8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்...!!!

இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில், காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

By Arun

இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில், காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்திய மார்க்கெட்டில் தற்போது, 8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும், ஹாட் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்...!!!

மாருதி சுசூகி விட்டார பிரீஸா

2016ம் ஆண்டு நடைபெற்ற 13வது ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுசூகி விட்டார பிரீஸா கார் அறிமுகம் செய்யப்பட்டது. லான்ச் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்கு உள்ளாகவே, சாதனை அளவாக 40,000 கார்கள் புக்கிங் செய்யப்பட்டு விட்டன.

8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்...!!!

மாருதி சுசூகி விட்டார பிரீஸா காரின் பளபளப்பான கருப்பு நிற அலாய் வீல்கள் மற்றும் ட்யூயல் டோன் எக்ஸ்ட்டீரியர் பெயிண்ட் ஆகியவை வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.

8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்...!!!

ஆனால் இந்த காருக்கு மாருதி சுசூகி நிறுவனம் இன்று வரை பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகம் செய்யவில்லை. 4 டீசல் வேரியண்ட்கள் மட்டுமே கிடைக்கின்றன.

8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்...!!!

மாருதி சுசூகி விட்டார பிரீஸா காரில், டிரைவர் மற்றும் பயணிகளுக்கு ஏர் பேக்குகள், எலக்ட்ரோ மேக்னடிக் டெயில்கேட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்...!!!

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் 90 பிஎஸ் பவர், 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மாருதி சுசூகி விட்டாரா பிரீஸா கார் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை 7.57 லட்சம்.

8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்...!!!

டாட்டா நெக்ஸான்

ப்ரொஜெக்டர் ஹெட்லைட், ரியர் ஸ்பிலிட் எல்இடி டெயில்லைட், பகல் நேரத்திலும் எரியக்கூடிய டிஆர்எல்எஸ் உள்ளிட்டவை டாட்டா நெக்ஸான் காருக்கு நல்ல தோற்றத்தை கொடுத்துள்ளன. இதில், பின்பக்கத்திலும் ஏசி வெண்ட், க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்...!!!

டாட்டா நெக்ஸான் காரில் 2 ஏர் பேக்குகள், ஏபிஎஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் நிலையானவையாக கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் XZ வேரியண்ட் (7.98 லட்ச ரூபாய்) வசதிகள் பட்டியலில், பார்க்கிங் சென்சார்களும் இடம்பெற்றுள்ளன.

8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்...!!!

110 பிஎஸ் பவர், 170 என்எம் டார்க் திறனை உருவாக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 110 பிஎஸ், 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளிட்ட ஆப்ஷன்களில் டாட்டா நெக்ஸான் கார் கிடைக்கிறது.

8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்...!!!

பேஸ் வேரியண்ட்டான நெக்ஸான் XE (பெட்ரோல்) வேரியண்ட் வெறும் 6.15 லட்சத்திற்கு கிடைக்கிறது. மற்றொரு அடிப்படை வேரியண்ட்டான XE (டீசல்) வேரியண்ட்டின் விலை 7.18 லட்ச ரூபாய்.

8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்...!!!

ஃபோர்டு எகோ ஸ்போர்ட்

ஸ்போர்ட்டி லுக் கொண்ட எகோ ஸ்போர்ட் கார் பெட்ரோல், டீசன் என 2 இன்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. ஆனால் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே 8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் (7.82 லட்ச ரூபாய்) வருகிறது.

8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்...!!!

மற்ற அனைத்து வேரியண்ட்களும் 8 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலையில்தான் கிடைக்கின்றன. இது 121 பிஎஸ், 150 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்...!!!

ஃபோர்டு எகோ ஸ்போர்ட் காரில், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், ஏபிஎஸ், இபிடி (எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன்), 2 ஏர் பேக்குகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்...!!!

ரெனால்ட் டஸ்டர்

ரெனால்ட் டஸ்டர் காரில், கீ லெஸ் என்ட்ரி வசதி உள்ளது. 2 ஏர் பேக்குகள், ஏபிஎஸ், இபிடி வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும் ரெனால்ட் டஸ்டர் காரின் ஆரம்ப விலை 7.9 லட்ச ரூபாய்.

8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்...!!!

இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 121 பிஎஸ், 150 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். ஒரு லிட்டருக்கு 14.2 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கும்.

8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்...!!!

மகேந்திரா நுவோ ஸ்போர்ட்

7 பேர் அமர்ந்து பயணிக்க கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள காம்பேக்ட் எஸ்யூவிதான் மகேந்திரா நுவோ ஸ்போர்ட். நல்ல இடவசதி இருந்தாலும் கூட இதன் பேஸ் வேரியண்ட்டில் ஏர் பேக், ஏபிஎஸ், இபிடி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லை.

8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்...!!!

இதில், 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 100 பிஎஸ், 240 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கும்.

Most Read Articles
English summary
5 hot compact SUVs under Rs 8 lakh. read in tamil.
Story first published: Wednesday, May 23, 2018, 12:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X