இந்த காரில் பயணிப்பவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. அதிர்ச்சிகரமான கிராஷ் டெஸ்ட் வீடியோ..

பாதுகாப்பு தரத்தை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட்டில், நிஸ்ஸான் மைக்ரா கார் 1 ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

பாதுகாப்பு தரத்தை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட்டில், நிஸ்ஸான் மைக்ரா கார் 1 ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நிஸ்ஸான் காரில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி.. கிராஷ் டெஸ்ட்டில் அம்பலமானது..

நிஸ்ஸான் நிறுவனத்தின் மைக்ரா கார், கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டது. அதன்பின் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நிஸ்ஸான் நிறுவனத்தின் கார் என்ற அந்தஸ்தை வெகு விரைவிலேயே மைக்ரா எட்டிபிடித்தது.

நிஸ்ஸான் காரில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி.. கிராஷ் டெஸ்ட்டில் அம்பலமானது..

சராசரியாக ஒரு மாதத்திற்கு, 700 மைக்ரா கார்களை நிஸ்ஸான் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஒரு பெட்ரோல், ஒரு டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுடனும், 9 டிரிம்களுடனும் (Trims) மைக்ரா காரை நிஸ்ஸான் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

நிஸ்ஸான் காரில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி.. கிராஷ் டெஸ்ட்டில் அம்பலமானது..

இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மைக்ரா காரை, நிஸ்ஸான் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அவற்றில் லத்தின் அமெரிக்க நாடுகளும் ஒன்று. அங்கு விற்பனைக்கு வரும் கார்களை லத்தின் என்சிஏபி (Latin NCAP) எனும் அமைப்பு கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்துவது வழக்கம்.

நிஸ்ஸான் காரில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி.. கிராஷ் டெஸ்ட்டில் அம்பலமானது..

கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்துவதன் மூலமாக, கார்களின் பாதுகாப்பு தரம் உறுதி செய்யப்படும். இந்த சூழலில், லத்தின் என்சிஏபி அமைப்பால், புதிய 2018 நிஸ்ஸான் மைக்ரா கார், சமீபத்தில் கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்டது.

நிஸ்ஸான் காரில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி.. கிராஷ் டெஸ்ட்டில் அம்பலமானது..

இந்த கிராஸ் டெஸ்ட்டில், புதிய 2018 நிஸ்ஸான் மைக்ரா கார் வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ளதாக, லத்தின் என்சிஏபி அமைப்பு அறிவித்துள்ளது. நிஸ்ஸான் மைக்ரா காரின் கட்டுமானம், போதுமான அளவுக்கு வலுவாக இல்லை எனவும் லத்தின் என்சிஏபி அமைப்பு கூறியுள்ளது.

நிஸ்ஸான் காரில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி.. கிராஷ் டெஸ்ட்டில் அம்பலமானது..

எனவே பயணம் செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த காரில் 2 ஏர் பேக்குகள் உள்ளன. அப்படி இருந்தும் கூட வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ளது. மைக்ரா கார் கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்ட வீடியோவை கீழே காணலாம்.

இதனிடையே புதிய நிஸ்ஸான் மைக்ரா சிவிடி வேரியண்ட், இந்திய நகர்ப்புறங்களில் வசிக்கும் முதல் முறையாக கார் வாங்க கூடியவர்களை குறி வைத்துள்ளது. அவர்கள்தான் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில், எளிதாக செல்வதற்கு ஏற்றவாறு மலிவான விலையில், சிறிய ஆட்டோமெட்டிக் காரை எதிர்பார்ப்பார்கள்.

நிஸ்ஸான் காரில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி.. கிராஷ் டெஸ்ட்டில் அம்பலமானது..

இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் 3 சிலிண்டர் இன்ஜின், 6,000 ஆர்பிஎம்மில் 75 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 104 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். ஒரு லிட்டருக்கு 19.34 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #நிஸ்ஸான் #nissan
English summary
2018 Nissan Micra’s Body was Not Strong Enough-Crash Test Result. Read in Tamil
Story first published: Friday, August 3, 2018, 18:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X