கிரிமினல் வழக்கை கையில் எடுத்த போலீசார்.. இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை உறுதி

விபத்துக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக இபிகோ செக்ஸன் 279 என்ற ஆயுதத்தை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.

விபத்துக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக இபிகோ செக்ஸன் 279 என்ற ஆயுதத்தை போலீசார் கையில் எடுத்துள்ளனர். இதை பயன்படுத்தி விதியை மீறும் வாகன ஓட்டிகளை 6 மாதம் சிறையில் தள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கிரிமினல் வழக்கு பதிவு செய்யும் போலீசார்.. இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை உறுதி

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களின் காரணமாக 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே விபத்துக்களுக்கு முக்கிய காரணம். குறிப்பாக 'ராங் சைடில்' (Wrong Side) வாகனத்தை இயக்கும் பழக்கம் வாகன ஓட்டிகள் பலரிடம் உள்ளது.

கிரிமினல் வழக்கு பதிவு செய்யும் போலீசார்.. இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை உறுதி

ராங் சைடில் வாகனத்தை இயக்குவது சட்டப்படி தவறு. அதிக அளவிலான விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்பதால்தான் ராங் சைடு டிரைவிங் சட்ட விரோதமானதாக கருதப்படுகிறது. ராங் சைடில் வாகனத்தை ஓட்டுவது எவ்வளவு அபாயகரமானது என்பதை கீழே உள்ள வீடியோவில் நீங்கள் காணலாம்.

ராங் சைடு டிரைவிங் சட்ட விரோதமாக கருதப்படுவது ஏன்? என்பது மேலே வழங்கப்பட்டுள்ள வீடியோவை பார்த்ததன் மூலம் உங்களுக்கு புரிந்திருக்கும். ராங் சைடில் லாரியை ஓட்டி வந்த டிரைவரின் செயலை சந்தேகத்திற்கு இடமின்றி முட்டாள்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்.

கிரிமினல் வழக்கு பதிவு செய்யும் போலீசார்.. இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை உறுதி

இதனை மோட்டார் சைக்கிளில் வந்த நபரின் அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம். ஏனெனில் கொஞ்சம் அசந்திருந்தால் நடந்திருக்கும் விபரீதமே வேறு. எனவே ராங் சைடில் வாகனங்கள் இயக்கப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

கிரிமினல் வழக்கு பதிவு செய்யும் போலீசார்.. இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை உறுதி

இதன் ஒரு பகுதியாக ராங் சைடில் வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் மீது, இந்திய தண்டனை சட்டத்தின் (Indian Penal Code) செக்ஸன் 279ன் (Rash Driving) கீழாக, கிரிமினல் வழக்குகளை பதிவு செய்யும் பணிகளை போலீசார் அதிரடியாக தொடங்கியுள்ளனர்.

கிரிமினல் வழக்கு பதிவு செய்யும் போலீசார்.. இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை உறுதி

இபிகோ செக்ஸன் 279ன் கீழ் தண்டிக்கப்பட்டால், 1,000 ரூபாய் அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும். நேரம் சரியில்லை என்றால், சில சமயங்களில் 1,000 ரூபாய் அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனை என இரண்டு தண்டனைகளும் சேர்த்தே வழங்கப்படும்.

கிரிமினல் வழக்கு பதிவு செய்யும் போலீசார்.. இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை உறுதி

மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு அருகே உள்ள பிம்ப்ரி சின்ச்வாத் நகர போலீசார்தான், ராங் சைடில் வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் மீது இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளனர். பிம்ப்ரி சின்ச்வாத் நகர போலீஸ் கமிஷனராக பத்மநாபன் என்பவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

கிரிமினல் வழக்கு பதிவு செய்யும் போலீசார்.. இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை உறுதி

பத்மநாபன் என்ற இந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிதான், ராங் சைடில் வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை அமல்படுத்தியவர். பிம்ப்ரி சின்ச்வாத் போலீசாரை தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கையை எடுப்பது தொடர்பாக, புனே நகர போலீசாரும் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.

கிரிமினல் வழக்கு பதிவு செய்யும் போலீசார்.. இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை உறுதி

போலீஸ் கமிஷனர் பத்மநாபனின் நடவடிக்கை மிகவும் துணிச்சலான ஒன்று. எனினும் இது தேவையான நடவடிக்கைதான். ராங் சைடில் வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் மீது, விரைவில் நாடு முழுவதும் உள்ள போலீசாரும், இந்த நடவடிக்கையை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிமினல் வழக்கு பதிவு செய்யும் போலீசார்.. இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை உறுதி

ஆனால் இபிகோ செக்ஸன் 279ஐ பயன்படுத்தி கொண்டு, போலீசார் வசூல் வேட்டையில் இறங்காமல் இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பு. நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, ராங் சைடில் வாகன ஓட்டிகள் பயணம் செய்கின்றனர்.

கிரிமினல் வழக்கு பதிவு செய்யும் போலீசார்.. இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை உறுதி

சிலர் 'த்ரில்' வேண்டும் என்பதற்காகவும் கூட, ராங் சைடில் வாகனங்களை செலுத்துகின்றனர் என்பதுதான் அதிர்ச்சிகரமான தகவல். உண்மையில் ராங் சைடில் வாகனங்களை ஓட்டும் நபர்களால், அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவதில்லை. கூடவே சேர்ந்து இதர வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர்.

Most Read Articles

ஏத்தர் 450 ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி சமீபத்தில் தொடங்கியது. இதன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம். இதுதான் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
6 Month Jail Term For Those Who Driving Wrong Side. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X