புதிய மாருதி எர்டிகா காரின் படங்கள் இணையதளத்தில் கசிந்தன!

இரண்டாம் தலைமுறை மாருதி எர்டிகா காரின் படங்களும், தகவல்களும் இந்தோனேஷிய இணையதளம் மூலமாக வெளியாகி இருக்கின்றன.

By Saravana Rajan

இரண்டாம் தலைமுறை மாருதி எர்டிகா காரின் படங்களும், தகவல்களும் இந்தோனேஷிய இணையதளம் மூலமாக வெளியாகி இருக்கின்றன.

புதிய மாருதி எர்டிகா காரின் படங்கள் இணையதளத்தில் கசிந்தன!

எம்பிவி கார் ரகத்தில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கும் எர்டிகா கார் இரண்டாம் தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மாருதி நிறுவனத்தின் தாய் நிறுவனமான சுஸுகி நிறுவனம் இந்தோனேஷியாவில் நடைபெறும் ஆட்டோ ஷோவில் நாளை இந்த புதிய மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த நிலையில், அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பாக இந்த காரின் படங்கள் மற்றும் தகவல்கள் அடங்கிய விபரக்குறிப்பேடு இந்தோனேஷிய இணையதளம் மூலமாக வெளியாகி இருக்கின்றன.

புதிய மாருதி எர்டிகா காரின் படங்கள் இணையதளத்தில் கசிந்தன!

சுஸுகி எர்டிகா கார் 4,395மிமீ நீளமும், 1,735மிமீ அகலமும், 1,690 மிமீ உயரமும் கொண்டது. தற்போதைய எர்டிகா காரைவிட 130மிமீ நீளத்தில் கூடி இருக்கிறது. 40 மிமீ அகலத்திலும், 5 மிமீ உயரத்திலும் கூடி இருக்கிது. ஆனால், வீல் பேஸ் 2,740மிமீ தான். மாற்றமில்லை.

இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 185மிமீ என்பது இப்போது 180 மிமீ ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. டர்னிங் ரேடியஸ் 5.2 மீட்டர். இதில் மாற்றமில்லை.

புதிய மாருதி எர்டிகா காரின் படங்கள் இணையதளத்தில் கசிந்தன!

புதிய சுஸுகி எர்டிகா காரில் 153 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி இருக்கிறது. மூன்றாவது வரிசை இருக்கையை மடக்கினால் 550 லிட்டர் கொள்திறன் கொண்டதாகவும், இரண்டு வரிசை இருக்கைகளை மடக்கும்போது 803 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதியை பெறமுடியும்.

புதிய சுஸுகி எர்டிகா காரில் முக்கிய மாற்றமாக 1.5 லிட்டர் விவிடி பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 104.7 பிஎஸ் பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். தற்போதைய 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைவிட சக்திமிக்கதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தக்கவைக்கப்பட்டுள்ளது.

புதிய மாருதி எர்டிகா காரின் படங்கள் இணையதளத்தில் கசிந்தன!

தோற்றத்தில் பல்வேறு மாறுதல்களை சந்தித்துள்ளது. புதிய க்ரில் அமைப்பு, புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், அலாய் வீல்கள், புதிய டி பில்லர் அமைப்பு, டெயில் லைட்டுகள் ஆகியவை முக்கிய மாற்றங்களாக இருக்கின்றன.

இன்டீரியரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி போன்ற நவீன வசதிகளும் நிரம்பவே கொடுக்கப்பட இருக்கிறது.

நாளை இந்தோனேஷியாவில் சுஸுகி பிராண்டில் வெளியிடப்பட இருக்கும் இரண்டாம் தலைமுறை எர்டிகா கார் அடுத்த சில மாதங்களில் மாருதி பிராண்டில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

Via - Serayamotor

Most Read Articles
English summary
2018 Maruti Suzuki Ertiga Leaked Online.
Story first published: Wednesday, April 18, 2018, 18:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X