கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

2018ம் ஆண்டில் 6 மாதங்கள் உருண்டோடி விட்டன. இந்த அரையாண்டு காலத்தில், இந்திய மார்க்கெட்டில் பல அற்புதமான கார்கள் லான்ச் செய்யப்பட்டுள்ளன.

By Arun

2018ம் ஆண்டில் 6 மாதங்கள் உருண்டோடி விட்டன. இந்த அரையாண்டு காலத்தில், இந்திய மார்க்கெட்டில் பல அற்புதமான கார்கள் லான்ச் செய்யப்பட்டுள்ளன. எனினும் ஆண்டின் 2வது பாதியில் இன்னும் பல அதிமுக்கியமான கார்களை இந்திய மார்க்கெட் காணவுள்ளது. விரைவில் லான்ச் செய்யப்படவுள்ள அத்தகைய கார்கள் குறித்த எதிர்பார்ப்பு ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. அந்த கார்கள் தொடர்பான விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

ஹுண்டாய் சாண்ட்ரோ

லான்ச் எதிர்பார்க்கப்படும் மாதம்-ஜுலை/ஆகஸ்ட் 2018

இந்தியாவில் ஏஎச்2 என பெயரிடப்பட்டுள்ள இந்த கார், விற்பனையில் சக்கை போடு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ட்ரி லெவல் கார் செக்மெண்டில், மாருதி ஆல்டோ மற்றும் ரெனால்டு க்விட் ஆகிய கார்களுக்கு ஹுண்டாய் சாண்ட்ரோ ஏஎச்2 கடும் போட்டியாக விளங்கும்.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

தற்போது கைவிடப்பட்ட மாடலான ஹுண்டாய் ஐ10 பிளாட்பார்மில், சாண்ட்ரோ ஏஎச்2 வடிவமைக்கப்படுகிறது. இதில், 1.1 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹுண்டாய் ஐ10 காரில், அந்த இன்ஜினுடன்தான் விற்பனை செய்யப்பட்டது.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

அதிக உயரமான நபர்களுக்காக வடிவமைக்கப்படும் டால் பாய் டிசைனை ஹுண்டாய் சாண்ட்ரோ ஏஎச்2 ஹேட்ச்பேக் கார் தக்கவைத்து கொள்ளும் என தெரிகிறது. மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்களுடன் இந்த கார் விற்பனைக்கு வரலாம்.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

ஹூண்டாய் இயான் மற்றும் கிராண்ட் ஐ10க்கு இடைப்பட்ட நிலையில், சாண்ட்ரோ ஏஎச்2 இருக்கும். ஃப்ரெஸ் ஸ்டைலில் களமிறக்கப்படவுள்ள இந்த காரின் அடிப்படை வேரியண்ட்டின் விலை 3 லட்ச ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

ஜுப் காம்பஸ் டிரெய்ல்ஹவாக்

லான்ச் எதிர்பார்க்கப்படும் மாதம்-ஜுன்/ஜுலை 2018

ஜுப் காம்பஸ் கார், லான்ச் செய்யப்பட்ட உடனேயே அதிக அளவிலான வாடிக்கையாளர்களை கைப்பற்றியது. இதனால் புகழ்பெற்ற எஸ்யூவி காரான ஜுப் காம்பஸின் டிரெய்ல்ஹவாக் வெர்ஷனையும் விற்பனைக்கு கொண்டு வர அமெரிக்க நிறுவனமான ஜுப் திட்டமிட்டுள்ளது.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

ரெகுலர் வெர்ஷனை காட்டிலும், லோ ரேஞ்ச் நான்கு வீல் டிரைவ், புதிய ராக் மோடு உள்ளிட்ட வசதிகளால், டிரெய்ல்ஹவாக் வெர்ஷன் அதிக திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கும், டீலர்களுக்கும் இந்த கார் ஏற்கனவே காட்சிபடுத்தப்பட்டு விட்டது.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

