செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போறீங்களா? இந்த பட்டியல் கார்களை படித்து பாருங்கள்

பெரு நகரங்களில் செண்ட் ஹேண்ட் கார் வாங்கபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. பலர் புதிய கார் வாங்கவதை விட பயன்படுத்திய கார்களை வாங்கவே விரும்புகின்றனர்.

By Balasubramanian

சமீபகாலமாக கார்களின் வருகை அதிகரித்துள்ளது. பலர் புதிதாக கார் வாங்க துவங்கிவிட்டனர். இதுவரை கார் வைத்திருக்காத பலர் புதிய கார்களை வாங்கினாலும், ஏற்கனவே கார் வைத்திருப்பவர்கள் புதிய கார்களை வாங்கும் மார்கெட்டும் இங்கு இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

இப்படியாக புதிய கார் வாங்குபவர்கள் தங்களின் பழைய கார்களை விற்பனை செய்து விடுகின்றனர். இவ்வாறு செண்ட் ஹேண்ட் கார்களுக்கான சந்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொழிற் முதலில் சிறு தொழில் செய்து வருபவர்கள் மட்டும் செய்து வந்த நிலையில் தற்போது சில கார்பரேட் கம்பெனிகளும் இதில் இறங்கி விட்டனர்.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

பெரு நகரங்களில் செண்ட் ஹேண்ட் கார் வாங்கபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. பலர் புதிய கார் வாங்கவதை விட பயன்படுத்திய கார்களை வாங்கவே விரும்புகின்றனர்.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

மாருதி சுஸூகி ஆல்டோ கே10

இந்தியாவில் விற்பனையாகும் அதிகமான கார்களில் இதுவும் ஒன்று அதன் காரணமாகவே ஷோரூம் விலையில் ரூ 3.30 லட்சத்தில் இருந்து ரூ 4.14 லட்சங்கள் வரை விற்பனையாகும் கார்கள், செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் ரூ 1.60 லட்சத்தில் விற்பனையாகிறது. கிட்டத்தட்ட பாதிவிலையில் விற்பனையாகிறது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

20104ம் ஆண்டு இந்த கார் புதிதாக மாற்றங்கள் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது பெட்ரோல் , சிஎன்ஜி பியூல் ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

இந்த கார் இன்ஜினை பொருத்தவரை 998 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 6000 ஆர்.பி.எம்மில் 67 பிஎச்பி பவரையும், 3500 ஆர்பிஎம்மில் 90 என் எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் வேரியன்ட் லிட்டருக்கு 24.07 கி.மீ. மைலேஜூம், சிஎன்ஜி வேரியன்ட் கிலோவிற்கு 32.26 கி.மீ. மைலேஜூம் கிடைக்கிறது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

மாருதி சுஸூகி ஸிப்ட்

மாருதி சுஸூகி ஸிப்ட் கார் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார்களாக இருக்கிறது. அதன் காரணமாகவே செகண்ட் ஹேண்ட் கார் சந்தையில் இந்த கார் அதிகமாக இருக்கிறது. மாருதி சுஸூகியை பொருத்தவரைக்கு இந்த கார்களுக்கான சர்வீஸ் சிறப்பாக இருக்கிறது. மாருதி சுஸூகி நிறுவனம் மாதம் தோறும் சராசரியாக 15000 கார்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்கிறது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

கடந்த 2005ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல் தொடர்ந்து நல்ல விற்பனையிலேயே இருந்து வருகிறது. தற்போது இந்த கார் மூன்றாம் தலை முறை மாற்றங்களை பெற்று விற்பனையாகி வருகிறது. மூன்றாவது தலைமுறை கார் கடந்த பிப். மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தான் நடந்தது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் கே சீரீஸ் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 83 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதன் டீசல் வேரியன்ட் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் இன்ஜினுடன் 75 பிஎஸ் பவர் மற்றும் 190 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

இதில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன்களுடன் கியர் பாக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் வேரியன்ட் கார் லிட்டருக்கு 22 கி.மீ. மைலேஜூம், டீசல் வேரியன்ட் கார் 28.4 கி.மீ. மைலேஜூம் கிடைக்கிறது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

ஹோண்டா சிட்டி

1995ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கார் இன்று ம் நல்ல விற்பனையை பெற்று வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு கடைசியாக இந்த காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் பெட்ரோல், மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

