20 ஆண்டு கால இந்திய வரலாற்றில் முதல் கார்.. போட்டியாளர்களை மலைக்க வைத்த அமேஸின் புதிய சாதனை..

லான்ச் செய்யப்பட்ட முதல் 3 மாதங்களில், 30,000க்கும் அதிகமான ஹோண்டா அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் புதிய சாதனை ஒன்றை அமேஸ் கார் படைத்துள்ளது.

By Arun

லான்ச் செய்யப்பட்ட முதல் 3 மாதங்களில், 30,000க்கும் அதிகமான ஹோண்டா அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் புதிய சாதனை ஒன்றை அமேஸ் கார் படைத்துள்ளது. போட்டியாளர்களை மலைக்க வைத்துள்ள இந்த சாதனை குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

20 ஆண்டு கால இந்திய வரலாற்றில் முதல் கார்.. போட்டியாளர்களை மலைக்க வைத்த அமேஸின் புதிய சாதனை..

புத்தம் புதிய 2018 அமேஸ் காரை, ஹோண்டா நிறுவனம் கடந்த மே மாதம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த கார் லான்ச் செய்யப்பட்டு, தற்போது வரை வெறும் 3 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள்ளாகவே 30,000க்கும் மேற்பட்ட அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டன.

20 ஆண்டு கால இந்திய வரலாற்றில் முதல் கார்.. போட்டியாளர்களை மலைக்க வைத்த அமேஸின் புதிய சாதனை..

லான்ச் செய்யப்பட்ட முதல் 3 மாதங்களில், 30,000 என்ற இலக்கை எட்டிய ஹோண்டா நிறுவனத்தின் முதல் கார் அமேஸ்தான். இதன்மூலம் புதிய வரலாறு ஒன்றை அமேஸ் படைத்துள்ளது. ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம், கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் இயங்கி கொண்டுள்ளது.

20 ஆண்டு கால இந்திய வரலாற்றில் முதல் கார்.. போட்டியாளர்களை மலைக்க வைத்த அமேஸின் புதிய சாதனை..

இந்த 20 ஆண்டு கால வரலாற்றில், அமேஸ் போல், வேறு எந்த ஹோண்டா காரும், லான்ச் செய்யப்பட்ட முதல் 3 மாதங்களில், இவ்வளவு அதிக எண்ணிக்கையில் விற்பனையானது இல்லை. இதன்மூலம் அதிகம் விற்பனையாகும் ஹோண்டா நிறுவனத்தின் புதிய மாடல் என்ற பெருமையை அமேஸ் பெற்றுள்ளது.

20 ஆண்டு கால இந்திய வரலாற்றில் முதல் கார்.. போட்டியாளர்களை மலைக்க வைத்த அமேஸின் புதிய சாதனை..

முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில், ஹோண்டா நிறுவனம் மொத்தம் 55,647 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல்-ஜூலை கால கட்டத்தில், ஹோண்டா நிறுவனம் மொத்தம் 62,579 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

20 ஆண்டு கால இந்திய வரலாற்றில் முதல் கார்.. போட்டியாளர்களை மலைக்க வைத்த அமேஸின் புதிய சாதனை..

அதாவது 2017 ஏப்ரல்-ஜூலை கால கட்டத்துடன் ஒப்பிடுகையில், 2018 ஏப்ரல்-ஜூலை கால கட்டத்தில், ஹோண்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த கார் விற்பனை வளர்ச்சி 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அமேஸ் காருக்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட ஓபனிங்கும் இதற்கு ஓர் முக்கிய காரணம் என்றால் மிகையல்ல.

20 ஆண்டு கால இந்திய வரலாற்றில் முதல் கார்.. போட்டியாளர்களை மலைக்க வைத்த அமேஸின் புதிய சாதனை..

ஏனெனில் ஹோண்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த கார் விற்பனை வளர்ச்சி சதவீதம் உயர்ந்ததில், அமேஸ் காரின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளது. அமேஸ் காருக்கு அமோக ஆதரவை வழங்கியுள்ள இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா நிறுவனம் நன்றி தெரிவித்து கொண்டுள்ளது.

20 ஆண்டு கால இந்திய வரலாற்றில் முதல் கார்.. போட்டியாளர்களை மலைக்க வைத்த அமேஸின் புதிய சாதனை..

புதிய அமேஸ் கார் லான்ச் செய்யப்பட்ட முதல் நாடு இந்தியாதான். இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து, அதற்கு ஏற்ற வகையில் அமேஸ் காரை கட்டமைத்தது ஹோண்டா நிறுவனம். இதன்மூலம்தான் பிரம்மாண்ட ஓபனிங் சாத்தியமாகியுள்ளது.

20 ஆண்டு கால இந்திய வரலாற்றில் முதல் கார்.. போட்டியாளர்களை மலைக்க வைத்த அமேஸின் புதிய சாதனை..

ஹோண்டா அமேஸ் கார், காம்பேக்ட் செடான் வகையை சேர்ந்தது. இந்த காரின் கவர்ச்சிகரமான டிசைன், விசாலமான இன்டீரியர்கள், டிரைவிங் பெர்ஃபார்மென்ஸ், பாதுகாப்பு டெக்னாலஜிகள் மற்றும் அட்டகாசமான வசதிகள் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

20 ஆண்டு கால இந்திய வரலாற்றில் முதல் கார்.. போட்டியாளர்களை மலைக்க வைத்த அமேஸின் புதிய சாதனை..

மொத்தம் 12 வேரியண்ட்களில் புதிய அமேஸ் காரை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், பெட்ரோல் சிவிடி மற்றும் டீசல் சிவிடி வேரியண்ட்கள்தான் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளன என்று சொல்லலாம்.

20 ஆண்டு கால இந்திய வரலாற்றில் முதல் கார்.. போட்டியாளர்களை மலைக்க வைத்த அமேஸின் புதிய சாதனை..

ஏனெனில் லான்ச் செய்யப்பட்டது முதல், விற்பனையான மொத்த அமேஸ் கார்களில் 30 சதவீதம், பெட்ரோல் சிவிடி மற்றும் டீசல் சிவிடி வேரியண்ட்கள்தான். அதே நேரத்தில் இதன் இ , எஸ், வி, விஎக்ஸ் உள்ளிட்ட சில வேரியண்ட்களின் விலையை 10,000-35,000 வரை ஹோண்டா நிறுவனம் உயர்த்தி விட்டது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டு கால இந்திய வரலாற்றில் முதல் கார்.. போட்டியாளர்களை மலைக்க வைத்த அமேஸின் புதிய சாதனை..

கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது. மாருதி சுஸூகி டிசையர், ஹூண்டாய் எக்ஸெண்ட், ஃபோர்டு ஆஸ்பயர், ஃபோக்ஸ்வேகன் அமியோ உள்ளிட்ட கார்களுடன், ஹோண்டா அமேஸ் போட்டியிடுகிறது. ஹோண்டா அமேஸ் காருக்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பு, போட்டியாளர்களை மலைக்க வைத்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
2018 Honda Amaze Creates New Sales Record. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X