கள் அதிகளவில் சாலையில் இயங்கி கொண்டிருப்பதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டிருந்தன.

நாடு முழுவதும் அதிகாரிகள் வேட்டை தொடங்கியது.. இந்த சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு சிக்கல்

எனவே இது தொடர்பாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது 15 ஆண்டுகளுக்கும் மேலான 148 டீசல் வாகனங்கள் இயங்கி கொண்டிருந்தது தெரியவந்தது. அந்த 148 டீசல் வாகனங்களையும் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

நாடு முழுவதும் அதிகாரிகள் வேட்டை தொடங்கியது.. இந்த சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு சிக்கல்

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''மொத்தம் 10,787 வாகனங்களுக்கு அபராதம் விதித்துள்ளோம். மாசுபாட்டை ஏற்படுத்தும் வாகனங்களுக்கு எதிராக போக்குவரத்து துறை வரலாற்றில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கை இது.

நாடு முழுவதும் அதிகாரிகள் வேட்டை தொடங்கியது.. இந்த சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு சிக்கல்

இந்த வாகன தணிக்கையை நடத்துவதற்காக 60 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 5 முதல் 6 அதிகாரிகள் வரை இடம்பெற்றுள்ளனர். எங்களிடம் உள்ள அனைத்து ஊழியர்களையும் இந்த பணியில் ஈடுபடுத்தியுள்ளோம்.

நாடு முழுவதும் அதிகாரிகள் வேட்டை தொடங்கியது.. இந்த சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு சிக்கல்

தற்போது எங்களது கவனம் எல்லாம் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் மட்டும்தான் உள்ளது. எனவே வாகன தணிக்கையை தொடர்ந்து நடத்தவுள்ளோம். காற்றின் தரம் மேம்படும் வரை வாகன தணிக்கையை தொடர முடிவு செய்துள்ளோம்'' என்றனர்.

நாடு முழுவதும் அதிகாரிகள் வேட்டை தொடங்கியது.. இந்த சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு சிக்கல்

எனவே வரும் நாட்களில் வாகன தணிக்கை இன்னும் தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது. முதலில் வாகன தணிக்கை நடைபெறும் இடங்களுக்கு சென்று வர அதிகாரிகளுக்கு போதிய அளவில் வாகனங்கள் இல்லை. வாகனங்களுக்கு பற்றாக்குறை நிலவி வந்தது.

நாடு முழுவதும் அதிகாரிகள் வேட்டை தொடங்கியது.. இந்த சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு சிக்கல்

ஆனால் தற்போது 27 வாகனங்கள் அதிகாரிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் எல்லாம் நாளை (அக்டோபர் 26) முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. எனவேதான் இனி அதிகாரிகளின் வாகன தணிக்கை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் அதிகாரிகள் வேட்டை தொடங்கியது.. இந்த சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு சிக்கல்

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''அதிக எண்ணிக்கையிலான டூவீலர்கள், கார்கள் சாலையில் இயங்குவதால் சுற்றுச்சூழல் அதிகளவில் மாசுபடுகிறது. எனவே ஒவ்வொரு தனி நபரும் தங்கள் சொந்த வாகனத்தில் வருவதற்கு பதிலாக பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம்'' என்றனர்.

நாடு முழுவதும் அதிகாரிகள் வேட்டை தொடங்கியது.. இந்த சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு சிக்கல்

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. எனவே இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் தேவைதான். ஆனால் இதனை பயன்படுத்தி கொண்டு அதிகாரிகள் வசூல் வேட்டையில் இறங்கி விடக்கூடாது என்பதே வாகன ஓட்டிகள் அனைவரின் எதிர்பார்ப்பும்.

Most Read Articles

ஹூண்டாய் சான்ட்ரோ-2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
10,787 Polluting Vehicles Fined By Transport Department Officers In Delhi. Read in Tamil
Story first published: Thursday, October 25, 2018, 16:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X