ஜுப் காம்பஸ் டிரெய்ல்ஹவாக் காரில், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் ஜுப் காம்பஸ் டிரெய்ல்ஹவாக் விற்பனைக்கு வரவுள்ளது.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

மஹேந்திரா யு321

லான்ச் எதிர்பார்க்கப்படும் மாதம்- செப்டம்பர் 2018

இந்தியாவின் ப்ரீமியம் எம்யூவி காராக, மஹேந்திரா யு321 திகழும். இதன் உருவத்தை மறைத்து, இந்திய சாலைகளில் பல முறை சோதனை செய்து பார்க்கப்பட்டு விட்டது. மாருதி எர்டிகா, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா உள்ளிட்ட கார்களுக்கு, மஹேந்திரா யு321 போட்டியாக விளங்கும்.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

மோனோகோயிக் பாடி உடன், எல்இடி டிஆர்எல், ப்ரொஜெக்டர் ஹெட்லாம்ப், பின்பக்க ஏசி வென்ட் என பல ஆர்வகரமான வசதிகளுடன் மஹேந்திரா யு321 விற்பனைக்கு வரவுள்ளது.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

மஹேந்திரா யு321 காரில், புதிய 1.6 லிட்டர் எம்பால்கன் டீசல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. ஸ்யாங்யங் மோட்டார் கம்பெனியுடன் இணைந்த உருவாக்கப்பட்டுள்ள இந்த இன்ஜின், அதிகபட்சமாக 125 பிஎச்பி பவரையும், 305 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

இதுதவிர 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் மஹேந்திரா யு321 காரில் இருக்கும். இது 163 பிஎச்பி பவரை உருவாக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் என 2 ஆப்ஷன்களும் இந்த காரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

மாருதி எர்டிகா

லான்ச் எதிர்பார்க்கப்படும் மாதம்- ஆகஸ்ட் 2018

இந்தோனேஷிய மார்க்கெட்டில், புதிய எர்டிகா காரை சுசூகி நிறுவனம் சமீபத்தில் லான்ச் செய்தது. அதே கார்தான் இந்திய மார்க்கெட்டில், விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்விப்ட மற்றும் டிசையர் கார்களை போல், புதிய எர்டிகா காரும் ஹார்ட்டெக்ட் பிளாட்பார்மில்தான் வடிவமைக்கப்படுகிறது.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

ஆனால் டொயோட்டா இன்னோவா காரை விட சிறியதாகவே இருக்கும். 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் என 2 இன்ஜின் ஆப்ஷன்களும் புதிய எர்டிகா எம்பிவி காரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

டாட்டா டிகோர் ஜேடிபி

லான்ச் எதிர்பார்க்கப்படும் மாதம்- ஆகஸ்ட் 2018

டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில், டிகோர் ஜேடிபி செடான் காரை டாட்டா நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. தனிச்சிறப்பு வாய்ந்த கார்களை தயாரிப்பதற்காக ஜெயம் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்துடன் டாட்டா கைகோர்த்துள்ளது. இந்த 2 நிறுவனங்களின் கூட்டு முயற்சியில்தான் டாட்டா டிகோர் ஜேடிபி உருவாகியுள்ளது.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் மிகவும் மலிவான ஹாட் செடான் காராக டாட்டா டிகோர் ஜேடிபி இருக்கும். லோயர்டு சஸ்பென்ஸன், புதிய ஏர் டம்கள், பானட்டில் ஏர் ஸ்கூப்கள், புதிய ஸ்மோக்டு ஹெட்லேம்ப்கள், பாடி கிட் ஆகிய ஆப்ஷன்களுடன் டாட்டா டிகோர் ஜேடிபி அறிமுகம் செய்யப்படுகிறது.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

பாடி கிட்டானது சைடு ஸ்கிர்ட், ரியர் டிப்யூஸர் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். டாட்டா நெக்ஸான் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின்தான் டிகோர் ஜேடிபி காரிலும் இருக்கும். இது 108 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் கிடைக்கும்.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

