தமிழகத்தில் ஓடும் "டப்பா" பஸ்களுக்கு தீர்வு ; மீண்டும் வருகிறது புதிய இந்தியா

தமிழகத்தில் ஓடும் டப்பா பஸ்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் விதமாக சட்ட திருத்தம் செய்யப்படுகிறது. கமர்ஷியல் வாகனங்களுக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் தான் ஆயுள் என்ற திட்டத்தை அரசு கொண்டு வர திட்டமிட்டு

By Balasubramanian

தமிழகத்தில் ஓடும் டப்பா பஸ்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் விதமாக சட்ட திருத்தம் செய்யப்படுகிறது. கமர்ஷியல் வாகனங்களுக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் தான் ஆயுள் என்ற திட்டத்தை அரசு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் மூலம் வரும் 2020ம் ஆண்டு முதல் பழைய வாகனங்களை ரோட்டில் இயக்க முடியாது.

தமிழகத்தில் ஓடும்

இது குறித்து பெயர் வெளியிடவிருப்பாத உயர் மட்ட அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில் :"மத்திய அரசு கமர்ஷியல் வாகனங்களுக்கான ஆயுளை 20 ஆண்டுகள் என நிர்ணயிக்க திட்டமிட்டு வருகிறது. இதை வரும் 2020ம் ஆண்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் முயற்சித்து வருகிறது.

தமிழகத்தில் ஓடும்

இதன் மூலம் காற்று மாசு பெரும் அளவில் குறைக்கவும் புதிய வாகனங்களை அதிகமாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் இந்த திட்டத்தை அமல்படுத்த அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் ஓடும்

இத்திட்டம் முழுவதுமாக வரையறுக்கப்பட்டு தற்போது அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான ஒப்புதல்கள் கிடைத்தவுடன் இத்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

தமிழகத்தில் ஓடும்

இத்திட்டத்தின் படி தற்போது 2000 வது ஆண்டிற்கு முன்னால் பதிவு செய்யப்பட்ட சுமார் 7 லட்சம் வாகனங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. அவைகளை எல்லாம் வரும் 2020ம் ஆண்டில் இருந்து பயன்படுத்த முடியாது.

தமிழகத்தில் ஓடும்

அதே நேரத்தில் 20 ஆண்டுகள் பழையான வாகனத்தை விற்று அதற்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்க மானியங்கள் மற்றும் சலுகைகள் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஓடும்

அதன் படி பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்கு புதிய வாகனங்களுக்கான ஜிஎஸ்டியில் சலுகையில், பழைய வாகனங்களுக்கு நல்ல விலை கிடைக்க செய்தல், வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து இவ்வாறு வாகனங்கள் வாங்குபவர்களுக்கான வாகன விலையில் தள்ளுபடி அளிக்க செய்தல் உள்ளிட்டவை திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஓடும்

இதன் படி பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்கு அதன் விலையில் இருந்து சுமார் 15 சதவீத தள்ளுபடி கிடைக்கும். தற்போது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலில் உள்ள இந்த திட்டம் ஒப்புதல் கிடைத்த பின்பு நேரடியாக ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு செல்லும்.

தமிழகத்தில் ஓடும்

ஜிஎஸ்டி கவுன்சில் இது குறித்து விவாதித்து தற்போது அந்த புதிய வாகனங்களுக்காக உள்ள ஜிஎஸ்டியில் எவ்வளவு சலுகை அளிக்கலாம் என்பதை முடிவு செய்யும். அதே நேரத்தில் பழைய வாகனங்களை அழித்து ஸ்கிராப் செய்யும் மையங்களை அதிக அளவில் நிறுவவும் ஸ்டீல் அமைச்சகத்திற்கு உத்தரவிடப்படும். " என கூறினார்.

தமிழகத்தில் ஓடும்

ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு கமர்ஷியல் வாகனங்களுக்கான ஆயுளை 15 ஆண்டுளாக நிர்ணயம் செய்ய வேண்டும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை சட்ட திருத்தம் ஒன்றை கோரியது அதை செயலக கமிட்டி நிராகரித்து. குறைந்தது. 20 ஆண்டு ஆயுள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தது.

தமிழகத்தில் ஓடும்

தற்போது உள்ள திட்டத்தின் படி ஒருவர் அவரின் 20 ஆண்டிற்கும் பழமையான வாகனத்தை அழித்து விட்டு புதிய வாகனத்தை வாங்க விரும்பினால் ஸ்கிராப்பிங் மையத்திற்கு தங்கள் வாகனத்தை முதலில் ஸ்கிராப் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் ஓடும்

அந்த மையம் அவருக்கு சான்றிதழ் ஒன்றை வழங்கும் அதில் எந்த வாகனத்தை ஸ்கிராப் செய்தால் அதற்காக எவ்வளவு தொகை பெற்று கொண்டார், ஸ்கிராப் செய்யப்பட்ட வாகனத்தின் வயது உள்ளிட்டவை அதில் இடம் பெற்றிருக்கும். அதை புதிய வாகனம் வாங்கும் டீலரிடம் சமர்பித்து புதிய வாகனத்திற்கான தள்ளுபடியை அவர்கள் பெற முடியும்.

தமிழகத்தில் ஓடும்

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் இருக்கும் பெரிய தலைவலியே "டப்பா" பஸ்கள் தான். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓடும் பஸ்கள் எல்லாம் தரமே இல்லாமல் பழைய பஸ்களை கொண்டு தொடர்ந்து இயக்கி வருகிறது.

தமிழகத்தில் ஓடும்

இது அவ்வப்போது நடுரோட்டில் நிற்பதும் அதை பயணிகளே இறங்கி தள்ளுவது, கூரைகள் இல்லாத பஸ்கள், சீட்கள் இல்லாத பஸ்கள், ஏன் பிரேக் இல்லாத பஸ்கள் கூட தமிழக அரசு பஸ்களாக இயங்கி தான் வருகிறது. சில ஆண்டுளுக்கு முன் தமிழகத்தில் இருந்து கேரள சென்ற தமிழகத பஸ்சில் பயணிந்த பெண் ஒருவர் சீட்டில் இருந்து எழுந்தவுடன் பலகை உடைந்து ரோட்டில் விழுந்தும் அதிஷ்ட வசமாக உயிர் தப்பி சம்பவங்களை நாம் இன்னுமும் மறந்திக்க மாட்டோம்.

தமிழகத்தில் ஓடும்

இப்படியாக தமிழகத்தில் ஒடும் டப்பா பஸ்களுக்கு ஒரு தீர்வாக மத்திய அரசு இந்த முடிவை எடுக்கவுள்ளது. வரைவில் இது அமலுக்கு வந்தவுடன் தமிழகத்தில் ஓடும் பஸ்கள் எல்லாம் இனி கயலாங் கடைக்கு போய்விடும். எப்படியோ நல்ல விஷயங்கள் நடந்தால் சரி

டிரைவ்ஸ்பார்க் தமிழ்த்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
Retirement age for commercial vehicles may be fixed at 20 years. Read in Tamil
Story first published: Tuesday, July 24, 2018, 11:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X