இதில் பொறுத்தப்பட்டுள்ள ஐ விடெக் பெட்ரோல் இன்ஜின் கார் 119 பிஎச்பி பவரையும், 145 என் எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. ஐ டிடெக் டீசல் இன்ஜின் 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

தற்போது மார்கெட்டில் ரூ8.72 லட்சம் முதல் ரூ 13.82 லட்சம் வரை விற்பனையாகி வரும் இந்த ஹோண்டா சிட்டி கார் செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் ரூ 3.75 லட்சத்தில் விற்பனையாகி வருகிறது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

ஹூண்டாய் எலைட் ஐ20

2018ம் ஆண்டு மக்கள் விரும்பும் கார்களில் ஐ20 காரும் உள்ளடங்கும். இந்த கார் முதன் முதலில் 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய எலைட் ஐ20 கார் கடந்த 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது பரபரப்பாக விற்பனையாகி வருகிறது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

இந்த கார் 14 வெர்ஷன்களில் வெளியாகிறது. அதில் 7 பெட்ரோல் வேரியன்ட், 7 டீசல் வேரியன்ட், பெட்ரோல் கார் 1.2 லிட்டர் கப்பா டுயல் விடிவிடி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டா்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

டீசல் வெர்ஷனை பொருத்தவரை 1.4 லிட்ட யூ2சிஆர்டிஐ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 90 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. புதிய பேஸ் லிப்ட் மாடல் 1.4 லிட்டர் டூயல் விடிவிடி பெட்ரோல் இன்ஜின் உடன் 99 பிஎச்பி பவரும், 4 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டார்க் கன்டவெர்ட்டருடன் வருகிறது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

ரெனால்ட் க்விட்

பிரான்ஸ் நாட்டு நிறுவனமான ரெனால்ட் நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு க்விட் காரை அறிமுகம் செய்தது. இந்த கார் இந்தியாவில் டாப் செல்லிங் கார் ரகத்தில் முதல் 10 இடங்களில் இருக்கிறது. இந்த கார் சிறந்த ரீசேல் வேல்யூ உள்ள காராக இருக்கிறது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

ரெனால்ட் க்விட் கார் 799 சிசி பெட்ரோல் இன்ஜின் உடன் 5678 ஆர்பிஎம்மில் 53 பிஎச்பி பவரும், 4400 ஆர்பிஎம்மில் 72 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த கார் லிட்டருக்கு 25.17 கி.மீ. மைலேஜை வழங்ககூடியது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

இந்த காரின் விலை ரூ4.30-4.60 லட்சம்வரை இருக்கிறது. இது செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் ரூ2.67 லட்சம் முதலே விற்பனைக்கு உள்ளது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ் கார் சப் செடன் ரக கார் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கார். இதில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் வேரியன்ட்கள் விற்பனையாகின்றன.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

இந்த கார் கடந்த 2013ம் ஆண்டு வெளியானது. இந்தகார் மாருதி சுஸூகி டிசையர், ஹூண்டாய் எக்ஸென்ட், ஃபோர்டு அஸ்பயர், டாடா டிகோர், ஃபோக்ஸ் வாகன் போலோ ஆகிய கார்களுக்கு இந்த கார் போட்டியாக திகழ்கிறது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

இந்த கார் 1.2 லிட்டர் ஐ விடெக் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் ஐ டிடெக் டீசல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. பெட்ரோல் இன்ஜின் 90 பிஎஸ் பவரைஎம், 110 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

டீசல் இன்ஜின் 100 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின்கள் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் பெட்ரோல் இன்ஜினில் லிட்டருக்கு 19.5 கி.மீ. மைலேஜூம், டீசல் இன்ஜின் லிட்டருக்கு 27.4 கி.மீ. மைலேஜூம் கிடைக்கிறது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

டொயோட்டா எட்டியோஸ் லிவா

டொயோட்டா நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு எட்டியோ செடன் ரக கார்களை அறிமுகப்படுத்தியது. இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இதன் ஹெட்ச் பேக் வெர்ஷனை 2011ம் ஆண்டே அறிமுகப்படுத்தியது. இந்த கார் மாருதி சுஸூகி ஸிப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் நிஸான் மைக்ரா ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாக திகழ்கிறது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் 79 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 89 பிஎச்பி பவரையம், 132 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியல்

இதன் டீசல் இன்ஜின் 67 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த அனைத்து இன்ஜின்களும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்தகிள்

Most Read Articles
English summary
7 of the Best Resale Value Cars in India.Read in Tamil
Story first published: Wednesday, June 20, 2018, 19:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X