ஏஎம்டி கார்ளை வாங்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 6 காரணங்கள்

By Balasubramanian

ஆட்டோமெட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (ஏஎம்டி) தொழிற்நுட்பம் கடந்த சில வேகமாக கார்கள் மத்தியில் பரவி வருகிறது. மேனுவலாக நாம் போடும் கியரை நாம் கார் செல்லும் தன்மைக்கு ஏற்ற தானாக செய்து கொள்ளும் தொழிற்நுட்பம் தான் ஏஎம்டி. ஆட்டோமெட்டிக் கியர்களுக்காக ஏஎம்டி, டிஎஸ்ஜி, சிவிடி மற்றும் ட்ரிப்ட்ரோனிக் ஆகிய தொழிற்நுட்பங்கள் இருந்தாலும் ஏஎம்டி தான் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

ஏஎம்டி கார்ளை வாங்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 6 காரணங்கள்

முதில் பட்ஜெட் கார்களான மாருதி ஆல்டோ, டாடா டியாகோ, டாடா நேனோ உள்ளிட்ட கார்களில் தான் இந்த ஆப்ஷன்கள் கொண்டு வரப்பட்டன. பின்னர் இதற்கு கிடைத்த வரவேற்ப்பை பார்த்து மாருதி ஸிப்ட், டாடா நெக்ஸான், ரெனால்ட் டஸ்டர், மற்றும் மாருதி விட்டாரா ப்ரீஸ்ஸா ஆகிய கார்களிலும் இந்த ஆப்ஷன்கள் தற்போது உள்ளது.

ஏஎம்டி கார்ளை வாங்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 6 காரணங்கள்

மேலும் இந்த ஆப்ஷனை மற்ற ரக வாகனங்களுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படி ஆட்டோ மொபைல் துறையில் நல்ல பெயரை வாங்கிவரும் இந்த ஏஎம்டி தொழிற்நுட்பம் அப்படி என்ன நன்மையை தான் மக்களுக்கு செய்கிறது? இது குறித்த 6 முக்கிய காரணங்களை கீழே விரிவாக அலசலாம்.

ஏஎம்டி கார்ளை வாங்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 6 காரணங்கள்

கூடுதல் டிரைவிங் வசதி

இந்த தொழிற்நுட்பம் பொருத்தப்பட்ட காரில் கியர்களை டிரைவர்கள் மாற்ற வேண்டாம் தானா கியர்கள் மாறும். கார்களில் இருந்த பெரும் பிரச்னையாக பார்க்கப்பட்டதே சிட்டிக்குள் கார்களை ஓட்டும் போது அடிக்கடி கியர்களை மாற்றுவது தான். அந்த பிரச்னை இதில் முழுமையாக சரியாகிறது. மேலும் சிட்டியில் சிரியாக நேரத்தில் சரியான கியரில் காரை செலுத்துவது கெட்டிகாரனாக இருக்கிறது. இந்த ஏஎம்டி.

ஏஎம்டி கார்ளை வாங்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 6 காரணங்கள்

புதிய ஓட்டுநர்களுக்கு காரை இயக்குவது சுலபம்

ஏஎம்டி கார்களில் கிளட்ச் பெடல்கள் இல்லை. இதனால் நொடிக்கு ஒரு முறை கிளட்ச்சை மிதித்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்தது. இதனால் புதிதாக கார் ஓட்டுபவர்கள் கியர்களை மாற்றுவது, கிளட்சை அழுத்துவது என அவர்கள் கவலை கொள்ள வேண்டாம்.

ஏஎம்டி கார்ளை வாங்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 6 காரணங்கள்

புதிய டிரைவர்கள் பலர் கிளட்சை ரிலீஸ் செய்வதில் தான் சிரமப்படுவர் அவர்களுக்கு இனி அந்த சிரமம் இருக்காது. புதிதாக கார் ஓட்டுபவர்கள் டாடா டியாகோ ஏஎம்டி கார்களை பயன்படுத்தலாம்.

ஏஎம்டி கார்ளை வாங்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 6 காரணங்கள்

மேனுவலை விட சிறந்த மைலேஜ்

மேனுவல் கியர் கார்களை விட அதில் ஏஎம்டி பொருத்தப்பட்ட பின்பு உள்ள கார்கள் தான் நல்ல மைலேஜை தருகிறது. சில கார்களில் மேனுவலை விட ஏஎம்டி வேரியன்ட்களில் அதிக மைலேஜை கூட தருகின்றன.