டாட்டா டியாகோ ஜேடிபி

லான்ச் எதிர்பார்க்கப்படும் மாதம்- ஆகஸ்ட் 2018

டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில், டிகோர் ஜேடிபி உடன் சேர்த்து டியாகோ ஜேடிபி காரை டாட்டா நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த கார் லான்ச் செய்யப்படும்போது, இந்திய மார்க்கெட்டில் இதுதான் மிகவும் மலிவான ஹாட் ஹேட்ச்பேக் காராக இருக்கும்.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

டியாகோ ஜேடிபி கார் முதல் முறையாக சாலையில் சோதனை செய்து பார்க்கப்பட்ட செய்திகள், கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்தான் வெளியாயின. டாட்டா நெக்ஸானில் உள்ள அதே 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின்தான் டியாகோ ஜேடிபி காரிலும் பொருத்தப்படுகிறது. இது 108 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

ஆனால் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டும்தான் டியாகோ ஜேடிபி கார் கிடைக்கும். எனினும் டியாகோவின் ரெகுலர் வெர்ஷனில் இருந்து வேறுபடுத்தி காட்டுவதற்காக நியூ ஏஜ் பாடி கிட் வழங்கப்படவுள்ளது.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

மஹேந்திரா எஸ்201

லான்ச் எதிர்பார்க்கப்படும் மாதம்- அக்டோபர்/நவம்பர் 2018

ஸ்யாங்யங் டிவோலி காரை அடிப்படையாக வைத்து, இந்திய மார்க்கெட்டுக்கு ஏற்ற எஸ்201 காம்பேக்ட் எஸ்யூவி காரை மஹேந்திரா உருவாக்கி வருகிறது. இந்த காரும், இந்திய சாலைகளில் பல முறை சோதனை செய்து பார்க்கப்பட்டு விட்டது.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

ஸ்யாங்யங் மோட்டார் கம்பெனியில் இருந்து இந்தியாவில் லான்ச் செய்யப்படும் மஹேந்திரா சின்னத்துடன் கூடிய முதல் கார் என்ற சிறப்பை எஸ்201 பெறுகிறது. ஃபோர்டு எகோஸ்போர்ட், மாருதி விட்டாரா ப்ரீஸா, டாட்டா நெக்ஸான் உள்ளிட்ட கார்களுக்கு இது போட்டியாக விளங்கும்.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

க்வாண்டோ, நுவோஸ்போர்ட், டியூவி 300 ஆகிய கார்களுக்கு பிறகு, இந்த செக்மெண்டில் மஹேந்திரா நிறுவனம் லான்ச் செய்யும் 4வது கார் எஸ்201. இந்த கார் மோனோகோயிக் சேஸிஸ் உடன் விற்பனைக்கு வருகிறது. பெட்ரோல், டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களும் இருக்கும்.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

மஹேந்திரா எஸ்201 காரில் பொருத்தப்படும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின், 140 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். அதே நேரத்தில் டீசல் வேரியண்ட்களில் 1.5 லிட்டர் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகபட்சமாக 125 பிஎச்பி பவரை உருவாக்கும்.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

ஆனால் மஹேந்திரா எஸ்201 காரில் அனைத்து வீல் டிரைவ் (AWD) ஆப்ஷன் இருக்காது. ஹுண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்களுடன் போட்டியிடும் வகையில், இதன் அடுத்தகட்ட வெர்ஷன்களை 2019ம் ஆண்டில் மஹேந்திரா நிறுவனம் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்

தற்போது உடனடியாக கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு, மேற்கண்ட பட்டியலில் உள்ள கார்கள் பிடித்திருந்தால், ஒரு சில நாட்கள் காத்திருந்து அவற்றையே வாங்கி கொள்ள முடியும்.

Most Read Articles
English summary
7 most AWAITED cars of 2018; From Hyundai Santro to Jeep Compass Trailhawk. read in tamil.
Story first published: Monday, June 4, 2018, 12:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X