டாடா ஹாரியர் பற்றிய 5 முக்கிய விஷயங்கள்!

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியை ஜோத்பூரில் வைத்து டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்து வருகிறது. இந்த எஸ்யூவியின் பிரத்யேக படங்களை எமது ஃபேஸ்புக் பக்கத்தி

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியை ஜோத்பூரில் வைத்து டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்து வருகிறது. இந்த எஸ்யூவியின் பிரத்யேக படங்களை எமது ஃபேஸ்புக் பக்கத்தில் வழங்கி இருக்கிறோம். அத்துடன், இந்த எஸ்யூவி குறித்த 5 முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா ஹாரியர் பற்றிய 5 முக்கிய விஷயங்கள்!

பிளாட்ஃபார்ம்

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி அதிக எதிர்பார்ப்பையும், ஆவலையும் கூட்டியதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, இது லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டி8 பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்படுவதுதான். ஆம். லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் உருவாக்கப்பட்ட எல்550 பிளாட்ஃபார்ம் அடிப்படையிலான டாடாவின் ஒமேகா பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், தயாரிப்பு செலவீனத்தை குறைப்பதற்காக உயர் வகை ஸ்டீல் சேஸீ மற்றும் பாகங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பரிமாணத்தில் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்டுடன் ஒத்துப்போவதும் கவனிக்கத்தக்க விஷயம்.

டாடா ஹாரியர் பற்றிய 5 முக்கிய விஷயங்கள்!

எஞ்சின்

டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 2.0 லிட்டர் க்ரையோடெக் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஸ்யூவியில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோமேட்டிக் மாடல் பின்னர் வரும் வாய்ப்புள்ளது.

டாடா ஹாரியர் பற்றிய 5 முக்கிய விஷயங்கள்!

ஏமாற்றம்

இந்த எஸ்யூவியில் ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ப டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சாலை நிலைகளுக்கு ஏற்ப Normal, Rough மற்றும் Wet ஆகிய டிரைவிங் மோடுகளில் மாற்றிக் கொள்ள முடியும். இது சிறப்பான விஷயமாக இருந்தாலும், முழுமையான ஆஃப்ரோடராக கருத முடியவில்லை. ஏனெனில், இதில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் இல்லை என்பது ஏமாற்றம்.

டாடா ஹாரியர் பற்றிய 5 முக்கிய விஷயங்கள்!

பாதுகாப்பு அம்சங்கள்

டாடா ஹாரியர் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரோல்ஓவர் மிட்டிகேஷன் பாதுகாப்பு அம்சம், ரிவர்ஸ் கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தவிரவும், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல் சி்டம், எலெக்ட்ரானிக் டிராக்ஷன் கன்ட்ரோல் ஆகியவை மதிப்பை உயர்த்தும் விஷயங்களாக கூறலாம்.

டாடா ஹாரியர் பற்றிய 5 முக்கிய விஷயங்கள்!

முக்கிய அம்சங்கள்

டாடா ஹாரியர் எஸ்யூவியில் எச்ஐடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் மற்றும் வைப்பர்கள், படூல் விளக்குகள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை முக்கிய அம்சங்களாக கூறலாம். க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

டாடா ஹாரியர் பற்றிய 5 முக்கிய விஷயங்கள்!

எதிர்பார்க்கும் விலை

ரூ.16 லட்சம் முதல் ரூ.21 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் வர இருப்பதாக டாடா வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் பிரத்யேக படங்களின் தொகுப்பை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Details of the Tata Harrier have been released yet again and Tata Motors expects their new product to be a game changer in the five-seater SUV segment in India, with its host of equipment and features. The Tata Harrier is the production variant of the H5X concept that was unveiled at Auto Expo 2018, and prices are expected to start at Rs 16 lakh.
Story first published: Thursday, December 6, 2018, 11:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X