ஏஎம்டி கார்ளை வாங்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 6 காரணங்கள்

உதாரணமாக சமீபத்தில் வெளியான விட்டாரா ப்ரீஸ்ஸா ஏஎம்டி மற்றும் நெக்ஸான் ஏஎம்டி ஆகிய கார்கள் மேனுவல் கியரை விட ஏஎம்டி வேரியன்ட் தான் நல்ல மைலேஜை தருகிறது. மாருதி ஸிப்ட் காரிலும் இதே கதை தான்.

ஏஎம்டி கார்ளை வாங்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 6 காரணங்கள்

சிவிடியை விட குறைந்த பராமரிப்பு செலவு

ஆட்டோமெட்டிக் கியர்களுக்காக சிவிடி என்ற தொழிற்நுட்பமும் சில கார்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதை விட ஏஎம்டி தான் பராமரிப்பு செலவு குறைவாக உள்ளது. ஏஎம்டி என்பது வழக்கமான மேனுவல் கியருடன் எலெக்ட்ரோ ஹைட்ராலிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

ஏஎம்டி கார்ளை வாங்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 6 காரணங்கள்

இது கிளட்ச்சின் தேவையை முழுமையாக இல்லாமல் ஆக்கி விடுகிறது. மேலும் இதன் எளிமையான வடிவமைப்பு அதற்கான பராமரிப்பு செலவுகளையும் குறைக்கிறது. ஆனால் சிவிடி என்பது சற்று விலை அதிகமான தொழிற்நுட்பம்.

ஏஎம்டி கார்ளை வாங்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 6 காரணங்கள்

சிவிடியை விட குறைந்த விலை

ஏஎம்டி தொழிற்நுட்பத்தை விட சிவிடி தொழிற்நுட்பத்தின் விலை அதிகமாக இருக்கும். சிவிடி தொழிற்நுட்பம் பொருத்தப்பட்ட கார்கள் அதே காரில் மேனுவல் தொழிற்நுட்பத்தை விட சிவிடி தொழிற்நுட்பம் பொறுத்தப்பட்ட கார் ரூ 1 லட்சம் வரை கூடுதலாக இருக்கும்.

ஏஎம்டி கார்ளை வாங்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 6 காரணங்கள்

ஆனால் ஏஎம்டியில் மேனுவல் கியர் காரை விட ஏஎம்டி தொழிற்நுட்பம் பொருத்தப்பட்ட கார் 40-50 ஆயிரம் வரை அதிகமாக இருக்கும். மாருதி ஸிப்ட் மற்றும் டாடா டியாகோ ஆகிய கார்களில் மேனுவல் வேரியன்டை விட ஏஎம்டி வேரியன்டின் விலை சிறிதுதான்அதிகமாக இருக்கிறது.

ஏஎம்டி கார்ளை வாங்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 6 காரணங்கள்

சிவிடியை விட சிறப்பான பெர்பாமென்ஸ்

இதுவரை வெளியான ஏஎம்டி மாடல்கள் எல்லாம் சிவிடி அளவிற்கு பெர்பாமென்ஸ் இல்லை என் விமர்சனத்திற்குள்ளாகின. ஆனால் தற்போது வரும் ஏஎம்டிகள் சிவிடியைவிட சிறந்த பெர்பாமென்ஸை தருகின்றன.

ஏஎம்டி கார்ளை வாங்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 6 காரணங்கள்

குறிப்பாக மலைகளில் இருந்து இறங்கும் போதும் ஏறும் போதும் பயன்படுத்த இரண்டு மோடுகள் கொடுக்கப்படுகிறது. அதன் மூலம் இந்த ஏஎம்டி மற்ற ஆட்டோமெட்டிக் கியர் தொழிற்நுட்பங்களை விட சிறந்த பெர்பாமென்ஸை வழங்குகிறது. அதே நேரத்தில் இது மற்ற தொழிற்நுட்பங்களை விட விலையும் குறைவு தான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்
  2. காஸ்ட்லி கடவுளுக்கு காஸ்ட்லி கார் கொடுத்த சபாஷ் நாயுடு! இந்த கார் உள்ள உலகின் முதல் கோயில் திருப்பதி
  3. புதிய மாருதி எர்டிகா காரின் ஸ்பை படங்கள் மற்றும் விபரம்!!
  4. சவப்பெட்டியாக மாறிய பிஎம்டபிள்யூ கார்! இறந்த தந்தைக்கு மகன் நூதன மரியாதை!
  5. டாடா டிகோர் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!
Most Read Articles
English summary
6 SOLID reasons to buy AMT cars like the Maruti Swift, Tata Tiago & more. Read in Tamil
Story first published: Wednesday, June 13, 2018, 17:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X